என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • சம்பா சாகுபடி போதிய தண்ணீர் இல்லாமல் முற்றிலும் கருகி நாசமானதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
    • பெருவளை வாய்க்கால், உய்ய கொண்ட வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள குளம் மற்றும் ஏரிகளை தண்ணீர் நிரப்புவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதேபோல் சம்பா சாகுபடி போதிய தண்ணீர் இல்லாமல் முற்றிலும் கருகி நாசமானதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தனர்.

    மேலும் பெருவளை வாய்க்கால், உய்ய கொண்ட வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

    இந்த கூட்டத்தின்போது கலெக்டர் பிரதீப்குமார் விவசாயத்தை போற்றும் விதமான பச்சை துண்டு அணிந்தபடி குறைகள் கேட்டார். இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • திருவண்ணாமலை-சென்னை தடத்தில் 50 கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பவுர்ணமியையொட்டி நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த பஸ்கள் கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், மணப்பாறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், ராமேசுவரம், கரூர் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

    மேலும் திருவண்ணாமலை-சென்னை தடத்தில் 50 கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ்கள் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • கர்நாடக அரசை கண்டித்து திருச்சி முக்கொம்புவில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்
    • காவிரி நீர் பங்கிட்டு உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நடைபெற்றது

    திருச்சி,

    காவிரி நீர் பங்கிட்டு உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நெய்வேலி கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும்,

    தமிழகத்தில் உள்ள ஆறுகள் ஏரி குளங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முக்கொம்பு மேலணையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.தொடர்ந்து முக்கொம்பு காவிரி பாலத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக விவசாயிகள் காவிரி பாலத்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.

    இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநிலத் தலைவர் சின்னசாமி, மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • திருச்சி அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலியானார்
    • இனாம்குளத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எம்.ஆர். பாளையம் சனமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகன் ஜேம்ஸ் ஜெபகரன் (வயது 19) இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.தனது தாய் தந்தையுடன் புழுதேரி அருகே உள்ள சித்தபட்டியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்தனர்.இந்நிலையில் வழக்கம் போல ஜேம்ஸ் ஜெபகரன் கல்லூரிக்கு சென்று விட்டு அம்மாபேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு திருச்சி- திண்டுக்கல் சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜேம்ஸ் ஜெபகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்து அங்கு வந்த இனாம்குளத்தூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த மணப்பாறை பெத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (48 )என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி அருகே அண்ணன், தம்பியை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    ராம்ஜிநகர்,

    திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு மெயின் ரோடு, நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28) இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் கருணாகரன் மளிகை கடையின் அருகிலேயே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கருணாகரன் தனது காரில் மேலப்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் கொடியாலம் கீழ சுப்பராயன்பட்டியை சேர்ந்த பிரசாத் அவரது நண்பர்கள் வீரப்பன் (எ) வீரபாகு மற்றும் அதே பகுதியை சேர்ந்த கவி ஆகிய 3 பேரும் காரை முந்தி செல்ல முயன்றனர்.

    அப்போது கருணாகரனுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதில் ஆத்திரம் தீராத பிரசாந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் வீரப்பன் (எ) வீரபாகு, கவி, சம்பத்குமார் மற்றும் கொடியாலம் மேல சுப்பராயன்பட்டியை சேர்ந்த சிவா (எ) சிவனேசன் அதே பகுதியை சேர்ந்த பூபதி ஆகியோருடன் கருணாகரனின் காய் கடைக்கு வந்து தகராறு செய்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் குத்து கோளால் கருணாகரனை குத்தி உள்ளனர்.

    இதனைப் பார்த்து பக்கத்தில் காய்கறி கடையில் இருந்த அவரது தம்பி ராஜா தடுக்க வந்துள்ளார். இதில் அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவத்தை அடுத்து 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    சம்பவமறிந்து அங்கு வந்த சோமரசம்பேட்டை போலீசார் தப்பி ஓடிய பிரசாந்த், பூபதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வீரபாகுவின் தந்தை ஆறுமுகம் என்பவர் தனது மகன் மற்றும் கூட்டாளிகளை தாக்கியதாக காயம் பட்ட கருணாகரன், ராஜா மீது புகார் அளித்துள்ளார். 2 புகார்களையும் தனித்தனியாக பெற்றுக் கொண்ட சோமரசம்பேட்டை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • திருச்சியில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஏராளமானோர் மின்வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

    திருச்சி,

    ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், 1. 12 .2019க்கு பிறகு பணியில் சேர்ந்த கேங்மேன் உள்ளிட்ட அனைவருக்கும் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டக் கிளை சார்பில் இன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், டி.என்.பி.இ.ஓ மாநில துணைப் பொதுச் செயலாளர் இருதயராஜ், டி.என்.இ.பி. டபிள்யு.ஒ. வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்.இதில் ஏராளமானோர் மின்வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் பழனியாண்டி நன்றி கூறினார்.

