என் மலர்
நீங்கள் தேடியது "New Execcutives"
- வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் பொன் தங்கதுரை தலைமையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
- செயலாளராக ஜெய்கணேஷ் மற்றும் புதிய நிர்வாகிகளும் பதவி யேற்றனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சௌபாக்கிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் பொன் தங்கதுரை தலைமையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினரான ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை மற்றும் கவுரவ விருந்தினரான வருங்கால மாவட்ட ஆளுநர் தினேஷ் பாபு ஆகியோருக்கு ஏலக் காய் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரமணி சுப்பிரமணியம், சந்திரா சண்முகநாதன், டாக்டர் பிந்து குமார், பிரபா நவமணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். புதிய ரோட்டரி கிளப் தலைவராக பதவியேற்ற சுதீர் கந்தனுக்கு முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர் பொன் தங்கதுரை தனது கழுத்து ஆபரணத்தை அணிவித்து வாழ்த்து தெரி வித்தார். செயலாளராக ஜெய்கணேஷ் மற்றும் புதிய நிர்வாகிகளும் பதவி யேற்றனர்.
விழாவில் நலத்திட்ட உதவிகளான கிளட்ச் ஸ்டிக், வீல் சேர், சொட்டு நீர் பாசனத்திற்கு தேவையான பொருட்கள், ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 40 இன்ச் அளவி லான மானிட்டர், தையல் எந்திரம், சிவப்பிரகாஷ் மாணவனுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, சி.எம்.எஸ். விடுதிக்கு கலர் பிரிண்டர் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி தகுதி ஊக்க பரிசுகள் என பல்வேறு நலத்திட்டங்கள் வழ ங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் ரோட்டரி, லயன்ஸ் சங்க நிர்வாகிகள், வியாபாரி சங்க தலைவர்கள், செய லாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.






