என் மலர்
திருநெல்வேலி
- சில பஸ்களில் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வார்கள்.
- வேனுக்குள் அளவுக்கு அதிக சத்தமாக பாடல்களை ஒலிக்க செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.
நெல்லை:
நெல்லை பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பின்னர் அரசு பஸ்களில் ஏறுவதற்காக மாணவிகள் கூட்டம் அலைமோதும். அப்போது சில பஸ்களில் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வார்கள். இதை யடுத்து அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு பஸ்சுக்குள் ஏறி சென்று பயணிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் பஸ்களில் கூட்டம் அதிக மாக இருப்பதாலும், குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாலும் தென்காசி மாவட்டத்தில் இருந்து வரும் மாணவிகள் தனியார் வேன்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு மாணவிகளை ஏற்றி வரும் வேன்கள் மிகுந்த வேகத்து டன் வருவதாகவும், வேனுக்குள் அளவுக்கு அதிக சத்தமாக பாடல்களை ஒலிக்க செய்வதாகவும் சமூக ஆர்வ லர்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும் வேனுக்குள் போதிய இருக்கைகள் உள்ள போதிலும் மாணவி கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யாமல், படிக்கட்டுகளில் நின்று கொண்டும், பாடல்களுக்கு ஆடிக்கொண்டும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். எனவே மாணவிகளை ஏற்றி செல்லும் வாகன ங்களின் டிரைவர்கள், மாணவிகளை இருக்கையில் அமரச்செய்து கல்லூரிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுப்ரமணியன் பவர் பிளாண்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
- தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகன் சுப்ரமணியன் (வயது 38).
இஸ்ரோ மைய ஊழியர்
இவர் பணகுடியை அடுத்த மகேந்திரகிரி மலையில் அமைந்திருக்கும் மத்திய அரசின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள பவர் பிளாண்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று வேலைக்கு சென்று விட்டு நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வள்ளியூர் பைபாஸ் நான்கு வழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை நீதிமன்றம் எதிரே, நெல்லை சந்தி விநாயகர் கோவில் அருகே ச.ம.க. சார்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
- அத்திமேட்டில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
நெல்லை:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் 70-வது பிறந்த நாளையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பாக கட்சி அலுவலகத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டா டப்பட்டது.
மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணை செயலாளர் நட்சத்திர வெற்றி முன்னிலை வகித்தார். இதே போல் பாளை செந்தில்நகரில் பாளை சட்டமன்ற தொகுதி செயலாளர் ராகவன் மற்றும் பாளை பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் கட்சி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து முதியவர் இல்லத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டது. நெல்லை நீதிமன்றம் எதிரே, நெல்லை சந்தி விநாயகர் கோவில் அருகே ச.ம.க. சார்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் டவுன் அத்திமேட்டில் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மந்திர மூர்த்தி ஏற்பாட்டில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைசெயலாளர்கள் வெங்கடேஷ், சின்னத்துரை, மாவட்ட பொருளாளர் சரத்ஆனந்த், பாளை பகுதி துணை செயலாளர்கள் நாராயணன், பொன்ராஜ், மாவட்ட மாணவரணி ராஜ்கண்ணன், துணை செயலாளர் மூர்த்தி, இளைஞரணி செயலா ளர்கள் வினோத், அந்தோணி, தகவல் தொழில் நுட்ப அணி மகாராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மணி, பவுல் ஆதித்தன், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இளஞ்செழியன், வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, வக்கீல் அணி இசக்கிமுத்து, மகளிர் அணி லட்சுமி, உமா, பிரியா, மாவட்ட செயலாளர் பூமணி, முத்துலட்சுமி, லட்சுமி, பேச்சிமுத்து, கல்யாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது.
- விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த மாதம் 20-ந் தேதி மதுரை வலையங்குளம் எழுச்சி மாநாடு திடலில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
ஆலோசனை கூட்டம்
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட அ.தி.மு.க சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், ஏ.கே. சீனிவாசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆவரைகுளம் பால்துரை, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்து பாண்டியன், கவுன்சிலர் சந்திரசேகர், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டி யன், மருதூர் ராம சுப்பிர மணியன், கே.பி.கே.செல்வ ராஜ், அந்தோணி அமல ராஜா, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, சண்முக குமார், காந்தி வெங்கடாசலம், ஜெனி, வக்கீல் ஜெயபாலன், நெல்லை மாவட்ட ஆவின் பாலக தலைவர் கட்டளை அன்பு, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட பொரு ளாளர் காளிதாஸ் பாண்டி யன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், பகுதி மாணவரணி செய லாளர் ஜெய்சன் புஷ்பராஜ் , பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கு நன்றி தெரிவிப்பது, வருகிற 20-ந்தேதி தி.மு.க. அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து நடத்த உள்ள ஆர்ப்பாட்டம், மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
- நந்தினி மாணவிகள் தலைவராகவும், ஐஸ்வர்யா துணைத் தலைவராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
- வேலைவாய்ப்பு மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. புஷ்பராஜ் கூறினார்.
