என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • முத்துகிருஷ்ணன் சம்பவத்தன்று எட்டாங்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் முத்துகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள ரஸ்தா நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 28). இவர் முன்னாள் மானூர் ஒன்றிய பா.ஜனதா செயலாளர் ஆவார். சம்பவத்தன்று அவர் எட்டாங்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று இரவு அவர் இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டவுன் போலீஸ் நிலையம் அருகே பெண்கள் மற்றும் ஆண்களுக்கென கழிவறை செயல்பட்டு வந்தது.
    • கழிவறையை மீண்டும் திறந்திட மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொது ஜன பொது நல சங்க தலைவர் அய்யுப் மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையின் இதய பகுதியாக விளங்கும் டவுனில் மேல ரத வீதி பகுதியில் டவுன் போலீஸ் நிலையம் அருகே பெண்கள் மற்றும் ஆண்களுக்கென கழிவறை செயல்பட்டு வந்தது. அதில் தற்போது பெண்கள் கழிப்பறையை மட்டும் செயல்படாமல் அடைத்து வைத்து பல மாதங்கள் ஆகின்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் பொருள்கள் வாங்குவதற்கும், போலீஸ் நிலையத்திற்கு வரும் பெண்களும் கடுமையான சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    கடந்த மாதம் 19-ந் தேதி இந்த கழிவறையை மீண்டும் திறந்திட மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க ப்பட்டது. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் உள்ளிட்டவர்களிடமும் நேரில் தகவல் தெரிவி க்கப்பட்டது. மாதங்கள் கடந்து விட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • தனது தவப்பயனால், சிவ தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர்.
    • 9-ம் திருநாளனன்று கருவூர் சித்தர், நெல்லையில் உள்ள ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவு மானூர் அம்பலவாணர் கோவிலை வந்தடைந்தார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

    தனது தவப்பயனால், சிவ தலங்களில் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் காட்சி கொடுக்கும் பேறு பெற்று விளங்கியவர் கருவூர் சித்தர். இவர் ஒரு சமயம், நெல்லையப்பர் கோவில் முன்பாக வந்து வேண்டி அழைக்கவே, இறைவன் பதில் தராததால் சினமடைந்த சித்தர் சாபமிட்டு மானூர் செல்ல முற்பட்டார். இதனையறிந்த நெல்லையப்பர், சிவத்தொண்டராக வேடம் தாங்கி சித்தரை தடுத்து, பணிந்து அழைத்தார். அந்த இடமே தற்போதும் தொண்டர் நயினார் கோவில் எனப்படுகிறது.

    தொடர்ந்து சித்தர் மானூர் வந்து சேருகிறார். இதனால் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் முறையே, சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் மாறி பாண்டியராஜன், அகத்தியர், குங்கிலிய நாயனார், தாமிரபரணி மற்றும் சண்டி கேஸ்வரர் ஆகியோருடன் மானூர் சென்று, அங்குள்ள அம்பலவாணர் கோவிலில் வைத்து ஜோதிமயமாய் காட்சியளித்து சித்தரின் கோபத்தை தணியச் செய்கின்றனர். பின்னர் கருவூர் சித்தரையும் அழைத்துக்கொண்டு நெல்லைக்கு வருகின்றனர்.

    இந்நிகழ்வுகள் ஆவணி மாதம் மூலம் நட்சத்திர நாளில் நடைபெற்றதால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழாவாக மானூர் அம்பலவாணர் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மானூர் வந்து வழிபடுவோருக்கு, முக்தி கிடைக்கும், மூலநோய் பிரச்சினை தீரும் என்பது ஐதீகம்.

    இந்த ஆண்டு ஆவணி மூலத் திருவிழாவானது, நெல்லையப்பர் கோவிலில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    9-ம் திருநாளனன்று கருவூர் சித்தர், நெல்லையில் உள்ள ரத வீதிகளில் உலா வந்து, நள்ளிரவு மானூர் அம்பலவாணர் கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து நேற்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் பரிவாரங்களுடன் வீதியுலா வந்து, நள்ளிரவு புறப்பட்டு இன்று அதிகாலை மானூர் சென்றனர். அங்கு இன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கருவூர் சித்தருக்கு ஜோதிமயமாய் காட்சி அளித்தனர். தொடர்ந்து சாபவிமோசனம் பெறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தக்கார் பரமசிவன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • தலைமறைவான 2 பேரையும் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை தவுபிக்கை கைது செய்தனர்.
    • வழக்கில் முக்கிய நபரான சல்மானை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னை வேளாங்கண்ணி நகர் தென்புறம் உள்ள வயல் பகுதியில் வாலிபர்கள் சிலர் நின்றனர்.

    போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்ற போது ஒருவர் சிக்கினார். மற்ற 2 வாலிபர்களும் தப்பியோடினர். பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் டவுன் அரசன் நகரை சேர்ந்த ரஞ்சித்(வயது 19) என்பதும், தப்பியோடியவர்கள் அவரது நண்பர்களான டவுன் கிருஷ்ணபேரியை சேர்ந்த மாரி செல்வன் என்ற சல்மான், குற்றாலம் சாலையை சேர்ந்த தவுபிக் ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

    மேலும் 3 பேரும் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை தூக்கி வீசி வெடிக்க செய்து தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 2 பேரையும் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை தவுபிக்கை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய நபரான சல்மானை தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால் தான் மேற்கொண்டு விபரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • 2 பேரின் உடலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • விபத்து தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சேதுராயர்புரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி(வயது 34). இவரது உறவினர் களக்காடு அருகே சிதம்பரபுரத்தை சேர்ந்த ரகுவரன்(26).

    கட்டிட தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் இன்று அதிகாலை நாங்குநேரியில் இருந்து நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை ரகுவரன் ஓட்டிச் சென்றுள்ளார். மந்திரமூர்த்தி பின்னர் அமர்ந்திருந்தார்.

    நாங்குநேரியை கடந்து நான்குவழிச்சாலையில் உள்ள தனியார் மில் அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மந்திரமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரகுவரன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதுதொடர்பாக அந்த வழியாக சென்றவர்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுவரன் மற்றும் பலியான மந்திர மூர்த்தி ஆகியோரை ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் ரகுவரன் பரிதாபமாக இறந்தார்.

    தொடர்ந்து 2 பேரின் உடலும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.
    • நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை தூக்கி வீசி வெடிக்கச்செய்து அதனை தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்ததும் தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை டவுன் போலீஸ் நிலைய போலீசார் நேற்று முன்தினம் டவுன் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டவுன் அன்னை வேளாங்கண்ணிநகர் தென்புறம் உள்ள வயல்காட்டு பகுதியில் வாலிபர்கள் சிலர் நின்றுகொண்டு இருந்தனர்.

    இதை பார்த்த போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட்டார். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் டவுன் அரசன் நகரை சேர்ந்த காளியப்பன் மகன் ரஞ்சித் (வயது 19) என்பதும் தப்பி சென்ற நபர்கள் ரஞ்சித்தின் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை தூக்கி வீசி வெடிக்கச்செய்து அதனை தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ரஞ்சித்தின் நண்பர்களான கிருஷ்ணபேரியை சேர்ந்த மாரிசெல்வன் என்ற சல்மான், தவுபிக் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். வாலிபர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மழை காலங்களில் அணைகளில் தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டு, விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஆரம்பத்தில் ஓரளவு பெய்த மழையின் காரணமாக அணையின் பாபநாசம் நீர்மட்டம் 70 அடியை எட்டியது.

    நெல்லை:

    வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மேல் பொதிகை மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

    விவசாயம் பாதிப்பு

    இந்த நதியின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் ஏக்கரும் என மொத்தம் 86 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. மழை காலங்களில் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் அணை களில் தேங்கி வைக்கப்பட்டு, விவ சாயத்துக்கு பயன்படு த்தப்பட்டு வருகிறது.

