என் மலர்
திருச்சிராப்பள்ளி
- கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
பெரம்பலூர் மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் ராமராஜ் (வயது 26), மீன் வியாபாரி. இவர் தினமும் திருச்சி புத்தூர் , குழுமணி ரோட்டில் உள்ள விளங்கி மீன் மார்க்கெட்டில் மீன் கொள்முதல் செய்வது வழக்கம்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் ராமராஜ் வழக்கம்போல மீன் கொள்முதல் செய்வதற்காக பெரம்பலூரில் இருந்து காரில் வந்தர். அவருடன் நண்பர்கள் 4 பேரும் வந்தனர். மீன் மார்க்கெட்டில் ரமாராஜ் மீன் கொள்முதல் செய்தபின் நண்பர்கள் அமர்ந்திருந்த காருக்கு வந்தார்.
அப்போது 2 இருசக்கர வாகனங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் ராமராஜை வழிமறித்தனர். திடீரென 4 பேரும் ராமராஜை அரிவாள், கத்தியால் வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத ராமராஜ் அந்த கும்பலிடம் இருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ராமராஜ் அங்குமிங்கும் ஓடினார்.
ஆனாலும் விடாது துரத்திய அந்த கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தி அரிவாளால் வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த ராமராஜ் அலறி துடித்தபடியே கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார்.
உடனே கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மார்க்கெட்டில் மீன் வாங்க வந்த பொதுமக்கள் இந்த கொடூர சம்பவத்தை கண்டு அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ராமராஜ் உடலை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர். ராமராஜ் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பழிக்கு பழியாக அவரை கொன்று இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கொலையாளிகளை பிடிக்க உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நாலாபுறமும் சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தலைமையில் ஏர்போர்ட்டில் உள்ள விஜய் மஹாலில் நடைபெற்றது.
- ட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி
திருச்சி ஏர்போர்ட பகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலையில், மாநகர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும் அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தலைமையில் ஏர்போர்ட்டில் உள்ள விஜய் மஹாலில் நடைபெற்றது.
இதில் மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணைச் செயலாளர் வனிதா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், தொழிற்சங்கம் ராஜேந்திரன், மீனவர் அணி அப்பாஸ், பாசறை இலியாஸ்,
என்ஜினீயர் இப்ராம் ஷா, ஏர்போர்ட் பகுதி துணைச் செயலாளரும், கவுன்சிலருமான அம்பிகாபதி, கவுன்சிலர் அரவிந்தன், பீடி பிரிவு சகாபுதீன், என்ஜினீயர் ரமேஷ், சொக்கலிங்கம், பாலாஜி, ஆடிட்டர் ரவி, ஜோதிவாணன், ஆர்.கே.செல்வக்குமார். மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் செல்வராஜ், ராஜ் இளங்கோவன, மனோஜ்குமார்,
எல்.பி.நாகராஜ், உடையான்பட்டி செல்வம், வட்டச் செயலாளர்கள் செல்லப்பா, ஹரிதாஸ், சரவணன், விநாயகமூர்த்தி, சதீஸ்குமார், ராஜசேகரன், கல்லுக்குழி முருகன், மகாதேவன், குமார், டைமன்ட் தாமோதரன்,
தலைமை கழக பேச்சாளர்கள் பொம்மாசி பாலமுத்து, சிந்தை ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தனது மணிபர்சை மேஜை மீது வைத்து விட்டு அலுவலக வேலையாக பக்கத்து அறைக்கு சென்றார்.
- அப்போது மர்ம நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் புகுந்து மணி பர்ஸை திருடிவிட்டு சென்றார்.
திருச்சி
திருச்சி கலெக்டர் அலுவலக குற்ற மேலாளர் அலுவலகத்தில் மேலாளராக இருப்பவர் சண்முகசுந்தரி (வயது 49).
இவர் தனது மணிபர்சை மேஜை மீது வைத்து விட்டு அலுவலக வேலையாக பக்கத்து அறைக்கு சென்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் புகுந்து மணி பர்ஸை திருடிவிட்டு சென்றார். அதில் ரூ. 9 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு, டெபிட் கார்டு போன்றவை இருந்தது.
