என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்துணவில் வாழைப்பழத்தை சேர்க்க கோரிக்கை
- தொட்டியம் ஒன்றிய விவசாய சங்க மாநாடுசத்துணவில் வாழைப்பழத்தை சேர்க்க கோரிக்கை
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு எம்.புதூரில் நடைபெற்றது . இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாய சங்க தொட்டியம் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஆத்மநாதன், குழந்தைவேல், ஜான் கென்னடி,சுப்பிரமணியன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் அரங்கூர் கிளைக் செயலாளர் .கமல் வரவேற்றார்.
இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, தொட்டியம் ஒன்றியத் தலைவர் நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்த மாநாட்டில் தொட்டியம்- லாலாபேட்டைக்கு இடையே காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும். தொட்டியம் பகுதியில் உள்ள அனைத்து பாசன வாய்க்கால்களில் உள்ள பாதுகாப்பு கட்டைகளை சீர்படுத்த வேண்டும். மாயனூர் கதவணை அருகில் சீலைபிள்ளையார்புத்தூர் வடகரை வாய்க்காலில் புதிய மதகு அமைக்க வேண்டும். அனைத்து பாசன வாய்க்களையும் தூர்வார வேண்டும். தொட்டியம் பகுதி வாழை, வெற்றிலை பயிர்களுக்கு வருடம் முழுவதும் தண்ணீர் தர வேண்டும்.
வாழை, வெற்றிலைக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். எம்.புத்தூர் சத்திரத்தில் உள்ள வாழை பதப்படுத்தும் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் தமிழ்நாடு விவசாய சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் அரங்கூர் ஆர். மூர்த்தி நன்றி கூறினார்.






