என் மலர்
திருநெல்வேலி
- கச்சேரியை பார்க்க பூலத்தை சேர்ந்த விவசாயி முருகன் சென்றிருந்தார்.
- வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து, முருகனை சரமாரியாக தாக்கினர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு சுடலைமாடசுவாமி கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக இன்னிசை கச்சேரி நடந்தது. கச்சேரியை பார்க்க பூலத்தை சேர்ந்த விவசாயி முருகன் (வயது 45) சென்றிருந்தார். கச்சேரி நடந்து கொண்டிருந்த போது, மூன்றடைப்பை சேர்ந்த வானுமாமலை மகன் முத்துக்குமார், பிச்சைக்கண்ணு மகன் கார்த்திக், பூலத்தை சேர்ந்த இசக்கிபாண்டி மகன் முருகன், முத்துராக்கு மகன் முத்துராஜ் ஆகிய 4 பேரும் ஆட்டம் போட்டனர். இதுசம்பந்தமாக அவர்களுக்கும், முருகனுக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து, முருகனை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துக்குமார் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
- திருவனந்தபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு குற்றாலத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
- 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
களக்காடு:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி சேர்மன் தெருவை சேர்ந்தவர் ஆசிக் அலி. இவரது மகன் சேக் அப்துல்லா(வயது 25).
இவர் வார விடுமுறையை ஒட்டி அப்பகுதியை சேர்ந்த தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த அமீர் அப்பாஸ்(25) உள்பட 5 பேருடன் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
சுற்றுலாவை முடித்து விட்டு செல்லும் வழியில் அவர்கள் குற்றாலம் செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு குற்றாலத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
குமரி-நெல்லை 4 வழிச்சாலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை ஷேக் அப்துல்லா ஓட்டியுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கிருஷ்ணன்புதூர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு சாலையோரத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த 14 டயர் கனரக டிரெய்லர் லாரியின் பின்னால் ஷேக் அப்துல்லா ஒட்டி வந்த கார் மோதியது.
இந்த பயங்கர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் முன்பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த ஷேக் அப்துல்லா மற்றும் அமீர் அப்பாஸ் ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் அதே காரில் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த அகமதுபாஷா, ஆசிம்கான் மற்றும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு இரவு நேர ரோந்து போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் நாங்குநேரி போலீசாரும் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு முன்பக்க இருக்கையில் இறந்த நிலையில் இருந்த ஷேக் அப்துல்லா மற்றும் அமீர் அப்பாஸ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு போதிய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காயம் அடைந்த 4 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரெய்லர் லாரி டிரைவரான மதுரை ஒத்தக்கடை அய்யப்ப நகரை சேர்ந்த லெட்சுமணன்(59) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். லெட்சுமணன் குமரி மாவட்டம் தக்கலையில் இருந்து மின்கம்பங்கள் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்றுள்ளார்.
அப்போது கிருஷ்ணன்புதூர் அருகே லாரியின் டயர் பஞ்சர் ஆகியுள்ளது. இதனால் அவர் சாலையோரத்தில் லாரியை நிறுத்திவிட்டு டயரை கழற்றி உள்ளார். அப்போது தான் லாரியின் பின்புறத்தில் கார் மோதி இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- இன்று மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
- இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலி, மறையுரை, மாலையில் திருயாத்திரை திருப்பலி, நற்கருணை ஆசீர், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
9-ம் திருநாளான நேற்று காலையில் கூத்தன்குழி தியான இல்ல அதிபர் வியான்னி தலைமையில் திருப்பலி நடந்தது. மாலையில் சி.சவேரியார்புரம் பங்குத்தந்தை ரெமிஜியுஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. சோமநாதபேரி பங்குத்தந்தை ஜெகதீஷ் மறையுரையாற்றினார்.
இரவில் புனித அன்னம்மாளின் தேர் பவனி நடந்தது. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. வழிநெடுகிலும் திரளான கிறிஸ்தவர்கள் புனித அன்னம்மாளை வழிபட்டனர்.
10-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு கோட்டார் அசிசி அச்சக மேலாளர் ஜார்ஜ் தலைமையில் முதல் திருப்பலி நடக்கிறது. காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ஆல்பர்ட் ஜான்சன் மறையுரையாற்றுகிறார்.
மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கூடங்குளம் பங்குத்தந்தை அந்தோணி ஜெபஸ்டின் ரூபன் தலைமையில், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
- ஆடி பூரத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- வளையல் மாலைகள் பக்தா்களின் கரகோஷங் களுடன் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பா் -காந்திமதி அம்பாள் கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும்.
ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இங்கு ஆடி மாதத்தில் காந்திமதி அம்பாளுக்கு ஆடி பூரத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வரும் திருவிழா வின் 4-ம் நாளான இன்று காந்திமதி அம்பா ளுக்கு வளைகாப்பு உற்சவம் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து நடை பெற்றது.
இதற்காக செப்பு கேட யத்தில் காந்திமதி அம்பாள் வெண்பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாய வாத்தியங்கள் முழங்க மேள தாளங்களுடன் சுவாமி கோவில் சென்றார்.
பின்னர் அங்கு தன் வளைகாப்பிற்கு ஆசி வேண்ட சந்திரசேகரரும், காந்திமதி அம்பாளும் நோ் ஏதிரே காட்சி கொடுத்து ஆசீா்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பெண்கள் சீா்வசைகளுடன் வர ஊா்வலமாக காந்திமதி அம்பாளை ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருள செய்தனா். மண்டபத்தில் எழுந்தரு ளிய உற்சவா் காந்திமதி அம்பாளுக்கு பல்வேறு சீா்வரிசைகள், விதவிதமான வளையல்கள் அம்பாளின் முன் வைக்க ப்பட்டிருந்தன. அம்பாளுக்கு நீராட்டு நிகழ்ச்சியும், கூந்தல் கண்ணாடியில் பாா்த்து சாிசெய்யும் வைபவம் நடைபெற்றது.
வளையல் மாலைகள் பக்தா்களின் கரகோஷங் களுடன் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டது. சிறப்பு தீபாராதனை காட்டப்பட்ட தும் வந்திருந்த அனைத்து பக்தா்களுக்கும் வளையல், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவில் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி 4 ரத வீதிகள் வீதி உலா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
- மகளிருக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என தி.மு.க. அரசு அறிவித்தது.
- தமிழக அரசின் சார்பில் ரூ. 7 ஆயிரம் கோடி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருந்தது.
குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000
அதில் பெண்களிடம் பெரும் எதிர்பார்பை பெற்றது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் ஆகும். இந்நிலையில் மகளிருக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என தி.மு.க. அரசு அறிவித்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதற்கிடையே இந்த திட்டம் கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டம் என்று அழைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்திற்காக தமிழக அரசின் சார்பில் ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்திற்கான விண்ணப்படிவங்கள் வழங்கும் பணிக்கான ஏற்பாடுகள் தொடங்க ப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம்
நெல்லை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 2 கட்டங்களாக விண்ணப்பதிவு முகாம்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் அனைத்து கிராம ஊராட்சி களிலும் 528 ரேஷன் கடைகளின் பணியாளர்கள் மூலம் வருகிற 20-ந்தேதி முதல் வீடுகளுக்கு சென்று விண்ணப்பங்கள், டோக்கன்கள் வழங்கப்படு கிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 24-ந்தேதி முதல் ஆகஸ்ட்டு 4-ந்தேதி வரை பெறப்படுகிறது. இதற்காக 764 விண்ணப்பபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி, களக்காடு, அம்பை, வி.கே.புரம் நகராட்சிகள் மற்றும் அனைத்து பேரூராட்சி களிலும் 312 ரேஷன் கடைகளின் பணியாளர்கள் மூலம் ஆகஸ்ட்டு 1-ந்தேதி முதல் வீடுகளுக்கு சென்று விண்ணப்பங்கள், டோக்கன்கள் வழங்கப்ப டுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 669 இடங்களில் பதிவு செய்யப்படுகிறது. மொத்தம் 669 இடங்களில் பதிவு செய்யப்படுகிறது. மொத்தம் 840 ரேஷன் கடைகளுக்கும் 1,434 பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள.
கட்டுப்பாட்டு அறைகள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய சிறப்பு முகாம்கள் நடக்கும் இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் டோக்க ன்களில் குறிப்பிடப்பட்டி ருக்கும். பொதுமக்கள் இந்த திட்டம் குறித்து விபரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும். இதற்கான தொடர்பு எண் 9786566111, மாநகராட்சி மற்றும் வட்டார அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் வருகிற 20-ந்தேதி முதல் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். தாலுகா வாரியாக தொடர்பு எண்கள் வருமாறு:- நெல்லை மாநகராட்சி -0462 2329328, நெல்லை- 0462 2333169, பாளை - 0462 2500086, மனூார் - 0462 2914060, சேரன்மகாதேவி - 04634 260007, அம்பை - 04634 250348, நாங்குநேரி - 04635 250123, ராதாபுரம் - 04637 254122, திசையன்விளை - 04637 271001.
