search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை மார்க்கெட்டில் தக்காளி, மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்பனை- இஞ்சி விலை ரூ.200-ஐ தாண்டியது

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பெரும்பாலான காய்கறிகளின் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையானது.
    • மிளகாய் நேற்றைய விலையில் இருந்து குறைந்து கிலோ ரூ.90-க்கு விற்பனையானது.

    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் பெரும்பாலான காய்கறிகளின் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையானது. உள்ளூர்களில் இருந்து காய்கறிகள் வராத தால், வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்வதால் ஏற்படும் செலவு தான் காய்கறிகளின் விலையேற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மொத்த மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.135 வரை விற்பனையானது. இதனால் வியாபாாரிகள் அதனை கடைகளுக்கு வாங்கி சென்று சில்லறை விற்பனையாக கிலோ ரூ.150 வரை விற்றனர். மேலும் மிளகாய் கிலோ ரூ.100 வரையிலும், பீன்ஸ் ரூ.120-க்கும் விற்பனையான நிலையில் இன்று அவற்றின் விலையும் சற்று குறைந்துள்ளது. இன்று கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்டது.

    இன்றைய நிலவரப்படி டவுன் நயினார்குளம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மிளகாய் நேற்றைய விலையில் இருந்து குறைந்து ரூ.90-க்கு விற்பனையானது. பீன்ஸ் விலையும் ரூ.80 முதல் ரூ.100 என்ற நிலையில் விற்கப்பட்டது. பாவூர்சத்திரம் மார்க்கெட்டி லும் காய்கறிகள் வரத்து இருந்ததால் அங்கும் விலை சற்று குறைய தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து நயினார்குளம் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரி கணேசன் கூறுகையில், பாவூர்சத்திரம், மானூர் களக்குடி, உக்கிரன்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தற்போது தக்காளி வர ஆரம்பித்துள்ளது. இதனால் இனி தக்காளியின் விலை சற்று குறைய தொடங்கும் என்று நம்பலாம்.

    அதே நேரத்தில் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தக்காளி வரத்து அதிகமாகவே உள்ளது. எனவே இன்று காய்கறிகள் விலை சற்று குறைந்துள்ளது. கேரட்-ரூ.70, முட்டை கோஸ்-28, பீட்ரூட்-50, அவரை-70, உருளை-25, கத்தரி-45 என்ற விலையில் விற்பனையாகிறது என்றார்.

    மார்க்கெட் வியாபாரி அழகேசன் கூறுகையில், அவரைக்காய் ஒட்டன்சத்திரம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சற்று அதிகமாக வர ஆரம்பித்துள்ளது. நேற்று மிளகாய் ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது.

    அதே நேரம் உருட்டு வகையான மிளகாய் இன்று ரூ.95-க்கு விற்பனையானது. நேற்று இதன் விலை ரூ.135-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.40 வரை குறைந்துள்ளது. அதேபோல் நேற்று 30 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.2,900 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.2,500 ஆக குறைந்துள்ளது என்றார்.

    பாளை மார்க்கெட்

    அதே நேரத்தில் பாளை மார்க்கெட்டில் இன்று தக்காளி, மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி மொத்த வியாபாரிகளுக்கு ரூ.90 முதல் ரூ.100 வரையும், சில்லறைக்கு ரூ.110-க்கும் விற்பனை ஆகிறது.

    இஞ்சி விலை ெமாத்த வியாபாரிகளுக்கு கிலோ ரூ.200 ஆகவும், சில்லறைக்கு ரூ.220 வரையும் விற்கப்படுகிறது. இதேபோல பீன்ஸ், அவரைக்காய் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது என்றார்.

    Next Story
    ×