19 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் இலங்கை நபர்

திருச்சியில் கள்ள நோட்டு வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் இலங்கை நபர்சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் தேடுதல் வேட்டை
19 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் இலங்கை நபர்
Published on

திருச்சி,

சென்னை சைதாப்பேட்டை ராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்கிற கீதா அண்ணன் (வயது 56). இலங்கை அகதியான இந்த வாலிபர் செங்கல்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தார். பின்னர் கடந்த 2000ல் திருச்சியில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்த் உள்பட 9 பேரை கைது செய்தனர்.பின்னர் இந்த வழக்கு திருச்சி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கைதாகி ஜாமீனில் வந்த ஆனந்த் ஓரிரு முறை கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நிலை வந்த போது திடீரென தலைமறைவாகிவிட்டார்.கடந்த 2004 பிப்ரவரி 6ம் தேதி முதல் அவரை காணவில்லை.

இதற்கிடையே இந்த வழக்கில் ஆனந்துடன் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ஆனால் ஆனந்த் தலைமறைவாக இருப்பதால் அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் இதுவரை தீர்ப்பு கூறப்படவில்லை.

19 ஆண்டுகளை கடந்தும் வழக்கினை முடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.சென்னையில் வசித்து வரும் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி திரும்பி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com