+3
- டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் தி.மு.க.வினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- அ.தி.மு.க. சார்பில் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
நெல்லை:
பெருந்தலைவர் காமரா ஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி இன்று நெல்லையில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தி.மு.க.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் காமராஜர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
இதில் ஞானதிரவியம் எம்.பி., மூத்த முன்னோடி சுப சீதாராமன், மாநில நெச வாளர் அணி செயலா ளர் பெருமாள், மேயர் சரவணன், முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா சத்யா னந்த், வசந்தி முருகேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பா ளர் பொன்னையா பாண்டி யன், மாவட்ட துணை செய லாளர்கள் எஸ்.வி. சுரேஷ், தர்மன், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டி யன், பகுதி செயலாளர்கள் அண்டன் செல்லத்துரை, தச்சை சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, மாரியப்பன், கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர், வில்சன் மணித்துரை, மத்திய மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் முகமது மீரான் மைதீன், முன்னாள் மாவட்ட பொரு ளாளர் அருண் குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் நவநீதன், பேட்டை பகுதி இளை ஞரணி மணிகண்டன்் மாநகர பிரதிநிதி சிவா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமையிலும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.
இதில் அமைப்பு செய லாளர் சுதா பரமசிவன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், முன்னாள் எம்.பி. சவுந்தர் ராஜன்,
மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட துணைச் செயலா ளர்் பாலமுருகன், பொதுக் குழு உறுப்பினர் கங்கை வசந்தி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்து பாண்டி யன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செ யலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக் குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிர மணியன், பகுதி செயலா ளர்கள் திருத்து சின்னதுரை, சிந்து முருகன், ஜெனி, சண்முககுமார், காந்தி வெங்கடாசலம், துணை செயலாளர் மாரிசன், கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பாளை பகுதி மாணவரணி செயலா ளர் புஷ்பராஜ் ஜெய்சன், மாவட்ட பிரதி நிதி ஈஸ்வரி கிருஷ்ணன், வக்கீல் ஜெய பாலன், மேலப்பாளையம் பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் சீனி முகம்மது சேட், நிர்வாகி நத்தம் வெள்ளப்பாண்டி, வட்ட செயலாளர் பாறையடி மணி, மற்றும் பலர் கலந்து கொண்ட னர்..
காங்கிரஸ்
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக சந்திப்பு ம.தி.தா. இந்து பள்ளி முன்புள்ள பாரதியார் சிலையில் இருந்து காமராஜர் சிலை வரை யிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலை யில் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
இதில் தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் பொன் கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக் குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், சொக்கலிங்க குமார், பரணி இசக்கி, பொதுச்செயலாளர் மகேந்திர பாண்டியன்், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா
நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொதுச் செய லாளர் முத்து பலவேசம், செயற்குழு உறுப்பினர் மகாராஜன், மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நெல்லை மாவட்ட சிவாஜி மற்றும் பிரபு மன்றங்கள் சார்பில் நெல்லை மாவட்ட பிரபு மன்ற தலைவர் பாலசுந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
இதேபோல் நாம் தமிழர் கட்சி மற்றும் நாடார் சமுதாய அமைப்புகள், இயக்கங்கள் சார்பில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க.- சமத்துவ மக்கள் கட்சி
நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செய லாளர் சண்முகவேல் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆனந்த மணி, கலைவாணன், பாலன் மற்றும் நிர்வாகிகள் ஆரோக்கிய அந்தோணி, ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் செங்குளம் கணேசன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நட்சத்திர வெற்றி முன்னிலையில் மாநில துணைப் பொதுச்செய லாளர் சுந்தர் காமராஜர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.
இதில் பொருளாளர் சரத் ஆனந்த், துணைச்செயலா ளர்கள் வெங்கடேஷ், சின்னத்துரை, பகுதி செயலாளர் அழகேச ராஜா, ஒன்றிய செயலாளர் செல்வம், வர்த்தக அணி செயலாளர் மகாராஜா, தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் லட்சுமி, இந்திரா, இசக்கிமுத்து, சரத், சிவா, கமலக்கண்ணன், மைக்கேல் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர். மாநகர் மாவட்ட செயலாளர் துரை பாண்டியன், போக்குவரத்து கழக செயலாளர் மகேந்திரன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, பகுதி செயலாளர் முத்து, சங்கர், செல்வகுமார், ஒன்றிய செயலாளர் பரமசிவ பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
- பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு கேடயம்,பரிசுகள் வழங்கப்பட்டது.
- மாணவர்களுக்கு கையடக்க கணினி கொடுக்கும் புதிய திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார்.