நெல்லை:
நெல்லை தாழையூத்து அருகே உள்ள சங்கர் நகர் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்கள் முன்னேற்றப் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. மாணவி ரோகினி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சங்கர சுப்ரமணியன் கலந்து கொண்டு மகளிர் முன்னேற்றப் பிரிவை தொடங்கி வைத்தார்.
விழாவில் நந்தினி மாணவிகள் தலைவராகவும், ஐஸ்வர்யா துணைத் தலைவராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அனைத்து மாணவிகளும் மகளிர் எழுச்சி பாடலை பாடினர். நிர்வாக அதிகாரி சீனிவாசன் வாழ்த்தி பேசினார். விழாவில் தாழையூத்து டி.எஸ்.பி. புஷ்பராஜ் கலந்து கொண்டு பேசுகையில், வேலைவாய்ப்பு மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மறைக்கப்பட்ட பிரச்சனைகள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், பாலியல் குற்றங்க ளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது மற்றும் குண்டர் சட்டங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.
பின்னர் தாழையூத்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, சமூக அச்சுறுத்தல்கள், மொபைல் மிரட்டல்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சமுதாயத்தில் சுயமரியாதை பெறுவதை வலியுறுத்தியும் பேசினார்.
மேலும் மீட்பு எண் 1930 குறித்து எடுத்து கூறினார். அப்போது மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி விளக்கம் அளித்தார். முன்னதாக நூலகர் விஜயலட்சுமி விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். மாணவி சந்தியா நன்றி கூறினார்.
- இன்று அதிகாலையில் 2-வது மாடியில் இருந்து கரும்பு புகை எழுந்துள்ளது.
- தீ விபத்தில் கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.
நெல்லை:
பாளை பகுதியில் தலைமை தபால் நிலையம் அமைந்துள்ளது. இந்த தபால் நிலையம் 3 மாடிகளுடன் செயல்பட்டு வருகிறது.
தரைத்தளத்தில் தபால் நிலையமும், முதல் தளத்தில் சிக்கன நாணய சங்கம், 2-வது தளத்தில் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட வற்றுடன் இந்த அலுவலகம் செயல்படுகிறது.
இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலையில் 2-வது மாடியில் இருந்து கரும்பு புகை எழுந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாளை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்புத் வீரர்கள் தபால் நிலையம் அமைந்துள்ள இடத்துக்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 2-வது தளத்தில் இருந்த கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது.
சம்பவம் தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏதேனும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சந்திப்பு பகுதியில் ஒரு மருந்து கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் உடனடியாக வந்து தீயணைப்பு வீரர்கள் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- தேவேந்திரன் நேற்று மாவடியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
- காயமடைந்த தேவேந்திரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மாவடி நடுத்தெருவை சேர்ந்த வர் தேவேந்திரன் (வயது53). விவசாயி. இவரு க்கும், கொய்யா மாவடியை சேர்ந்த கண்ணன் (32), டார்வின் (32) ஆகி யோர் களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் தேவேந்திரன் நேற்று மாவடியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த கண்ணன், டார்வின் ஆகியோர் தேவேந்திரனை அவதூறாக பேசி, தாக்கினர்.
இதில் காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக கண்ணன், டார்வின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் தேடி வருகின்றனர்.
- தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக பாப்பாக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இடைகால், பள்ளக்கால் பொதுக்குடி உள்பட சுற்று வட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக பாப்பாக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில் பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம், தலைமை காவலர் முத்துராஜ் ஆகியோர் ஒரு வாரத்திற்கு மேலாக பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது லாரியில் சுமார் 28 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்த காமராஜ் (வயது 45) மற்றும் மினி லாரி டிரைவர் குருவன்கோட்டை அம்பலத்தார் தெருவை சேர்ந்த சிவன் பெருமாள்(38) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்து, குட்கா மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
கடந்த சில மாதங்களாக லோடு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் பள்ளக்கால் பொதுக்குடி, இடைகால், அம்பை என சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் இவர்கள் 2 பேரும் குட்கா விநியோகம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
- தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் குறைந்த வாடகையில் பணி புரியும் இடத்திற்கு அருகாமையில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் மிகவும் அவசியமான தேவை உள்ளது.
- பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பை அமைத்துள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் குறைந்த வாடகையில் பணி புரியும் இடத்திற்கு அருகாமை யில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் மிகவும் அவசியமான தேவை உள்ளது.
மகளிர் விடுதிகள்
இத்தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் அரசு, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்குக்காக மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது.
மேலும் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பை அமைத்துள்ளது.
முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் பாளை வீரமா ணிக்கபுரத்தில் புதுப்பிக்க ப்பட்ட மகளிர் விடுதியை இன்று காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையொட்டி நெல்லை யில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார்.
