என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி கல்லூரி மாணவர் பலி
    X

    கார் மோதி கல்லூரி மாணவர் பலி

    • திருச்சி அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலியானார்
    • இனாம்குளத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எம்.ஆர். பாளையம் சனமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகன் ஜேம்ஸ் ஜெபகரன் (வயது 19) இவர் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.தனது தாய் தந்தையுடன் புழுதேரி அருகே உள்ள சித்தபட்டியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்தனர்.இந்நிலையில் வழக்கம் போல ஜேம்ஸ் ஜெபகரன் கல்லூரிக்கு சென்று விட்டு அம்மாபேட்டை பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு திருச்சி- திண்டுக்கல் சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜேம்ஸ் ஜெபகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்து அங்கு வந்த இனாம்குளத்தூர் போலீசார் பிணத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த மணப்பாறை பெத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (48 )என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×