நெல்லை:
நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி தின விழா மற்றும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஞான திரவியம் எம்.பி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 7 அரசு பள்ளிகளுக்கும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 26 அரசு பள்ளிகளுக்கும் கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 5 அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது மற்றும் ஊக்க தொகையை வழங்கினார். மேலும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் பத்தமடை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை தனது சொந்த நிதியில் வழங்கினார்.
பின்னர் மாவட்ட முழுவதும் 109 அரசு பள்ளிகளில் பயிலும் 13 ஆயிரத்து 918 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
தற்போது ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர். காமராஜர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து, மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி கல்வி வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தினார். கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட அவரது புகழை என்றும் போற்றுவோம். தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் காமராஜரின் புகழை போற்றும் விதமாக பல்கலைக்கழகங்கள், பள்ளிகளுக்கு அவரது பெயரை சூட்டி வருகின்றனர்.
பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் காகிதம் இல்லா பள்ளி உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு கையடக்க கணினி கொடுக்கும் புதிய திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, தி.மு.க மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்ன ராசு, மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம், நில எடுப்பு டி.ஆர்.ஓ. சுகன்யா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சட்டமன்ற அலுவலகத்தில் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
- மாணவ- மாணவிகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
நெல்லை:
பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மகாராஜா நகர் சட்டமன்ற அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் காங்கிரஸ் கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து நாங்குநேரி யூனியன், பருத்திபாடு ஊராட்சி, சுருளை கிராமத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
அதன்பின்னர் மூலைக்கரைப்பட்டியில் காங்கிரஸ் கொடி ஏற்றி அங்கு நகர காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின் மக்கள் நீதி மையத்தின் சார்பில் மூலைக்கரைப்பட்டி ரீச் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்களை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.அதன்பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து களக்காட்டில் பெருந்தலைவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சிலைக்கும் மலர் மாலை அணிவித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
அதனை தொடர்ந்து களக்காடு தம்பிதோப்பில் களக்காடு நகராட்சி காங்கிரஸ் துணை காமராஜர் தலைமையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின் அனைவருக்கும் காலை உணவு வழங்கினார்.
தொடர்ந்து களக்காடு யூனியன், ராஜபுதூரில் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் மாவட்ட வட்டார, நகர, கிராம கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- ரெட்டியார்பட்டியில் அரசு பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
- முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு தரை தளம் அமைத்து கொடுத்தார்.
நெல்லை:
பாளை ஒன்றியம் ரெட்டியார்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தரை தளம் மோசமாக காணப்பட்டதை அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தனது சொந்த செலவில் தரை தளம் அமைத்து கொடுத்து அதனை பார்வையிட்டு உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்தார். இதற்காக பள்ளி மாணவர்கள் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- காமராஜர் சிலைக்கு சங்க செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு சங்க செயலாளர் டி.ராஜ்குமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள் எஸ்.கே.டி.பி. காமராஜ் நாடார், பி.ரகுநாதன் நாடார், எஸ்.இசக்கிமுத்து என்ற அசோகன் நாடார், எஸ். நித்திய பாலையா நாடார் மற்றும் சங்க ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது.
- வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாமிற்கு கல்லூரி நிறுவனத் தலைவர் டி.டி.என். லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
- கல்லூரி மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என். லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ், மாணவிகள் படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பினை பெற தற்போதே முயற்சிகள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆன்றணி இம்முகாமில் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல் வழங்கினார். நெல்லை மாவட்ட உதவி வேலை வாய்ப்பு அலுவலர் அருண், மாணவிகள் போ ட்டித் தேர்வில் ஆர்வ முடன் பங்கேற்பதற்கு ஏதுவாக சிறப்புரை ஆற்றினார்.
நிறுவனத்தலைவர், மாணவிகள் போட்டித் தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளையும் செய்வதாகவும், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தில் வாங்கி வைப்பதாகவும் உறுதியளித்தார். வணிக மேலாண்மையியல் பேராசிரி யை ரஞ்சிதம் நன்றி கூறினார்.
- செல்வகுமாருக்கு சொந்தமான வீடு வள்ளியூர் சமத்துவபுரத்தில் உள்ளது.
- விஷம் குடித்த செல்வகுமாரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது53). விவசாயி. இவருக்கு சொந்தமான வீடு வள்ளியூர் சமத்துவபுரத்தில் உள்ளது. இதனை அவர் விற்பனை செய்தார்.
இதுசம்பந்தமாக அவருக்கும், அவரது மனைவி மாரியம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த செல்வகுமார் கடந்த 5-ந் தேதி விஷம் குடித்தார். இதனால் மயங்கிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் நேற்று இறந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






