என் மலர்
திருச்சிராப்பள்ளி
- திருச்சி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு
திருச்சி,
திருச்சி கிழக்கு கோட்டத்துக்குட்பட்ட சிறுகமணி துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, வள்ளுவர்நகர், காமநாயக்கன்பாளையம், காவல்காரபாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூர், ஜீயபுரம் மெயின்ரோடு, அணலை, திருப்பராய்துறை, எலமனூர், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் லால்குடி தாலுகா வாளாடி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துறை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண்கல்லூரி, ஆங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று லால்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
- திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 2.15 கிலோ தங்கம் பறிமுதல்
- சுங்கத்துறையினரின் தொடரும் அதிரடி வேட்டை
கே.கே. நகர்,
திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு இண்டிகோ, மலிந்தோ, ஸ்ரீலங்கன், ஏர் ஏசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர்கதையாகி வருகிறது.
நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில், வந்த, சென்னையைச் சேர்ந்த சாதிக் அலி(வயது 40), அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் காலணியில் மறைத்து எடுத்து வந்த ரூ.1.08 கோடி மதிப்பிலான 1.872 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
இதேபோன்று கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்து வந்த, புதுக்கோட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன்(வயது 37) என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 61.21 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களில் மட்டும், திருச்சி விமான நிலையத்தில் 2.15 கிலோ கடத்தல் தங்கம், வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
- வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகி வருகிறது.
- பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
கே.கே. நகர்:
திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு இண்டிகோ, மலிந்தோ, ஸ்ரீலங்கன், ஏர் ஏசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமான சேவை நடைபெற்று வருகிறது.
இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகி வருகிறது.
நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த சாதிக் அலி(வயது 40), அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் காலணியில் மறைத்து எடுத்து வந்த ரூ.1.08 கோடி மதிப்பிலான 1.872 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்து வந்த, புதுக்கோட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன்(வயது 37) என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 61.21 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களில் மட்டும், திருச்சி விமான நிலையத்தில் 2.15 கிலோ கடத்தல் தங்கம், வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
- திருச்சி மாநகராட்சியில் திங்கட்கிழமை
- மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும்
திருச்சி
திருச்சி மாநகராட்சியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மேயர் மு.அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில், மேயர் கூட்ட அரங்கில் கமிஷனர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல தலைவர்கள், மாநகராட்சி அலுவலர்கள், முன்னிலையில் நடைபெறும். எனவே மாநகர பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் குறைதீர் மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என மேயர் தெரிவித்துள்ளார்.
- துபாயில் இருந்து திருச்சி வந்த விமானம்
- 2 பெண்கள் உள்ளாடையில் மறைத்து ரூ.75 லட்சம் தங்கம் கடத்தல்
- சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
கே.கே.நகர்,
துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு, திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமான பயணிகளையும், அவர்களது உடமைகளையும் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் சோதனைக்கு பின்னர் வெளியேற அனுப்பினர்.
அப்போது 2 பெண் பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த இரு பெண்களும், தங்களது உள்ளாடையில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
சென்னையைச் சேர்ந்த ஜப்பனீஸ் பானு, பர்வீன் ஆகிய இருவரிடமும் இருந்து, ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான சுமார் 1.50 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.விசாரணையின் முடிவில் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சீட்டு நிறுவனத்தில் பங்குதாரர் என கூறினார்
- பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோடி
- தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே து.ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). மனைவி வித்யா (35), மைத்துனர் ரகுநாதன் (31) இவர்கள் மூவரும் சேர்ந்து அந்த பகுதியில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் அதே ஊரை சேர்ந்த மைதிலியிடம் (40). எங்கள் நிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்தால் அதிக லாபத் தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய மைதிலி பல்வேறு தவணைகளில் ரூ. 8 லட்சம் வரை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மைதிலி சீட்டு நிறுவனக் கணக்கினை கேட்டார். ஆனால் அவர்கள் தரவில்லை. லாபத்தில் பங்கு கேட்டும் தரவில்லையாம். இதனால் விரக்தியடைந்த மைதிலி, கொடுத்த அசல் பணத்தையாவது திருப்பி தருமாறு கேட்ட போது பிரபாகரன் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனால் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த மைதிலி, திருச்சி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் துறையூர் போலீசார் பணமோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, தலைமறைவானவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். துறையூர் அருகே சீட்டு நிறுவனம் நடத்துவதாக கூறி, பண மோசடி நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடனை கட்ட முடியவில்லை
- மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை
- திருச்சியில் பரிதாபம்
திருச்சி,
திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கோபால கிருஷ்ணன் (வயது 40). இவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
வியா பாரியான இவர் தனியார் வங்கி மற்றும் மகளிர் குழு மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியு ள்ளார். வியாபாரத்தில் ந ஷ்டம் ஏற்பட்டதால், வா ங்கிய கடனை அவரால் கட்ட முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த கோபாலகிருஷ்ணன் எலி மருந்து பவுடரை மதுவில் கலந்து குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக கோபால கிருஷ்ணன் இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி செலின் பிரதீபா கொடுத்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தான் இறந்து போனால் குழந்தைகள் அனாதையாகி விடும் என கருதி அவர் குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார்.