    • திருச்சியில் கள்ள நோட்டு வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் இலங்கை நபர்
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் தேடுதல் வேட்டை

    திருச்சி,

    சென்னை சைதாப்பேட்டை ராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்கிற கீதா அண்ணன் (வயது 56). இலங்கை அகதியான இந்த வாலிபர் செங்கல்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தார். பின்னர் கடந்த 2000ல் திருச்சியில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்த் உள்பட 9 பேரை கைது செய்தனர்.பின்னர் இந்த வழக்கு திருச்சி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    கைதாகி ஜாமீனில் வந்த ஆனந்த் ஓரிரு முறை கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நிலை வந்த போது திடீரென தலைமறைவாகிவிட்டார்.கடந்த 2004 பிப்ரவரி 6ம் தேதி முதல் அவரை காணவில்லை.

    இதற்கிடையே இந்த வழக்கில் ஆனந்துடன் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ஆனால் ஆனந்த் தலைமறைவாக இருப்பதால் அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் இதுவரை தீர்ப்பு கூறப்படவில்லை.

    19 ஆண்டுகளை கடந்தும் வழக்கினை முடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.சென்னையில் வசித்து வரும் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி திரும்பி உள்ளனர்.

    • முக்கொம்பு காவிரி பாலத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • விவசாயிகள் போராட்டம் காரணமாக முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    திருச்சி:

    காவிரி நீர் பங்கிட்டு உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நெய்வேலி கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும்,

    தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முக்கொம்பு மேலணையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    தொடர்ந்து முக்கொம்பு காவிரி பாலத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக விவசாயிகள் காவிரி பாலத்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.

    இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநிலத் தலைவர் சின்னசாமி, மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு 3 தினங்களுக்கு முன்பு ஊருக்கு சென்றார்.
    • கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. எந்த சத்தமும் வரவில்லை.

    மணப்பாறை

    திருச்சி மணப்பாறை வையம்பட்டி குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது முதல் மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியருக்கு மணிமேகலை (வயது 15) சஞ்சய் (16) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி உடல் நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார். அதன் பின்னர் ராஜரத்தினம் கலையரசி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

    இவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கணவரிடம் விவாகரத்து பெற்றார். பின்னர் கலையரசி ராஜரத்தினத்தை 2-வதாக திருமணம் செய்தார்.

    சித்தி கலையரசி பராமரிப்பில் ராஜரத்தினத்தின் மகள் மணிமேகலை, மகன் சஞ்சய் ஆகியோர் இருந்தனர். இதில் மணிமேகலை திருச்சியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதியில் தங்கி எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். சஞ்சய் அருகாமையில் உள்ள ஒரு ஐடிஐ பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.

    ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு 3 தினங்களுக்கு முன்பு ஊருக்கு சென்றார்.

    நேற்று இரவு சித்தி கலையரசியுடன் மணிமேகலைக்கு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இறந்த தனது தாயார் மகாலட்சுமியின் சேலையை கலையரசி அணிந்து இருந்ததை கண்டு மணிமேகலை எதற்காக எனது தாயாரின் சேலையை எடுத்து அணிந்தீர்கள் என கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் படுத்து தூங்கினர். மணிமேகலை தனி அறையில் போய் படுத்துக் கொண்டார்.

    இன்று அதிகாலை வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த தந்தை ராஜரத்தினம் மகளின் அறை கதவை தட்டினார்.

    கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. எந்த சத்தமும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் கதவை உடைத்து பார்த்த போது மணிமேகலை பேன் கொக்கியில் தூக்கில் படமாக தொங்கிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடம் விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து கலையரசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாயை இழந்த எஸ்எஸ்எல்சி மாணவி தனது சித்தியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    தொட்டியம்

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் எஸ்.பி.சி.சி நண்பர்கள் நடத்திய 10-ம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி காட்டுப்புத்தூர் ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    4- நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வெற்றி பெற்ற அணியினருக்கு காட்டுப்புத்தூர் பங்காரு மருத்துவமனை மருத்துவர் பி. ரமேஷ், மற்றும் காட்டுப்புத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    அதில் முதல் பரிசைப் பெற்ற காட்டுப்புத்தூர் சரவணன் பிரதர்ஸ் அணியினருக்கு ரூ.25- ஆயிரம் ரொக்கப் பரிசும் மற்றும் பதக்கம், 5-அடி உயரம் உள்ள சுழற்கோப்பையையும். இரண்டாம் பரிசைப் பெற்ற காட்டுப்புத்தூர் எஸ்.எம். பிரதர்ஸ் அணியினருக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்க பரிசும் 4 -அடி உயரமுள்ள சுழற் கோப்பையும், மூன்றாம் பரிசைப்பெற்ற குளித்தலை சங்கர் பாய்ஸ் அணியினருக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்க பரிசும் 3 -அடி உயரம் உள்ள சுழற் கோப்பையும் வழங்கினர் . நான்காம் பரிசைபப் தோப்புத்தோட்டம் அணியினருக்கு ரூபாய் 10 -ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் 2-அடி உயரம் உள்ள சுழற் கோப்பையும் வழங்கி பாராட்டினர்.