இதுகுறித்து அவர் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரியின் மணி பசை திருடிய நாமக்கல் பரமத்தி வேலூர் வெட்டிக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் ராஜா என்பவரை கைது செய்து பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
- இவர் பெரியசாமி என்பவரிடம் நிலம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார்.
- யாருக்கும் பவர் பத்திரம் செய்து கொடுக்கவில்லை என்பது தெரிய வந்தது
திருச்சி
திருச்சி அமராவதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 67). ரியல் எஸ்டேட் புரோக்கர்.இவர் பெரியசாமி என்பவரிடம் நிலம் வாங்க வேண்டும் என கூறியுள்ளார். இதை அடுத்து அவர் திருச்சி கே.சாத்தனூர் கவி பாரதி நகரில் உள்ள பர்மா அகதிக்கு சொந்தமான ஒரு இடத்தை காண்பித்துள்ளார்.
அந்த இடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 1200 சதுர அடி இடம் ஆகும். இந்த நிலத்தை சங்கர் என்பவருக்கு பவர் பத்திரம் செய்து கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.பின்னர் பாபுராஜிடம் ரூ.15 லட்சம் வாங்கிக் கொண்டு அந்த நிலத்தை அவரது பெயருக்கு போலியான ஆவணங்கள் மூலம் கே.சாத்தனூர் சப்ரி-ஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். பின்னர் விசாரித்த போது அந்த நிலம் பர்மா அகதியான காளி என்பவரது பெயரில் தான் இருக்கிறது.
யாருக்கும் பவர் பத்திரம் செய்து கொடுக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் பாபுராஜ் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து திருச்சி கே.கே. நகர் கே. சாத்தனூர் கவி பாரதி நகரை சேர்ந்த சங்கர் (வயது 56 )என்பவரை கைது செய்தார் மேலும் இது தொடர்பாக மதியழகன், புவனேஸ்வரி பெரியசாமி, தியாகராஜன் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- இவர் பால்பண்ணை பகுதியில் உள்ள உயர்தர உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
- கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியது
திருச்சி, காட்டூர் பாரதிதாசன் நகர் 10 வது தெருவைச் சேர்ந்தவர் வடிவேலன் (வயது45). இவர் பால்பண்ணை பகுதியில் உள்ள உயர்தர உணவகத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாப்பாக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் போலீசார் வைத்துள்ள இரும்பு தடுப்பை (பேரிகார்டு) கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த லாரி அவரது வாகனத்தில் மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு 4 மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்
- நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 46).
இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த 23-ந் தேதி அதிகாலை சுமார் 3 மணி அளவில் ரவிசந்திரன் வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு 4 மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதில் வீடு மட்டும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த ராகுல் (22), சச்சின் (24), ராக்கி என்கிற ராகேஷ் (22), கீழ கல்கண்டார் கோட்டை அண்ணா நகரை சேர்ந்த லோகேஷ் (23) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் லோகேஷை திருவெறும்பூர் போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் மற்ற 3 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று ராக்கி ( எ) ராகேஷ் , சச்சின் ஆகிய இருவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்து திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த வழக்கில் ராகுலை போலீசார் தேடி வருகின்றனர்.
- கைதான சத்யமூர்த்தி துவாக்குடி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
- சத்தியமூர்த்தியின் பாலியல் தொல்லையால் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 68). இவர் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் தட்டச்சு பயிற்சி மையம் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த இன்ஸ்டிட்யூட்டிற்கு அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான இளம் பெண்கள் தட்டச்சு பயில்வதற்காக சென்றனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வந்தது.
இந்த நிலையில் தட்டச்சு பயில்வதற்கு வந்த ஒரு கல்லூரி மாணவிக்கு சத்தியமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சடைந்த அந்த மாணவி பயிற்சிக்கு செல்வதை பாதியில் நிறுத்தினார்.
