சரத்குமார் பிறந்தநாளையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட ச.ம.க. சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்

நெல்லை நீதிமன்றம் எதிரே, நெல்லை சந்தி விநாயகர் கோவில் அருகே ச.ம.க. சார்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.அத்திமேட்டில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
கேக் வெட்டி சரத்குமார் பிறந்தநாளை கொண்டாடிய சமத்துவ மக்கள் கட்சியினர்.
கேக் வெட்டி சரத்குமார் பிறந்தநாளை கொண்டாடிய சமத்துவ மக்கள் கட்சியினர்.
Published on

நெல்லை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் 70-வது பிறந்த நாளையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பாக கட்சி அலுவலகத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டா டப்பட்டது.

மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணை செயலாளர் நட்சத்திர வெற்றி முன்னிலை வகித்தார். இதே போல் பாளை செந்தில்நகரில் பாளை சட்டமன்ற தொகுதி செயலாளர் ராகவன் மற்றும் பாளை பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் கட்சி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து முதியவர் இல்லத்திற்கு காலை உணவு வழங்கப்பட்டது. நெல்லை நீதிமன்றம் எதிரே, நெல்லை சந்தி விநாயகர் கோவில் அருகே ச.ம.க. சார்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் டவுன் அத்திமேட்டில் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மந்திர மூர்த்தி ஏற்பாட்டில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைசெயலாளர்கள் வெங்கடேஷ், சின்னத்துரை, மாவட்ட பொருளாளர் சரத்ஆனந்த், பாளை பகுதி துணை செயலாளர்கள் நாராயணன், பொன்ராஜ், மாவட்ட மாணவரணி ராஜ்கண்ணன், துணை செயலாளர் மூர்த்தி, இளைஞரணி செயலா ளர்கள் வினோத், அந்தோணி, தகவல் தொழில் நுட்ப அணி மகாராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மணி, பவுல் ஆதித்தன், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இளஞ்செழியன், வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, வக்கீல் அணி இசக்கிமுத்து, மகளிர் அணி லட்சுமி, உமா, பிரியா, மாவட்ட செயலாளர் பூமணி, முத்துலட்சுமி, லட்சுமி, பேச்சிமுத்து, கல்யாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com