    பாபநாசம் அணையில் இருந்து ஒவ்வெரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விவசாயத்து க்காக தண்ணீர் திறந்து விடப்படும். தொடர்ந்து 120 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. ஆரம்பத்தில் ஓரளவு பெய்த மழையின் காரணமாக அணையின் பாபநாசம் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. இதையடுத்து குறிப்பிட்ட சில கால்வாய்களில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யாததால் அந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    குளங்கள் வறண்டன

    அதேபோல் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நெல்லை மாவட்டத்தில் கோடகன் கால்வாய், நதியுன்னி கால்வாய் உள்ளி ட்ட பல்வேறு கால்வாய்கள் வழியாக மாவட்டத்தில் உள்ளங்களுக்கு செல்லும். அணையில் நீர் குறைவால் மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுவிட்டது. அவை வெடிப்பு விழுந்து காணப்படுகிறது.

    நெல்லை மாநகராட்சி பகுதியில் நயினார் குளத்துக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு சுத்தமல்லி அணைக்கு வந்து அங்கு இருந்து தனி கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. மிகவும் பழமையான இந்த குளம் 15 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 12 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் இந்த குளம் தண்ணீர் தேங்கி, கடல் போல் கட்சி யளிக்கும். பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும்.

    இந்த குளம் மூலம் 370 ஏக்கர் பாச னம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை கைகொடுக்காததால் குளம் நிரம்பவில்லை. நயினார் குளம் பாசனமும் பொய்த்து விட்டது. தற்போது குளம் வறண்டு காணப்படுகிறது. ஒரு ஓரத்தில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கின்றன. மற்ற இடங்கள் வறண்டு காணப்படுகிறது. தண்ணீர் இல்லாததால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.

    இதேபோல் மானூர் பெரியகுளம் வடக்கு விஜயநாராயணம் குளம் ஆகிய பெரிய குளங்களும் வறண்டு காணப்படுகிறது. மானுர் பெரியகுளம் நிரம்பினால் 2 ஆண்டுகளுக்கு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். அப்படிப்பட்ட குளங்கள் இந்த ஆண்டு குறைவான நீர்வரத்தை மட்டுமே கண்டு வறண்டு போய் உள்ளது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

    • நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
    • சுமங்கலிப் பெண்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த கலசத்திற்கு அா்ச்சனை செய்து சுமங்கலி பூஜை வழிபாடு நடத்தினர்.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

    அதன் ஒரு நிகழ்ச்சியாக வரலெட்சுமி விரதத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபத்தில், இன்று 1008 சுமங்கலி பூஜை நடைபெற்றது. பெண்கள் மாங்கல்ய பலன் அமையவும், குழந்தை பேறு கிடைக்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், இல்லங்களில் சுபகாரியம் நடைபெறவும் வரலெட்சுமி பூஜை நடைபெற்றது.

    ஆயிரங்கால் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருள சுவாமி -அம்பா ளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடா்ந்து சுமங்கலிப் பெண்கள் முன்பு வைக்கப்ப ட்டிருந்த கலசத்திற்கு அா்ச்சனை செய்து சுமங்கலி பூஜை வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில் ஆயிரக்க ணக்கான பெண்கள் கலந்து கொண்டு புதிய மஞ்சள் கயிறு அணிவித்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் உடன் வழிபாடு நடத்தினர்.

    • காலை உணவு குழந்தைகளின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.
    • இதுவரை 40 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 2,775 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

    திட்டம் தொடக்கம்

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அன்று அண்ணா பிறந்த நாளில் மதுரையில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டது.

    முதல்-அமைச்சர்

    அதனைத் தொடர்ந்து ரூ.404 கோடியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதி மற்றும் பேரூராட்சி, நகர்புற பகுதிகளில் உள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்துள்ளார்.

    சபாநாயகர் தொடங்கி வைத்தார்

    இதனை ஒட்டி நெல்லை மாவட்டத்தில் ராதாபுரத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் சபாநாய கர் அப்பாவு பேசியதாவது:-

    காலை உணவு குழந்தை களின் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு, இரவு உணவுக்குப் பின் ஏற்படும் நீண்ட இடைவெளியுடன் கூடிய பசியை தணிப்பதாக அமைகிறது. மேலும், காலை உணவினை தவிர்க்கும் நிலையில் உள்ள குழந்தைகள் மிகுந்த சோர்வுடனும், கவனிப்புத் திறன் குறைந்தும் காணப்படுவர் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    காலை உணவு சாப்பிடா மல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த இயலாமல் சோர்வடைந்து விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    40 தொடக்கப் பள்ளிகள்