கலந்து கொண்டவர்கள்
தொடர்ந்து மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ உள்ளிட்டவர்கள் குத்து விளக்கு ஏற்றினர். மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, ஒன் ஸ்டாப் சென்டர் பொன்மு த்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விடுதியில் சுத்திகரிக்க ப்பட்ட குடிநீர்வசதி, பாதுகாப்பு வசதி, பொழுதுபோக்கு அறை என பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்ப ட்டுள்ளது. வீரமாணிக்கபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதி ரூ. 45.54 லட்சத்தில் கட்டி முடிக்க ப்பட்டுள்ளது. இவ்விடுதி 60 படுக்கை வசதியுடன் இருவர், நால்வர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
முன்பதிவு
மேலும் www.tnwwhclin என்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத்தன்மை அறிந்து தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கட்டணம் கட்டணம் செலுத்திடும் முறை அறிமுகம் செய்யப்பட்டு பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியினை சொந்த இடங்களை விட்டு வெளியூர்க ளில் தங்கி பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. வருடங்கள், மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிரு நாட்கள் கூட மகளிர் இவ்விடுதிகளில் தங்கிடவும் வசதி செய்யப்பபட்டுள்ளது.
- நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவல கத்தில் 65 அடி உயர தி.மு.க. கொடிக்கம்பம் நிறுவும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்தார்.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவல கத்தில் 65 அடி உயர தி.மு.க. கொடிக்கம்பம் நிறுவும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டு 65 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலை ராஜா, நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மானூர் ஒன்றிய செயலாளர் அருள்மணி, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, மாவட்ட விவசாய அணி பொன்னையா பாண்டியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் நவநீதன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் அலீப் மீரான், அறங்காவலர் குழு உறுப்பினர் வெயிலப்பன் மற்றும் நிர்வாகிகள் முகமது அலி, வசந்தி முருகேசன், வீரபாண்டியன், ஆறுமுக ராஜா, இளைஞரணி மணிகண்டன், ராஜா முகமது, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சாரதா மகளிர் கல்லூரியில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல இயக்ககம் இணைந்து நடத்திய மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
- மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் ராமநாதன் சுகாதாரத்தை எவ்வாறு பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்கினார்.
நெல்லை:
பாளை அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி யில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல இயக்ககம் இணைந்து நடத்திய மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரிச் செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா ஆசியுடனும், இயக்குநர் சந்திரசேகரன் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நலப்பணிகள் இணை இயக்குநர் லதா தலைமை உரை ஆற்றினார்.
மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் ராமநாதன் சுகா தாரத்தை எவ்வாறு பாது காப்பது குறித்த விழிப்பு ணர்வை மாண வர்களுக்கு வழங்கினார்.
மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கனகா, பெண்கள், சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து எடுத்துரைத்தார். கல்லூரி மாணவி ஸ்ரீசங்கினி மக்கள் தொகை பெருக்கமும் வருங்கால இந்தியாவும் என்ற தலைப்பில் தனது கருத்துகளை பகிர்ந்தார். மாவட்ட விரிவாக்க கல்வி யாளர், மாவட்ட குடும்பநல இயக்ககம் ஜெயசித்ரா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களும், பேராசிரி யர்களும் கலந்து கொ ண்டனர். நிகழ்ச்சியின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பொருளியல்துறை மற்றும் வணிக நிர்வாகத் துறை பேராசிரியைகள் இணைந்து செய்திருந்தனர்.
- களக்காடு அருகே உள்ள கீழஉப்பூரணி நடுத்தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி. அதே ஊரை சேர்ந்த பால்ராஜ் (40) என்பவர், பொன்பாண்டியின் மனைவி குறித்து அவதூறு கடிதம் எழுதி உள்ளார்.
- இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழஉப்பூரணி நடுத்தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி (வயது 26). விவசாயி. அதே ஊரை சேர்ந்த பால்ராஜ் (40) என்பவர், பொன்பாண்டியின் மனைவி குறித்து அவதூறு கடிதம் எழுதி அதனை பொன்பாண்டி யின் மோட்டார் சைக்கிளில் வைத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.
தாக்குதல்
இதுபற்றி களக்காடு போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து, சமாதா னம் செய்து வைத்துள்ளனர். சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ், அவரது மகன்கள் பவுல்தாஸ், பவுல் படஸ் ஆகியோர் சேர்ந்து பொன்பாண்டியை தாக்கினர்.
இதனை தடுக்க வந்த வெள்ளப்பாண்டி, பூபதிராஜை யும் தாக்கினர். மேலும் பூபதிராஜை அரிவாளா லும் வெட்டினர். இதுபோல பொன்பாண்டி, பால்துரை மகன் வெள்ளப்பாண்டி மற்றும் 3 பேர் சேர்ந்து பால்ராஜையும், அவரது மகன் பவுல்தாஸையும் கம்பால் தாக்கினர்.
இந்த மோதலில் பொன்பாண்டி, வெள்ளப்பா ண்டி, பூபதி ராஜ், பால்ராஜ், பவுல்தாஸ் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இதுபற்றி இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






