search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disappearance"

    • ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர் விஜயகாந்த்.
    • சினிமாவில் சிகரம் தொட்டு அரசியலுக்கு காலடி வைக்கும் போது கூட மதுரை மண்ணில் தான் விஜயகாந்த் முதல் அரசியல் மாநாட்டை தொடங்கி கட்சி பெயரையும் அறிவித்தார்

    ஒருவனின் மரணத்தில்... குழந்தை அழுதால் அவன் நல்ல தகப்பன்..., மனைவி அழுதால் அவன் நல்ல கணவன்..., ஆனால் அந்த ஊரே அழுதால் அவன் தான் தலைவன்...!!

    இது ரமணா படத்தில் நடிகர் விஜயகாந்த் பேசிய பஞ்ச் டயலாக். எப்போதுமே பஞ்ச் டயலாக் பேசுவதில் ரஜினிக்கு போட்டியாக விஜயகாந்த் படங்களிலும் குறையிருக்காது. தனது ரசிகர்களை மகிழ்விக்க அரசியல் நெடி கலந்த பஞ்ச் டயலாக்குகள் பேசுவதில் விஜயகாந்த்துக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம்.

    சிறு வயது முதலே தான் வளர்ந்த மதுரை மண்மீது அளவற்ற பாசம் கொண்டவர் தான் விஜயகாந்த். 1991 ஆம் ஆண்டு வெளிவந்த மாநகர காவல் திரைப்படத்தில் "வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை" என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரசித்தம் பெற்றது என்றால் மிகையில்லை.

    சினிமாவில் சிகரம் தொட்டு அரசியலுக்கு காலடி வைக்கும் போது கூட மதுரை மண்ணில் தான் விஜயகாந்த் முதல் அரசியல் மாநாட்டை தொடங்கி கட்சி பெயரையும் அறிவித்தார். அந்த அளவுக்கு தன்னை வளர்ந்த மதுரை மண்ணை தாயாக நேசித்தவர் விஜயகாந்த். அவரது ஆரம்ப கால வாழ்க்கையின் சில பிளாஷ் பேக், இதோ...

    அழகர்சாமி- ஆண்டாள் தம்பதிக்கு பிறந்த விஜயராஜ் மதுரை தெற்கு வாசல் பகுதியில் பள்ளி படிப்பை தொடர அவரது தந்தை கீரைத்துரை பகுதியில் ரைஸ்மில் நடத்தி வந்தார். விஜயராஜூக்கு படிப்பு சரியாக வராததால் பத்தாம் வகுப்போடு பள்ளிக் கூடம் செல்வதற்கு குட்பை சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த நேரத்தில் தன் தந்தை நடத்தி வந்த ரைஸ்மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்தார் விஜயராஜ். அப்போதே அவருக்கு சினிமா மீது அளவற்ற மோகம் இருந்தது. பகலில் ரைஸ் மில்லில் வேலை பார்த்துவிட்டு இரவுகளில் சினிமா கொட்டகைகளில் படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டார் அதிலும் எம்.ஜி. ஆர். படங்களை விரும்பி பார்த்து வந்தார் விஜயராஜ்

    எம்.ஜி.ஆர். போல நாமும் பிற்காலத்தில் நடிகராக, தலைவராக வரவேண்டும் என்று உத்வேகம் அப்போதே அவருக்குள் முளைவிட தொடங்கியது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தனது வாலிப நண்பர்களுடன் அவ்வப்போது பேசிக் கொண்டும், இரவு நேரங்களில் பார்த்த சினிமாவின் கதைகளை அப்படியே அவர்களுக்கு பாடம் எடுப்பது போல ஒப்பிப்பதும் அவரது அன்றாட வழக்கமாக இருந்தது .

    இந்த நேரத்தில் அவரது நண்பர்கள் மதுரை கரிமேடு பகுதியில் உள்ள ஒரு ஸ்டு டியோ இருக்கிறது அதன் பெயரே ராசி. அந்த ஸ்டுடியோவில் போய் படம் எடுத்தால் நீ சினிமாவுக்கு போய்விடலாம் என்று ஆசை காட்டினார்கள். எப்போதும் சினிமா வாய்ப்புக்காக கனவு கண்ட விஜயராஜுக்கு அது நன்றாக தோன்றி யது. இந்த வாய்ப்பை கெட்டி யாக பிடித்துக் கொள்ள விரும்பினார் விஜயராஜ்.


