என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள்
தொட்டியம்
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் எஸ்.பி.சி.சி நண்பர்கள் நடத்திய 10-ம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி காட்டுப்புத்தூர் ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
4- நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டனர்.
முடிவில் வெற்றி பெற்ற அணியினருக்கு காட்டுப்புத்தூர் பங்காரு மருத்துவமனை மருத்துவர் பி. ரமேஷ், மற்றும் காட்டுப்புத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
அதில் முதல் பரிசைப் பெற்ற காட்டுப்புத்தூர் சரவணன் பிரதர்ஸ் அணியினருக்கு ரூ.25- ஆயிரம் ரொக்கப் பரிசும் மற்றும் பதக்கம், 5-அடி உயரம் உள்ள சுழற்கோப்பையையும். இரண்டாம் பரிசைப் பெற்ற காட்டுப்புத்தூர் எஸ்.எம். பிரதர்ஸ் அணியினருக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்க பரிசும் 4 -அடி உயரமுள்ள சுழற் கோப்பையும், மூன்றாம் பரிசைப்பெற்ற குளித்தலை சங்கர் பாய்ஸ் அணியினருக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்க பரிசும் 3 -அடி உயரம் உள்ள சுழற் கோப்பையும் வழங்கினர் . நான்காம் பரிசைபப் தோப்புத்தோட்டம் அணியினருக்கு ரூபாய் 10 -ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் 2-அடி உயரம் உள்ள சுழற் கோப்பையும் வழங்கி பாராட்டினர்.
இந்த கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக எஸ்.பி.சி.சி. நண்பர்கள் குழுவைச் சேர்ந்த எஸ்.சங்கர் எஸ்.தினேஷ் கே.சண்முகவேல் மற்றும் எஸ்.பி.சி.சி. நண்பர்கள் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.