- தங்கமணி தனது இரு குழந்தைகளையும் ஒரு துண்டு மூலமாக இடுப்பில் சுற்றி கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.
மணப்பாறை:
திருச்சி மணப்பாறை ஆண்டிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 30) இவர் சேலத்தில் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தங்கமணி 26 என்ற மனைவியும் சரோனிகா (6), கிருத்திகா (3), லஜீத் ஒன்று ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். தங்கமணி தனது குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் வசித்து வந்தார். வாரம் ஓரிரு முறை சரவணன் ஊருக்கு வந்து மனைவி குழந்தைகளை கவனித்து வந்தார். வழக்கம்போல் சரவணன் சேலத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். மனைவி குழந்தைகள் அவரது பெற்றோர் வீட்டில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மாமனார் (சரவணனின் தந்தை) மருமகளை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தங்கமணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
தான் இறந்து போனால் குழந்தைகள் அனாதையாகி விடும் என கருதி அவர் குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார். ஆனால் மூத்த மகள் சரோனிகாவுக்கு ஆறு வயதாகி விட்டதால் விவரம் தெரியும் என நினைத்து அவரை விட்டு விட்டார். பின்னர் எதுவும் தெரியாத கிருத்திகா மற்றும் ஒரு வயது குழந்தை லஜீத் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார். இது பற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சேலத்தில் இருக்கும் அவரது கணவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சரவணன் பதறி அடித்துக் கொண்டு ஊர் திரும்பினார். பின்னர் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தங்கமணி மற்றும் குழந்தைகளை சல்லடை போட்டு தேடினர். ஆனால் எங்கும் அவரைக் காணக் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் தங்கமணி மற்றும் அவரது குழந்தைகள் கிருத்திகா, லஜீத் ஆகியோர் பிணமாக மிதந்தனர். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீசார் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் போராடி தாய் மற்றும் 2 குழந்தைகளையும் பிணமாக மீட்டனர். முன்னதாக தங்கமணி தனது இரு குழந்தைகளையும் ஒரு துண்டு மூலமாக இடுப்பில் சுற்றி கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். இதில் கிருத்திகா இடுப்பில் இருந்து நழுவி கீழே விழுந்துள்ளார். ஒரு வயது குழந்தை இடுப்பில் கட்டியப்படியே பிணமாக கிடந்தது. குடும்பத் தகராறில் இரு குழந்தைகளையும் இடுப்பில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- காதல் திருமணம் செய்த இளம் பெண் மாயம்
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி செந்தண்ணீர்புரம் 3-வது தெருவை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி நித்யா (வயது 38).
இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு நித்ராதேவி என்கிற ஒரு மகள் உள்ளார். அவர் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் ஈரோட்டில் உள்ள சகோதரி வீட்டில் நித்யா விட்டுவிட்டு திருச்சிக்கு திரும்பியவர் வீடு திரும்பவில்லை. இது குறித்துஅவரது கணவர் தனபால் பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 25 ) என்பவர் திருச்சி காஜாபேட்டையில் தனது உறவினர் வீட்டிற்கு வந்தபோது மாயமானார். இது குறித்து அவரது தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொட்டியம் ஒன்றிய விவசாய சங்க மாநாடுசத்துணவில் வாழைப்பழத்தை சேர்க்க கோரிக்கை
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு எம்.புதூரில் நடைபெற்றது . இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாய சங்க தொட்டியம் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஆத்மநாதன், குழந்தைவேல், ஜான் கென்னடி,சுப்பிரமணியன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் அரங்கூர் கிளைக் செயலாளர் .கமல் வரவேற்றார்.
இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, தொட்டியம் ஒன்றியத் தலைவர் நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்த மாநாட்டில் தொட்டியம்- லாலாபேட்டைக்கு இடையே காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும். தொட்டியம் பகுதியில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களில் உள்ள பாதுகாப்பு கட்டைகளை சீர்படுத்த வேண்டும். மாயனூர் கதவணை அருகில் சீலைபிள்ளையார்புத்தூர் வடகரை வாய்க்காலில் புதிய மதகு அமைக்க வேண்டும். அனைத்து பாசன வாய்க்களையும் தூர்வார வேண்டும். தொட்டியம் பகுதி வாழை, வெற்றிலை பயிர்களுக்கு வருடம் முழுவதும் தண்ணீர் தர வேண்டும்.
வாழை, வெற்றிலைக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். எம்.புத்தூர் சத்திரத்தில் உள்ள வாழை பதப்படுத்தும் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் தமிழ்நாடு விவசாய சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் அரங்கூர் ஆர். மூர்த்தி நன்றி கூறினார்.
- அக்ரஹார தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன்.
- ரெயிலில் அடிபட்டு பிணமாக மீட்கப்பட்டுள்ளார்
திருச்சி
திருச்சி அரியமங்கலம் அக்ரஹார தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி லதா.
இவர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியேறி திருச்சி மத்திய பஸ் நிலையம் சென்றார். பின்னர் தனது மகன் ஸ்ருதீசிடம் கேரளா புறப்பட்டு செல்வதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
ஆனால் அவர் கேரளாவுக்கும் செல்லவில்லை வீட்டுக்கும் திரும்ப வரவில்லை இந்த நிலையில் திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளோடு தண்டவாள பகுதியில் ரெயிலில் அடிபட்டு பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.ஓடும் ரெயிலில் இருந்து அவர் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மாயமான மூதாட்டி ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தமகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.40 லட்சம் நிதி
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டு அவர்கள் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் .
திருச்சி,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வட்டார வணிக வளமையம் மூலம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 80 பேருக்கு ரூ. 40 லட்சம் நிதியை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ்குமார்,ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், துணை தலைவர் சண்முகம், மகளிர் திட்ட ஏ.பி.ஓ. நிர்மலாதேவி, டி.ஆர்.பி. தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது,
பெண்கள் வருங்காலத்தில் தொழில் அதிபர்களாக வரவேண்டும் என்ற இலக்கை விதைத்து உங்களுடைய முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான வழிகாட்டுதலை அரசு அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் . கலைஞர் தான் தருமபுரியில் முதன் முதலில் மகளிர் சுய உதவி குழுவை ஆரம்பித்தார். அதன் பிறகு தற்போதைய தமிழக முதல்வர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது பல லட்சக்கணக்கில் மகளிர்உதவி குழு எண்ணிக்கையை பெருக்கினார்.
தற்போது சிறப்பு திட்டம் செயலாக்கும் என்பதை அமைச்சர் உதயநிதி தான் மகளிர் சுய உதவி குழுவிற்கு தேவையான நிதிகளை ஒதுக்குகிறார். அது உங்கள் மீது அவர் கொண்டு இருக்கும் நம்பிக்கையாகும். அரசின் பல்வேறு உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.
காலை உணவு திட்டம் உங்களை கருத்தில் கொண்டு தான் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 80 மகளிருக்கு 35 சதவீதம் மாநிலத்தில் 40 லட்சம் கடன் உதவி வழங்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டு அவர்கள் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் . அரசு கொண்டுவரும் பல திட்டங்கள் உங்களது தேவையை உணர்ந்து தான் என்பதை அறிந்து கொள்வதுடன் அதனை செயல்படுத்தும் விதமாக பெண்கள் இருக்க வேண்டும் என்றார்.
இந்த விழாவில் தமிழ்ச்செல்வி மகளிர் வட்டார இயக்குனர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.