இதையடுத்து பெற்றோர் மகளிடம் கேட்டபோது, நடந்த விவரத்தை கூறி அழுதுள்ளார். உடனே அந்த மாணவியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி சத்தியமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரது ஆண்ட்ராய்டு செல்போனை வாங்கி சோதனையிட்டபோது அதில் தட்டச்சு பயில்வதற்காக வந்த இளம்பெண்கள் மற்றும் மாணவிகளின் புகைப்படங்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த மாணவிகளுக்கு தெரியாமல் அங்கங்களை புகைப்படம் எடுத்து ரசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கைதான சத்யமூர்த்தி துவாக்குடி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிக்காலத்தின் போதே இந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டை தொடங்கி நடத்தி வந்துள்ளார். 30 ஆண்டுகளாக இந்த இன்ஸ்டிட்யூட் இயங்கி வருகிறது. ஆகவே சத்தியமூர்த்தியின் பாலியல் தொல்லையால் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாலியல் குற்றச்சாட்டில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலை வழக்கு ஒன்று உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- அதை தொடர்ந்து சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி
ஸ்ரீரங்கம் சிங்கர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆட்டுக்குட்டி சுரேஷ்(வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அடிதடியில் ஈடுபட்டதாக 5 வழக்குகளும், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஒரு வழக்கும், கொலை வழக்கு ஒன்று உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் சுரேஷ் அதே பகுதியை சேர்ந்த படையப்பா என்பவருடன் சேர்ந்து பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் காரணமாக பூக்கடையில் வேலை செய்யும் தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.
இதுபற்றி அந்த தொழிலாளி கொடுத்த புகாரின்பேரில் ரவுடி சுரேஷ், படையப்பா ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ரவுடி சுரேஷ் தொடர்ந்து பொது அமைதிக்கு தொந்தரவு செய்துவந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிசனருக்கு ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் பரிந்துரை செய்தார். அதை ஏற்று ரவுடி சுரேசை குண்டர் சட்டத்தில் சிரையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிசனர் காமினி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
- மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரேவதியின் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
- இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி
புதுக்கோட்டை அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ரேவதி (வயது 38). இவர்களது மகள் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் ரேவதி நேற்று பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்துக்கு வந்தார். பின்னர் கூட்டம் முடிந்து தனது ஊருக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரேவதியின் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
இதுபற்றி ரேவதி அளித்த புகாரின்பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது
- அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி
திருச்சி புத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருஞ்சோழன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் லாட்டரி விற்றதாக உறையூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் மற்றும் ரூ. 5 ஆயிரம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி ஆண்டாள் வீதி பகுதியில் கஞ்சா விற்றதாக தேவேந்திரன் என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர் . அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாப்பிள்ளை தேடியும் திருமணம் கைகூடவில்லை.
- வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
திருச்சி உறையூர் வாணிப செட்டி தெருவை சேர்ந்தவர் மருதை வீரன். இவரது மகள் அபிநயா (வயது 23).திரும ணமாகாத இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு உடல் பருமன் அதிகரித்துள்ளது. இதனால் மாப்பிள்ளை தேடியும் திருமணம் கைகூடவில்லை.
இந்த 2 காரணங்களாலும் விரக்தியடைந்த அபிநயா வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை மருதை வீரன் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
கார்பெண்டர் சாவு
திருச்சி கே.சாத்தனூர் திருமலை சமுத்திரம் முள்ளிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 45). கார்பெண்டர். இவர் தனது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி பரிதா பமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரியின் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர்
- ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார்.
திருச்சி
திருச்சி தெற்கு தாராநல்லூர் சிவசக்தி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் நந்தகுமார் (வயது 37). பைனான்ஸ் அதிபர்.
இவரிடம் திருச்சி மாவட்டம் லால்குடி நன்னிமங்லத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் அணுகினர்.
பின்னர் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்பிய நந்தகுமார், கணவன், மனைவி இருவரிடமும் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்.
பின்னர் எந்த லாபத் தொகையும் அவர்கள் கொடுக்காததால், நந்தகுமார் தான் கொடுத்த பணத்தை அவர்களிடம் திரும்ப கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நந்தகுமார், இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா கணவன், மனைவி ஆகிய 2 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






