search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகள் மூலம்  பெங்களூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?- பயணிகள் எதிர்பார்ப்பு
    X

    பிலாஸ்பூர் ரெயில் பெட்டி.

    பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகள் மூலம் பெங்களூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?- பயணிகள் எதிர்பார்ப்பு

    • தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளை இணைத்து பிலாஸ்பூர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடித்து விட்டு நெல்லை பணிமனையில் 3 நாட்கள் ரெயில் காலியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் பிலாஸ்பூருக்கு(வண்டி எண்: 22620) வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    பிலாஸ்பூர் ரெயில்

    இந்த ரெயிலானது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.25 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா வழியாக தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளை இணைத்து திங்கட்கிழமை இரவில் பிலாஸ்பூருக்கு சென்றடையும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

    மறுமார்க்கமாக இந்த ரெயிலானது (வண்டி எண்: 22619) ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் பிலாஸ்பூரில் இருந்து காலையில் புறப்பட்டு அதே வழித்தடங்களின் வழியாக வியாழக்கிழமை அதிகாலையில் 3.30 மணிக்கு நெல்லைக்கு வந்தடைகிறது. இந்த ரெயிலில் ஒரு 2 அடுக்கு ஏசி பெட்டியும், 5 மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும், 9 படுக்கை வசதி பெட்டிகளும், 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளும், 2 லக்கேஜ் மற்றும் மேலாளர் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

    மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்

    இதில் படுக்கை வசதி பெட்டியில் மொத்தம் 720 இருக்கைகள் உள்ளன. அதேபோல் 4 முன்பதிவு இல்லாத பெட்டியில் சுமார் 500 பேர் வரை பயணிக்கலாம். மூன்றடுக்கு ஏசி பட்டியில் மொத்தம் 360 பேர் வரை பயணிக்கலாம். 2 அடுக்கு ஏசி பெட்டியில் 52 பேர் பயணம் செய்யலாம். மொத்தம் இந்த ெரயிலில் சுமார் 1,500 பேருக்கும் மேலானவர்கள் இதில் பயணம் செய்ய முடியும்.

    இந்த ரெயில் சேவையானது வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நெல்லை பணிமனையில் பராமரிப்பு பணிகள் முடித்து விட்டு காலியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த காலி ரெயில் பெட்டிகளை கொண்டு தான் கடந்த மாதம் வரை நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது நேற்று முன்தினம் முதல் மேட்டுப்பாளையம் ரெயில் சேவை வியாழக்கிழமை புறப்படுவதற்கு பதிலாக, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்கிறது.

    காலி பெட்டிகள்

    இதன் காரணமாக இந்த வாரத்தில் இருந்து இந்த ெரயிலானது 3 நாட்கள் காலியாக நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் இந்த ரெயில் பெட்டிகளை கொண்டு நெல்லையில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும், தென்காசி, மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக பெங்களூருக்கு புதிய வாராந்திர சிறப்பு ெரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று தென் மாவட்ட ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    அதாவது ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குள் செல்லுமாறும், மறு மார்க்கமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு சனிக்கிழமை காலை 9 மணிக்கு வந்தடையும் வகையில் இந்த ெரயில் சேவையை இயக்கலாம்.

    மேலும் சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரெயிலை 3 மாதங்களுக்கு இயக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து இந்த சேவைகளை இயக்க வலியுறுத்த வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×