சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
கூடுதல் மருத்துவ உபகரணங்களை துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ வழங்கினார்.
கூடுதல் மருத்துவ உபகரணங்களை துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ வழங்கினார்.
Published on

தஞ்சாவூர்:

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம் .எல். ஏ. தலைமையிலும் திருவையாறு ஒன்றிய பெருந்தலைவர் அரசாபகரன், திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் கௌதமன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜ்மோகன், மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ், தஞ்சை தொகுதி அமைப்பாளர் டாக்டர் விக்னேஷ், தொகுதி துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், விஜயகுமார், பாட்ஷா, புவனேஸ்வரி, வெங்கடேசன், நிர்வாகிகள் டாக்டர் திருச்செ ல்வி, காயத்ரி, செந்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com