என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணன், தம்பியை கத்தியால் குத்திய 2 பேர் கைது
    X

    அண்ணன், தம்பியை கத்தியால் குத்திய 2 பேர் கைது

    • திருச்சி அருகே அண்ணன், தம்பியை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

    ராம்ஜிநகர்,

    திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு மெயின் ரோடு, நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28) இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் கருணாகரன் மளிகை கடையின் அருகிலேயே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கருணாகரன் தனது காரில் மேலப்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் கொடியாலம் கீழ சுப்பராயன்பட்டியை சேர்ந்த பிரசாத் அவரது நண்பர்கள் வீரப்பன் (எ) வீரபாகு மற்றும் அதே பகுதியை சேர்ந்த கவி ஆகிய 3 பேரும் காரை முந்தி செல்ல முயன்றனர்.

    அப்போது கருணாகரனுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதில் ஆத்திரம் தீராத பிரசாந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் வீரப்பன் (எ) வீரபாகு, கவி, சம்பத்குமார் மற்றும் கொடியாலம் மேல சுப்பராயன்பட்டியை சேர்ந்த சிவா (எ) சிவனேசன் அதே பகுதியை சேர்ந்த பூபதி ஆகியோருடன் கருணாகரனின் காய் கடைக்கு வந்து தகராறு செய்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் குத்து கோளால் கருணாகரனை குத்தி உள்ளனர்.

    இதனைப் பார்த்து பக்கத்தில் காய்கறி கடையில் இருந்த அவரது தம்பி ராஜா தடுக்க வந்துள்ளார். இதில் அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவத்தை அடுத்து 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    சம்பவமறிந்து அங்கு வந்த சோமரசம்பேட்டை போலீசார் தப்பி ஓடிய பிரசாந்த், பூபதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வீரபாகுவின் தந்தை ஆறுமுகம் என்பவர் தனது மகன் மற்றும் கூட்டாளிகளை தாக்கியதாக காயம் பட்ட கருணாகரன், ராஜா மீது புகார் அளித்துள்ளார். 2 புகார்களையும் தனித்தனியாக பெற்றுக் கொண்ட சோமரசம்பேட்டை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×