என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை யொட்டி வ.உ.சி.மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அந்த பகுதி முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • ரெயில் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் பாளை வ.உ.சி. மைதானத்தில் நாளை காலை 9.05 மணிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றுகிறார். பின்னர் அவர் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து அவர் சுதந்தி ரத்தி ற்காக பாடுபட்ட தியாகிகளை கவுரவிக்கிறார்.

    பின்னர் அனைத்து துறைகளில் சிறப்பாக பணியாற்றி யவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதனையொட்டி பாளை வ.உ.சி. மைதானத்தில் பயிற்சி நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள், போலீசார், ஊர் காவல் படையினர் என 3 துறையினரும் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

    போலீஸ் கட்டுப்பாட்டில் மைதானம்

    நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை யொட்டி வ.உ.சி.மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அந்த பகுதி முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிர வேஷ்குமார் உத்தரவின்பேரில் துணை போலீஸ் கமிஷனர்கள் அனிதா, சரவணக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகின்றனர். தண்ட வாளங்களில் மோப்பநாய் மூலமாக வெடிகுண்டு சோ தனை நடத்தப்பட்டு வருகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐ.சி. ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில் நாளை காலை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதனை யொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தென்காசி ரெயில் நிலை யத்தில் தென்காசி ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பவிநாயகம், மனோகரன், ரவிக்குமார், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாடாக்கண்ணு மற்றும் போலீசார் அதிரடி சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில்வே தண்டவாளம், ரெயில் பெட்டிகள், பயணிகள் உடமைகள் மற்றும் பார்சல் அறை ஆகியவற்றை மெட்டல் டிடெக்டர் மூலமாக தணிக்கை செய்யப்பட்டது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் தருவை மைதானத்தில் நாளை நடைபெற உள்ள சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்று தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் தியாகிகளை கவுரவிக்கிறார்.

    இதனையொட்டி கடலுக்குள் கடலோர போலீ சார் கப்பல் மற்றும் நவீன படகுகள் மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ரெயில்நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நெல்லை, தென்காசி மற்றும் தென் மாவட்ட மக்களின் முக்கியமான ஆன்மீக நிகழ்ச்சியாக ஆடி அமாவாசை இருந்து வருகிறது.
    • குடிபோதையில் வரும் நபர்கள் ரோட்டில் அவதூறான செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

    உள்ளூர் விடுமுறை

    நெல்லை, தென்காசி மற்றும் தென் மாவட்ட மக்களின் முக்கியமான ஆன்மீக நிகழ்ச்சியாக ஆடி அமாவாசை இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை நாளை மறுநாள் (புதன்கிழமை) வருகிறது. எனவே அந்த நாளில் தென் மாவட்ட மக்கள் வழிபாடு செய்வ தற்கும், குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கும் வாய்ப்பாக அன்றைய தினத்தை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

    மேலும் திருவிழா காலம் முடியும் வரை வழக்கம் போல் சொரிமுத்து அய்யனார் கோவிலில் தங்குவதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    சமத்துவ மக்கள்கட்சி

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மகளிர் அணி செயலாளர் லட்சுமி மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலானவை பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்களின் அருகிலும் செயல்பட்டு வருகிறது. இதனால் கடைகளில் மது அருந்திவிட்டு குடிபோதையில் வரும் நபர்கள் ஆபாசமாக ரோட்டில் சுற்றி திரிவதும், ஆபாச வார்த்தைகளால் பேசித் திரிவதும், அவதூறான செயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக டவுன் நயினார்குளம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி செல்லும் நபர்கள் சாலையில் வைத்து பொதுமக்கள் பார்வையில் படும்படி மது அருந்தி விட்டு அந்த பாட்டில்களை நயினார்குளத்தில் வீசுகின்றனர்.

    ஒரு சிலர் போதையில் அந்த பாட்டில்களை சாலையில் போட்டு உடைக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. மேலும் அவர்கள் சாலையில் நடந்து செல்பவர்களை மிரட்டுவதும், ஆபாசமாக திட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுபோன்ற சம்பவங்கள் மேற்கொண்டு நடைபெறாமல் இருக்க பொது இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு இதில் கூறியிருந்தனர்.