    நெல்லை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 22 தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 2,246 மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டது. மேலும் மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் என 18 தொடக்கப்பள்ளிகள் இத்திட்டத்தில் சேர்க்க ப்பட்டு, இதுவரை 40 தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த 2,775 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். தொடர்ந்து இன்று மாவட்டத்தி ற்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் செயல்ப டும் 286 தொடக்க ப்பள்ளிகளில் பயிலும் 13,388 மாணவர்களும், பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் 43 அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 2,894 மாண வர்களும், நகர்புற பகுதி களில் செயல்படும் 19 பள்ளி களில் பயிலும் 1,162 மாண வர்கள் என மொத்தம் 348 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17,444 மாணவ, மாணவிகள் பயனடை வார்கள்.

    வரலாற்று சிறப்பு மிக்க திட்டம்

    வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தால் மாணவர்கள் தடையின்றி கல்வி பயிலுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்காலங்களில் பெரிய உயர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகவே இது போன்று அற்புதமான திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நேற்று இரவு வீட்டில் கனகராஜ், மஞ்சு, தர்ஷன், இலக்கியா ஆகிய 4 பேரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர்.
    • கனகராஜ் உள்பட 4 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையகருங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ், தொழிலாளி. இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு தர்ஷன் (வயது 8) என்ற மகனும், இலக்கியா (7) என்ற மகளும் உள்ளனர்.

    விஷம் குடித்தனர்

    நேற்று இரவு வீட்டில் கனகராஜ், மஞ்சு, தர்ஷன், இலக்கியா ஆகிய 4 பேரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மற்ற 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காரணம் என்ன?

    போலீசார் விசார ணையில் கனகராஜ் உள்பட 4 பேரும் குளிர் பானத்தில் விஷம் கலந்து குடித்தது தெரிய வந்தது. கனகராஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும், அதனை அவரது தந்தை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் கனகராஜிக்கு தனது தந்தையுடன் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக மனம் உடைந்து அவர் குடும்பத்துடன் விஷம் குடித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓ.பி.எஸ். தரப்பு தொடுத்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் நடனமாடி இனிப்புகள் வழங்கினார்.

    நெல்லை:

    கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்ககோரியும், கட்சியில் இருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரியும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான பி.எச். மனோஜ்பாண்டியன், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

    இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இதில் ஓ.பி.எஸ். தரப்பு தொடுத்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அதில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துப் பாண்டி, ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செய லாளர்கள் மோகன், ஜெனி, சிந்து முருகன், காந்தி வெங்க டாச்சலம், பாளை பகுதி மாண வரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுரணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், நிர்வாகிகள் சம்சுசுல்தான், டால்சரவணன், தாழை மீரான் மற்றும் ஏராள மானவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் தலைமையிலான நிர்வாகிகள் நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் நடனமாடி இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் வள்ளியூர் சுந்தர், பகுதி செயலாளர் மோகன், திருத்து சின்ன துரை, ஒன்றிய செய லாளர் மருதூர் ராம சுப்பிரமணியன், கவுன்சி லர் சந்திரசேகர், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழா நாட்களில் சமையல் போட்டி, மெகந்தி போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
    • அற்புத வினாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது.

    திசையன்விளை:

    திசையன்விளை வடக்குத் தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா 20-ந் தேதி தொடங்கியது.

    விழா நாட்களில் விளையாட்டு போட்டிகள், கோல ப்போட்டி, சமய சொற்பொழிவு, இன்னி சை கச்சேரி, நாடகம், 1008 மாங்கல்ய பூஜை, திருவிளக்கு பூஜை, கம்ப்யூட்டர் போட்டி, சமையல் போட்டி, மெகந்தி போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    நேற்று இரவு பள்ளி மாணவ -மாணவிகளின் பரத நாட்டியம், சுடலை ஆண்டவர் இந்து புது எழுச்சி மன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி, கரகாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சி கள், வில்லிசை நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    நள்ளிரவில் அற்புத வினாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை அடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்ய ப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் அதிகாலை வரை கோவில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    ×