என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி டாக்டர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி பிரபாவதி (வயது 73). சம்பவத்தன்று இவர் வீட்டைப் பூட்டிவிட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் தங்க செயின், 7 கிராம் தோடு மற்றும் ரூ.32 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி தப்பி சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் சாம்சன்லியோ தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் டி ஷர்ட் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது.
    • தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் இச்சுற்றுலாவை வழி நடத்தினார்.

    தஞ்சாவூர்:

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் நேற்று 1-ந்தேதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு, தூய்மை பணி முகாம், சுற்றுலா விழிப்புணர்வு பேரணி, பாரம்பரிய நடை பயணம், கைவினைப் பொருள் செயல்முறை விளக்கம், சுற்றுலா கருத்தரங்கு, கோலப்போட்டி, புகைப்பட ப்போட்டி, ஓவியப்போட்டி, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

    இந்நிலையில் நிறைவு நாளான நேற்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், புதுக்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் 35 பேருக்கு இன்ப சுற்றுலா தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார். தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் டி ஷர்ட் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோவில், ராஜாளி பறவைகள் பூங்கா, தஞ்சாவூர் அருங்காட்சியகம், 7டி திரையரங்கம் மற்றும் சிறுவர் தொடர்வண்டி பயணம் என குழந்தைகள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். கலெக்டரின் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் தஞ்சை தாரகைகளின் ஒருங்கி ணைப்பாளர் மணி மேகலை தலா ஒரு ஜோடி தலையாட்டி பொம்மையை நினைவு பரிசாக வழங்கினார். தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் இச்சுற்று லாவை வழி நடத்தினார்.

    • ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்தனர்.
    • அனைத்து விளையாட்டு சாதனங்களிலும் சிறுவர் சிறுமியர் ஏறி விளையாடி கூச்சலிட்டு மகிழ்ந்தனர்.

    பூதலூர்:

    தொடர்ந்து விடுமுறை நாளாக அமைந்ததால் நேற்று கல்லணையில் கூட்டம் அலைமோதியது. கார் நிறுத்துமிடங்களில் இடம் இல்லாததால் கொள்ளிடம் புதிய பாலத்தில் இரு இருபுறமும் கார்கள் வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்ததால் காவிரி ஆற்றில் பாலங்களில் அருகில் குளிக்காமல்,

    பாலத்திற்கு அருகில் சற்று மேடான பகுதிகளில் கடலில் குளிப்பது போல் ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் இருந்த அனைத்து விளையாட்டு சாதனங்க ளிலும் சிறுவர் சிறுமியர் ஏறி விளையாடி கூச்சலிட்டு மகிழ்ந்தனர். கல்லணையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலடி வழியாக வந்த பாஸ்கள் அனைத்தும் புதிய படத்தி லிருந்து திருப்பி விடப்ப ட்டன. இதனால் பொதுமக்கள் சற்று அவதிப்பட்டனர்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது.
    • கலாசார பிரிவில் 39 நகரங்களிலிருந்து பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேல வீதியிலுள்ள அய்யன் குளம் நாயக்க மன்ன ர்கள் காலத்தில் உருவாக்க ப்பட்டது. மொத்தம் 7 ஆயிரத்து 630 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இக்குள த்துக்கு பெரிய கோயில் அருகிலுள்ள சிவகங்கை குளத்திலிருந்து நீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்டது.

    இதற்காக சிவகங்கை குளத்திலிருந்து அய்யன் குளத்துக்கு சுரங்க நீ ர்வழிப்பாதை அமைக்கப்ப ட்டது.

    காலப்போக்கில் பராமரி ப்பின்மை காரணமாக நீர் வரத்து இன்றி மிக மோசமான நிலையில் இருந்த இக்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 5.12 கோடி செலவில் மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்தது.

    இதில், குளம் தூர் வாரப்பட்டு, சுற்றிலும் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், நடைபாதையோரம் 64 வகையான ஆயக்கலைகள், ஐவகை நிலங்கள் உள்ளிட்டவற்றை விளக்கும் ஓவியப் பதாகைகள் காட்சிப்ப டுத்தப்பட்டு உள்ளன.

    நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க நீர்வழிப் பாதையைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டவிருது போட்டியை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 2022 ஆம் ஆண்டு நடத்தியது.

    இப்போட்டி சுற்றுச்சூழல், கலாசாரம், பொருளாதாரம், ஆளுமை, வணிக மாதிரி, தூய்மை உள்பட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில், கலாசார பிரிவில் 39 நகரங்களிலிருந்து பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

    இப்பிரிவில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாரம்பரிய கட்டுமா னம், சுற்றுலாவை மேம்படுத்தி யதற்காக அகமதாபாத், பாரம்பரிய கட்டடங்களைப் புனரமைப்பு செய்த தற்காக போபால், அய்யன் குளத்தைப் பாதுகாத்தலுக்காக தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    இதில் கலாச்சார பிரிவில் அகில இந்திய அளவில் தஞ்சாவூர் மாநகராட்சி அய்யன்குளத்திற்கு 3-ம் இடம் கிடைத்தது .

    இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    அப்போது இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் மாநகராட்சி அய்யன்குளத்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் , தஞ்சை மாநகராட்சி மேயர் சண் ராமநாதனிடம் வழங்கி பாராட்டினார் . அப்போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயத்திற்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை திருமணம் ஆகாத பெண்கள், கர்ப்பிணி பெண்கள் வந்து குத்துவிளக்கிற்கு எண்ணெய் ஊற்றி சென்றால் கேட்டவரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இறுதிவாரத்தில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான வியாகுல அன்னை தேர்பவனி நேற்றுஇரவு நடைபெற்றது. முன்னதாக திருவிழா கூட்டுப்பாடல் திருப்பலி மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. இதில் பேராலய பங்குதந்தை பிரபாகர், உதவி பங்குதந்தை பிரவீன் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேர்கள் புனிதம் செய்யப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. முதலாவதாக மைக்கேல் சம்மனசு தேரும், தொடர்ந்து புனிதசவேரியார், புனிதசூசையப்பர், புனிதஅந்தோணியார் சொரூபங்களை தாங்கிய தேரும், இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக வந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பா டுகளை உதவி பங்குதந்தை பிரவீன் அடிகளார் தலைமையில் பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சென்ட், செயலாளர் குழந்தைராஜ், பக்த சபைகள், அன்பிய பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

    • 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன.
    • சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளான ஆச்சனூர், மருவூர், வடுககுடி ஆகிய இடங்க ளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. சூறாவ ளி காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது,

    இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரம் வேரோடு சாய்ந்தும் முறிந்ததில் 5000 வாழைகள் சேதமடைந்துள்ளன.

    இயற்கை இடர்பாடின் காரணமாக திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் மூன்றாவது முறையாக அடித்த சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளை அனுப்பி சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதுபோல் வாழை மரத்திற்கும் காப்பீடு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

    • விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் இணைந்து

    2022-23 ம் ஆண்டிற்கான சம்பா சாகுபடிக்கு காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயி களுக்கும் பயிர் இழப்பீடு வழங்காததை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட த்திற்கு பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார்.விவசாய சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், சுந்தரவடிவேல், கண்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமலிங்கம் மற்றும் விவசாயிகள் கலந்து கொ ண்டு கண்டன கோஷங்களை முழங்கினர். பாதிக்கப்பட்ட அனை வருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,

    பயிர் காப்பீடு என்கிற பெயரில் விவசாயிகளை வஞ்சிக்கும் நிறுவனங்களை தவிர்த்து, ஏற்கனவே இருநததுபோல் அரசு காப்பீட்டு நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

    • தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 996.
    • சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,009-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைப்பெற்றது

    பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 342 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 358.80 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 06 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6,996/-

    குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,329/- சராசரி மதிப்பு குவிண்டா லுக்கு ரூ.6,009/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    • எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரெயில் பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்று அடையும்.
    • சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் ரெயில் இரவு 10.15 க்கு புறப்பட்டு காலை சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    ரெயில்வே வாரியம் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ந்தேதி ரெயில்களின் மாற்றப்பட்ட நேரத்தை கொண்ட புதிய கால அட்டவணை வெளியிடுவது வழக்கம். கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2020 முதல் 2021 வரை மூன்று ஆண்டுகள் புதிய ரெயில்வே கால அட்டவணை வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ரெயில்வே கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சி கோட்டத்தின் கீழ் இயக்கப்படும் 40 ரெயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டு உள்ளது. அனைத்து ரெயில்களும் 5 முதல் 15 நிமிடங்களுக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர்-காரைக்கால் (வண்டி எண்.06832) ரெயில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்றடையும். தஞ்சாவூர்-திருச்சி (06683) ரெயில் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு சென்றடையும். மயிலாடுதுறை-திருவாரூர் (06541) காலை 7.10-க்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு செனறு அடையும். திருவாரூர்-மயிலாடுதுறை (06688) காலை 8.15-க்கு புறப்பட்டு காலை 9.15-க்கு சென்றடையும்.

    திருவாரூர்- மயிலாடுதுறை (06542) இரவு 8.10 க்கு புறப்பட்டு இரவு 9.10 க்கு சென்று அடையும். மன்னார்குடி-திருப்பதி (17408) ரெயில் மாலை 5.10-க்கு புறப்பட்டு பிற்பகல 3.35-க்கு சென்றடையும். மன்னார்குடி- திருச்சி (06827) ரெயில் காலை 6.25-க்கு புறப்பட்டு காலை 9.10 மணிக்கு சென்று அடையும். எர்ணாகுளம்-வேளாங்கண்ணி (16361) ரெயில் பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்று அடையும்.

    விழுப்பும்-மயிலாடுதுறை (06691) ரெயில் மாலை 6.25 க்கு புறப்பட்டு இரவு 9.40 க்கு சென்றடையும். தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் (16866) இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.25 மணிக்கு சென்றடையும். சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் (16865) ரெயில் இரவு 10.15 க்கு புறப்பட்டு காலை 5.10 மணிக்கு சென்றடையும்.

    மேற்கூறியதையும் சேர்த்து திருச்சி கோட்டத்தில் மொத்தம் 40 ரெயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டு உள்ளதாக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் நாளை (திங்கள்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே கிராம சபை கூட்டத்திற்கு மாவட்டத்தின் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • மதுக்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் வடக்கு ஊராட்சி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன் ( வயது 58). விவசாயி. இவருடைய மனைவி மலர். இவருக்கு ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவர் வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு டீ குடிக்க சென்றார்.

    அப்போது மதுக்கூரில் இருந்து மன்னார்குடி செல்லும் மெயின் ரோட்டில் நடந்து செல்லும் போது மதுக்கூர் வடக்கு சந்தை தோப்பு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 44) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஜெகநாதன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெகநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து ஜெகநாதன் மனைவி மலர் மதுக்கூர் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ.20 லட்சத்து 78 ஆயிரத்து 290 மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
    • மொத்தமாக 125 மனுக்கள் பெறப்பட்டது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள சொக்கனாவூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, அண்ணாதுரை எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் பெரியகோட்டை சரகத்திற்கு உட்பட்ட சொக்கனாவூர், புளியக்குடி கிராமங்களுக்கு ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், கல்வி கடன், உள்ளிட்ட 125 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு தெரிவிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து அவர் வருவாய்த்துறை மூலம் விலையில்லா வீட்டு மனை பட்டா 110 நபர்கள், 10 நபர்களுக்கு பட்டா மாறுதலும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், விதவைகள், ஈமச்சடங்கு உதவித்தொகைகள் 49 நபர்களுக்கும் என மொத்தம் 184 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 78 ஆயிரத்து 290 மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ (பொ) வாசுதேவன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள்

    இளங்கோ, கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட், ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பழனிவேல், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×