என் மலர்
உள்ளூர் செய்திகள்

துறையூர் அருகேசீட்டு நிறுவனத்தில் பங்குதாரர் என கூறிபெண்ணிடம் ரூ.8 லட்சம் மோடிதம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
- சீட்டு நிறுவனத்தில் பங்குதாரர் என கூறினார்
- பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோடி
- தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே து.ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). மனைவி வித்யா (35), மைத்துனர் ரகுநாதன் (31) இவர்கள் மூவரும் சேர்ந்து அந்த பகுதியில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் அதே ஊரை சேர்ந்த மைதிலியிடம் (40). எங்கள் நிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்தால் அதிக லாபத் தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய மைதிலி பல்வேறு தவணைகளில் ரூ. 8 லட்சம் வரை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மைதிலி சீட்டு நிறுவனக் கணக்கினை கேட்டார். ஆனால் அவர்கள் தரவில்லை. லாபத்தில் பங்கு கேட்டும் தரவில்லையாம். இதனால் விரக்தியடைந்த மைதிலி, கொடுத்த அசல் பணத்தையாவது திருப்பி தருமாறு கேட்ட போது பிரபாகரன் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனால் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த மைதிலி, திருச்சி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் துறையூர் போலீசார் பணமோசடி செய்ததாக தம்பதி உள்பட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, தலைமறைவானவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். துறையூர் அருகே சீட்டு நிறுவனம் நடத்துவதாக கூறி, பண மோசடி நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