    இந்த கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக எஸ்.பி.சி.சி. நண்பர்கள் குழுவைச் சேர்ந்த எஸ்.சங்கர் எஸ்.தினேஷ் கே.சண்முகவேல் மற்றும் எஸ்.பி.சி.சி. நண்பர்கள் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது.
    • அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டை திருடி சென்றனர்

    துவாக்குடி

    திருவெறும்பூர் அருகே அசூர் பொய்கை குடி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 44). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து கோபிநாத் உடனடியாக துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இரு சக்கர வாகனத்தில் ஆட்டை திருடி சென்ற அசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (27) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (25) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அ.தி.மு.க. சார்பில் பூத்க மிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் காந்திமார் கெட் பகுதியில் நடைபெற் றது.
    • பொது செயலா ளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் வாரியாக பூத் கமிட்டி உறுப்பினர்களை விரைவில் சந்திக்கவுள்ளார்.

    திருச்சி

    திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத்க மிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் காந்திமார் கெட் பகுதியில் நடைபெற் றது.

    திருச்சி, மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமை வகித்தார். கழக அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான கோகுல இந்திரா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பொது செயலா ளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் வாரியாக பூத் கமிட்டி உறுப்பினர்களை விரைவில் சந்திக்கவுள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி அமைக்கப்படும் பூத் கமிட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடத்த முக்கிய காரணம் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவே.

    எனவே நிர்வாகிகள் தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு லட்சக்கணக்கில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அரங்கம் நிர்வாகிகள் மற்றும் தொண் டர்களால் நிரம்பி வழிந்தது. இதனால் கட்சியினர் உற்சா கம் அடைந்தனர். இதில் நிர்வாகிகள் அய்யப்பன், கேசி. பரமசிவம், ஜாக்குலின், வனிதா, பத்மநாதன், வெல்லமண்டி பெருமாள், பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், அன்பழகன், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி, கலை வாணன், என்ஜினியர் இப்ராம்ஷா, முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,

    நிர்வாகிகள் கலிலுல் ரகுமான், தொழிற்சங்கம் ராஜேந்திரன், இலியாஸ், தென்னூர் அப்பாஸ் மற்றும் முன்னாள் கோட்டத் தலை வர் ஞானசேகர், என்ஜி னியர் ரமேஷ், பாலாஜி, நாட்ஸ் சொக்கலிங்கம், ஜோதிவாணன், ஆடிட்டர் ரவி, குரு, என்ஜினியர் கிரு ஷாந்த், ரோஜர், சுரேந்தர், தென்னூர் ஷாஜஹான்,

    பாலக்கரை ரவீந்திரன், வசந்தம் செல்வமணி, குருமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், அப்பாக்குட்டி, கன்னி யப்பன், வக்கீல்கள் கங்கைச்செல்வன், சுரேஷ், முல்லை சுரேஷ் ஜெயரா மன், சசிகுமார், நிர்வாகிகள் கே.டி. அன்புரோஸ், ரஜினி காந்த், டிபன் கடை கார்த்தி கேயன், வரகனேரி சரவ ணன், எடத்தெரு பாபு, காசிபாளையம் சுரேஷ் குமார், பொன்.அகிலாண் டம், உடையான் பட்டி செல்வம், வாழைக்காய் மண்டி சுரேஷ், கே.டி.ஏ. ஆனந்தராஜ்,

    என்ஜினியர் ராஜா என்கிற சிவசங்கர ராஜ வேலு, தர்கா காஜா, கேபிள் முஸ்தபா, கயிலை கோபி, வட்டச் செயலாளர் வினோத்குமார், பாலக்கரை சக்திவேல், வணக்கம் சோமு, டைமன் தாமோ தரன், நத்தர்ஷா,கட்பீஸ் ரமேஷ் அரப்ஷா, கே.பி.ராமநாதன், ஆரி, ஸ்பீடு வேலு, தென்னூர் ராஜா, கல்லுக்குழி முருகன், எம்.ஜே.பி.வெஸ்லி, புத்தூர் சதீஷ்குமார்,

    கே.சி.பி. ஆனந்த், ரமணிலால், சந்தோஷ்ராஜ், வக்கீல் புவனேஸ்வரி, ஜெயஸ்ரீ, மகாலட்சுமி, என்ஜீனியர் சிராஜுதீன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×