search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
    X

    பணியாளர்களின் தற்செயல் விடுப்பு காரணமாக மாநகராட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

    • அரசு விடுமுறை நாட்ககளில் ஆய்வு கூட்டங்களை நடத்திடுவதை கைவிட வேண்டும்.
    • இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    நகராட்சி , மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அரசாணை 152 மற்றும் அரசாணை 10-ல் விடுபட்ட பணியிடங்களை வழங்கிட வேண்டும்.

    செயல் திறன் பணியாளர்களுக்கு இரண்டு கட்ட பதவி உயர்வை வழங்கிட வேண்டும்.

    நகராட்சிகளின் தரத்தினை உயர்த்தி புதிய பணியிடங்களை அனுமதிக்க வேண்டும்.

    அரசு விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வு கூட்டங்களை நடத்திடுவதை கைவிட வேண்டும்.

    பிற துறை பணிகளை நகராட்சி மாநகராட்சி ஊழியர்களை கொண்டு ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும்.

    1.10.1996 -க்கு முன்பாக பணியில் சேர்ந்த தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்.

    01.04.2003 க்கு பின்பாக பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில் இன்று 52 பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    வருகிற 17-ந் தேதி மண்டல அளவில் உண்ணாவிரதமும், அடுத்த மாதம் 15-ந் தேதி நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது என்றுமாநகராட்சி நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில தலைவர் வெங்கிடுசாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×