என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 2 பெண்கள் உள்ளாடையில் மறைத்துரூ.75 லட்சம் தங்கம் கடத்தல்சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
    X

    துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 2 பெண்கள் உள்ளாடையில் மறைத்துரூ.75 லட்சம் தங்கம் கடத்தல்சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

    • துபாயில் இருந்து திருச்சி வந்த விமானம்
    • 2 பெண்கள் உள்ளாடையில் மறைத்து ரூ.75 லட்சம் தங்கம் கடத்தல்
    • சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

    கே.கே.நகர்,

    துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு, திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமான பயணிகளையும், அவர்களது உடமைகளையும் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் சோதனைக்கு பின்னர் வெளியேற அனுப்பினர்.

    அப்போது 2 பெண் பயணிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த இரு பெண்களும், தங்களது உள்ளாடையில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

    சென்னையைச் சேர்ந்த ஜப்பனீஸ் பானு, பர்வீன் ஆகிய இருவரிடமும் இருந்து, ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான சுமார் 1.50 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.விசாரணையின் முடிவில் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×