    பாரதிய ஜனதா

    பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கொடுத்த மனுவில்,நெல்லை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தொலைபேசி எண் 0462-2576878 ஆகும். இந்த தொலைபேசி எண்ணானது கடந்த ஒரு மாதமாக செயல்பாட்டில் இல்லை. இதனால் பொதுமக்களும், நோயாளிகளும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலாத நிலை உள்ளது.

    எனவே உடனடியாக தொலைபேசியை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

    • இளவரசன் என்ற ஆஷா அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • அங்கு வந்த ஒரு கும்பல் கத்தி மற்றும் கம்பியால் சரமாரியாக அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள பேட்டை அசோகர் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் இளவரசன் என்ற ஆஷா (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இந்நிலையில் நேற்று இரவு அசோகர் தெரு பெருமாள் கோவில் அருகே இளவரசன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் கத்தி மற்றும் கம்பியால் சரமாரியாக அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த இளவரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை அப்பகுதியினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இளவரசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் குடும்பத்திற்கும் இடத்தகராறு தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக நேற்று அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட தகராறில் மாரியப்பன், அவரது மகன்கள் மாதவன், சந்துரு உள்பட 4 பேர் சேர்ந்து கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  

    • மாணவன் சின்னத்துரை, அவரது சகோதரி இருவரும் சக மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டனர்.
    • தச்சை கணேசராஜா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவரிடம் நலம் விசாரித்தார்.

    நெல்லை:

    நாங்குநேரியை சேர்ந்த பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி இருவரும் சக மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த தகவலை அறிந்து நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினார். அப்போது நாங்குநேரி தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நாங்குநேரி பேரூர் செயலாளர் சங்கரலிங்கம், மேலப்பாளையம் கிழக்கு பகுதி செயலாளர் சண்முக குமார், மாவட்ட இளைஞர்-இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல இணைச் செயலாளர் விக்னேஷ், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்பு அங்கப்பன், வட்ட செயலாளர்கள் பாறையடி மணி, ஜெகநாதன், கச்சி முகமது மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கல்லிடைக்குறிச்சி நதியுண்ணி கால்வாயில் பெண் உடல் ஒன்று இறந்த நிலையில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி போலீசார் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நதியுண்ணி கால்வாயில் பெண் உடல் ஒன்று இறந்த நிலையில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் உடலை மீட்டனர். தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி போலீசார் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கல்லிடைக்குறிச்சி ஏகாம்பரம் தெருவை சேர்ந்த தர்மாம்மாள் (வயது 80) என்பது தெரியவந்தது. அவர் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜபிள்ளை ஆகியோர் போதை பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
    • கல்லூரி முதல்வர் முரளி சோமசுந்தரம் முன்னிலையில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

    திசையன்விளை:

    திசையன்விளையை அடுத்த அரசூர் பூச்சிக்காடு ஜேம்ஸ் மரைன் கல்லூரியில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தனமாரி, தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜபிள்ளை ஆகியோர் போதை பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    கல்லூரி முதல்வர் முரளி சோமசுந்தரம் முன்னிலையில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துகொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக பிரதிநிதி அண்டோ எபி பெனி, மக்கள் தொடர்பு அலுவலர் பிரின்ஸ் பிரேம்குமா,ர் ஆசிரியர் இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    • தச்சநல்லூர் பகுதி சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை சந்திப்பில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் வசந்தம் ஜெயக்குமார், ஹெலன் டேவிட்சன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட நெல்லை மாநகர தி.மு.க.வின் தச்சநல்லூர் பகுதி சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் சந்திப்பில் நடைபெற்றது. இதற்கு தச்சநல்லூர் பகுதி செயலாளரும், முன்னாள் மண்டல சேர்மனுமான தச்சை சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் மாலைராஜா முன்னிலை வகித்தனர்.