    நேராக கரிமேடு பகுதியில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்றார். ஸ்டுடியோவின் உரிமையாளரான ஆசைத்தம்பியை சந்தித்து தன்னை அறிமுகம் செய்தார் விஜயராஜ் அப்போது அவரும் மதுரைக்கார வாலிபரின் ஆசைக்கு பச்சை கொடி அசைத்து தானும் உதவுவதாக கூறினார். ஆசை தம்பிக்கு பல்வேறு பணிகள் இருந்த காரணத்தால் இரவு 11 மணிக்கு மேல் வரும்படி விஜயராஜியிடம் கூறி அனுப்பி வைத்தார். விஜயராஜ் சோர்ந்து விடவில்லை பகலில் ரைஸ்மிலில் பணிபுரிந்து விட்டு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அந்த ஸ்டூடியோவில் விதவித மாக போஸ்களை கொடுத்து தன்னை ஒரு திரை கலைஞ ராக உருவாக்க அடித்தள மிட்டார். ஆசைத்தம்பி எடுத்த நள்ளிரவு நேர ஸ்டில்கள் தான் விஜயராஜின் சினிமா ஆசைக்கு கை கொடுத்து வாய்ப்புக்கு வலுசேர்க்கும் வரப்பிரசாதமாக அமைந்தது.

    இந்த படங்களை எடுத்து கொண்டு பல சினிமா கம்பெனிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் டைரக்டர்கள் என்று ஏறி இறங்கினார் விஜயராஜ். 1979-ம் ஆண்டு "இனிக்கும் இளமை" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் தான் ரஜினி காந்த், கமலஹாசனுக்கு போட்டியாக விஜயராஜ் உருவெடுத்தார். அவரது நண்பர்களின் ஆலோசனைப்படி தனது பெயரையும் விஜயகாந்த் என்று மாற்றிக் கொண்டு திரையுலகத்தில் தடம் பதித்தார். அவர் தொட்ட சிகரம் மலைப்பானது. தனது நிறத்தால், உடல் தோற்றத்தால் தமிழ் திரையுலகில் பல்வேறு அவமானங்களையும் சந்திக்க விஜயகாந்த் தவறவில்லை. அவமானத்தை அவார்டாக மாற்றி மாபெரும் சாதனையை தமிழ் திரை உலகில் நிகழ்த்தினார் என்றால் அது விஜயகாந்த் ஒருவரால் தான் முடியும். ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தவர் விஜயகாந்த்.

    சினிமா துறை மட்டுமல்ல அரசியலிலும் மாபெரும் வெற்றியை விஜயகாந்த் பெற்றார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகி எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார். வாழ்நாளில் பலருக்கு ஏணியாக வாழ்ந்த வர். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வாசகத்தை பட்டித் தொட்டி எங்கும் ஒலிக்க செய்தவர் விஜயகாந்த். இவரது மரணம் மதுரை மண்ணில் நீங்காத சோக அலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முதல் மது ரையின் அனைத்து பகுதிக ளிலும் விஜயகாந்தின் சோக கீத திரை இசை அவரது நினைவை ஒலித்தபடி உள்ளன. அவனியாபுரம் பகுதியில் அவரது ரசிகர்கள் மொட்டை அடித்து மண்ணின் மைந்தனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் விஜயகாந்தின் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    படிப்பு வராவிட்டாலும் வந்த நடிப்பை ஒரு வாய்ப்பாக பிடித்து தமிழக திரையுலக மற்றும் அரசியல் வரலாற்றில் விஜயகாந்த் பிடித்த இடம் மகத்தானது யாரும் குறை சொல்ல முடியாத பொது வாழ்க்கைக்கு சொந்தக்கார ரான இந்த "நல்லவன்" புகழ் இம்மண்ணில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    • திருச்சியில் கள்ள நோட்டு வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் இலங்கை நபர்
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் தேடுதல் வேட்டை

    திருச்சி,

    சென்னை சைதாப்பேட்டை ராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்கிற கீதா அண்ணன் (வயது 56). இலங்கை அகதியான இந்த வாலிபர் செங்கல்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தார். பின்னர் கடந்த 2000ல் திருச்சியில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்த் உள்பட 9 பேரை கைது செய்தனர்.பின்னர் இந்த வழக்கு திருச்சி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    கைதாகி ஜாமீனில் வந்த ஆனந்த் ஓரிரு முறை கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நிலை வந்த போது திடீரென தலைமறைவாகிவிட்டார்.கடந்த 2004 பிப்ரவரி 6ம் தேதி முதல் அவரை காணவில்லை.

    இதற்கிடையே இந்த வழக்கில் ஆனந்துடன் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ஆனால் ஆனந்த் தலைமறைவாக இருப்பதால் அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் இதுவரை தீர்ப்பு கூறப்படவில்லை.

    19 ஆண்டுகளை கடந்தும் வழக்கினை முடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.சென்னையில் வசித்து வரும் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி திரும்பி உள்ளனர்.

    • நாளை சேலம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தார்.
    • 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா என்ற பெயரில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சையில் உள்ள வீட்டில் சசிகலா தற்போது தங்கியுள்ளார். கடந்த நான்கு நாட்களாக அவர் தஞ்சையில் இருந்தபடி திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் அவர் நாளை சேலம் மாவட்ட த்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தார்.

    ஆனால் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து நாளை துக்க நாளாக அனு சரிக்கப்படுகிறது.

    இதனால் நாளை சேலம் மாவட்ட சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக நாளை மறுநாள் அதாவது 12-ந் தேதி திங்கள் கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கும், 13-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஈரோடு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×