    நெல்லை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வசந்தம் ஜெயக்குமார், பாளை தொகுதி பார்வையாளர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியல் நெல்லை மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர துணைச்செயலாளர் அப்துல் கையூம், இளைஞரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் அலீப் மீரான், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அனிதா, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சவுந்தரம், இளைஞா் அணி மணிகண்டன் மற்றும் தச்சநல்லூர் பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பாக முகவர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் காவல்துறையும் கல்வி துறையும் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததினால் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
    • பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திராவை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    அப்போது அவருடன் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் காவல்துறையும் கல்வி துறையும் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததினால் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் காலையில் நடக்கும் மாணவர் அசெம்பிளி கூட்டத்தில் கண்டிப்பாக மாணவ-மாணவிகள் ஜாதி மதம், பேதமின்றி சகோதரத்துவத்துடன் வாழ்வதாக உறுதிமொழி எடுத்துக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

    பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறது. உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழுவினர் வருகை புரிந்து மருத்துவ பரிசோதனை செய்து வருவது பாராட்டுக்கு உரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர்.
    • ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 கொலைகள் நடைபெற்றுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட முழுவதும் 'ஸ்ட்ராமிங் ஆபரேஷன்' செய்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் பழைய குற்றவாளிகள், கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்கள் என பல்வேறு வகைகளில் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர். இதில் இன்று ஒரே நாளில் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று மாலைக்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராஜாமணியின் ஆடுகளை திருடச்சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டு இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமணி உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்து வடக்கூரை சேர்ந்தவர் நாராயணசாமி. தொழிலாளி. இவரது மகன் ராஜாமணி (வயது 30). இவர் கீழநத்தம் பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகவடிவு என்பவருடன் திருமணம் நடந்தது. ராஜாமணி அந்த பகுதியில் பலசரக்கு கடையும் நடத்தி வந்தார். நேற்று மதியம் அவர் கீழநத்தம் பகுதியில் அமைந்துள்ள பாளை தாலுகா போலீஸ் புறக்காவல் நிலையம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை அழைத்து வர சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ராஜாமணியை திடீரென வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ராஜாமணியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய நிலையில் அங்கு ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பாளை தாலுகா போலீசார் கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? ஏதேனும் முன்விரோதத்தால் இந்த சம்பவம் நடந்ததா? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கீழநத்தம் மேலூர் மற்றும் தெற்கூர் பகுதிகளை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராஜாமணியின் ஆடுகளை திருடச்சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டு இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே ராஜாமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலையில் திரண்டு நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமணி உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
    • ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாண வர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

    நேற்று மதியம் மாணவர் சின்னத்துரையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர், மாணவர் சின்னத்துரையின் கையில் பலத்த வெட்டுக்காயங்கள் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாணவரை இங்கிருந்து இடமாற்றம் செய்வதில் சிரமம் உள்ளதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

    தொடர்ந்து அமைச்சரின் உத்தரவின்பேரில், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கை அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு வரும் அந்த குழு, முதல் கட்டமாக மாணவருக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.

    அதன்பின்னர் மாணவரின் கையில் ஏற்பட்டுள்ள வெட்டு காயங்களின் தன்மை, தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை அறிந்து கை அறுவை சிகிச்சை செய்வது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • ஆடுகளை வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் ராஜாமணியை இடைமறித்த கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது.
    • உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லையில் பஞ்சாயத்து உறுப்பினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை மாவட்டம் கீழநத்தம் வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 32). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது. ராஜாமணி கீழந்த்தம் பஞ்சாயத்து உறுப்பினராகவும் உள்ளார்.

    இந்நிலையில், ராஜாமணி இன்று வழக்கம்போல் வீட்டில் உள்ள ஆடுகளை அருகில் உள்ள வாய்க்கால் பாலம் பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர், மாலை ஆடுகளை வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் ராஜாமணியை இடைமறித்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது.

    இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராஜாமணி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ராஜாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×