என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • ஆ.தெக்கூரில் மகளிர் கையுந்து பந்து போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவி களுக்கு கல்லூரி முதல்வர் உமா பரிசு மற்றும் சான்றி தழ்களை வழங்கினார்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூரில் செயல்பட்டு வரும் சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காளாப்பூர் வாலிபால் நண்பர்கள் மற்றும் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பாலாஜி ஆசை நண்பர்கள் சார்பில் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டி நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் சந்திரசேகர், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் உமா முன்னிலை வகித்தார். நெற்குப்பை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அய்யனார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இப்போட்டியில் முதல் பரிசை மதுரை அமெரிக்கன் கல்லூரியும், 2-ம் பரிசை மதுரை லேடி டோக் கல்லூரியும், 3-ம் பரிசை ஆ.தெக்கூர் சிங்கை சித்தர் அய்யா கல்லூரியும், 4-ம் பரிசை மதுரை யாதவா கல்லூரியும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவி களுக்கு கல்லூரி முதல்வர் உமா பரிசு மற்றும் சான்றி தழ்களை வழங்கினார்.

    • விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசல் பகுதியில் பிரபல பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சமையல் கூடத்தில் இன்று காலை ஊழியர்கள் நாகராஜ், திருப்பதி ஆகியோர் பலகாரம் தயார் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அங்கு அடுப்பில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் எண்ணையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் சமையல் கூடம் முழுவதும் தீ மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.

    ஆனால் பலனில்லை. அதற்கு மாறாக தீ பேக்கரி முழுவதும் பரவியது. உடனே ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் பேக்கரி கடையில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள உணவு வகைகள், இனிப்பு தயாரிக்கும் எந்திரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமாகின.

    இந்த சம்பவம் தொடர்பாக காரைக்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.
    • விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம்.

    காரைக்குடி:

    காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம்.

    மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.

    ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும்.

    அண்ணாமலை பேச வேண்டியதெல்லாம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம்.

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய நீங்கள் யார்? ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது.

    விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம். இதற்கு முன்பாக மது குடிக்கும் காட்சிகளில் விஜய் நடித்தது இல்லையா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் நீதிமன்றம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கோர்ட்டில் சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக் குமரன், சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

    மக்கள் நீதிமன்றத்தில் 13 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 7 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 34 காசோலைகள் வழக்கு களும் என மொத்தம் 54 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 8 வழக்குகள் சமர சமாக தீர்க்கப்பட்டு ரூ.38 லட்சத்து75ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது.

    அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட 405 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 63 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.89 லட்சத்து 90 ஆயிரத்து 300 வரையில் வங்கிகளுக்கு வரவானது.

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய கட்டிடம் இன்று திறப்பு விழா நடந்தது.
    • ஏற்பாடு–களை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா வாராப்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வாராப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பள்ளியில் புதிய பள்ளி கட்டிடத் திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. ராம.சின்னம்மாள் நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கி பள்ளி நூலகத்தை திறந்து வைக்கிறார்.

    முன்னதாக விழாவுக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் என்.சேதுராமன் முன்னிலை வகித்து பேசுகி–றார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலை–வர் டாக்டர் எஸ்.குருசங்கர் சிறப்புரையாற்றுகிறார். மேலும் இந்த விழாவில் பள்ளிக்கல்வி அதிகாரிகள், டாக்டர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கி–றார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • நெற்குப்பையில் ஆனிமாத சப்பர திருவிழா நடந்தது.
    • மாற்று சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வழி நெடுகிலும் மெழுகுவத்திகளை ஏந்தியவாறு வழிபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை பேரூராட்சியில் அமைந்துள்ள திருமுழுக்கு யோவானின் பெருவிழா என்னும் சப்பரத் திருவிழா நடைபெற்றது.

    ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவ பெருமக்களால் ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதேபோல் இந்த ஆண்டும் இத்தேவ ஆலயத்துக்கு பாத்தியப்பட்ட சிங்கம்புணரி பங்குத்தந்தை ஜெயசீலன் உள்ளிட்ட மூன்று பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து வண்ண, வண்ண விளக்குகளில் இயேசு கிறிஸ்து, மேரி, குழந்தை மேரி உள்ளிட்ட சிலைகளுடன் நகரின் முக்கிய விதிகளில் வலம் வந்தது. மாற்று சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வழி நெடுகிலும் மெழுகுவத்திகளை ஏந்தியவாறு வழிபட்டனர்.

    • அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை சூரக்குடி நகரத்தார்கள் செய்தி ருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் சமஸ்தானம் தேவஸ் தானத்துக்குட்பட்ட செகுட்டு அய்யனார், சிறை மீட்ட அய்யனார், படைத் தலைவி அம்மன் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    விழா கடந்த ஜூன் 23-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக சுமார் 30-க்கும் மேற்பட்ட குயவர்கள் புரவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட 2 அரண்மனை புரவிகள் உட்பட 282 புரவிகள் சாமி யாட்டத்துடன் சூரக்குடி புரவி பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடந்தது.

    நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்று ஊர் அம்பலகாரர்கள் முன்னிலையில் 282 புரவிகள் ஊர்வலம் நடந்தது.

    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றார். இதில் நகரத்தார் தலைவர் மாதவன் கணே சன், சிவசுப்பிரமணியன், வெள்ளையப்பன், வெங்கடாசலம் காந்திமதி சிவகுமார், ஆனந்த கிருஷ்ணன், தொழிலதிபர் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சூரக்குடி நகரத்தார்கள் செய்தி ருந்தனர்.

    • இருதய ஆண்டவர் தேவாலய தேர்பவனிவிழா நடந்தது.
    • இன்று 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாம துரை அருகே இடைக்காட்டூரில் பிரபலமான திருஇருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின்

    129-வது ஆண்டு திருவிழா கடந்த 30-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணி முஸ் கொடியேற்றி வைத்து திருப்பலி நடத்தினார். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலையில் இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுரை வழங்கப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார மின்விளக்கு தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது, திரு இருதய ஆண்டவர் சொரூபம் தாங்கிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஆலயத்தைச் சுற்றி உள்ள வீதிகளில் வலம் வந்தது.

    முன்னதாக காலை ஆயர் (பொறுப்பு) ஸ்டீபன் அந் தோணி, திருவிழா திருப்பலி யையும், மாலையில் முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் திருவிழா நிறைவு திருப்பலியையும் நடத்தினர். இன்று 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

    • செட்டிநாடு கால்நடை பண்ணையில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் சென்று பார்வையிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் செட்டிநாடு ஊராட்சியில் உள்ள கால்நடைப் பண்ணையில் 150 ஏக்கர் பரப்பளவில், கால்நடைகளுக்கு தேவையான கால்நடை தீவனம் மரங்கள் மற்றும் 600 மாடுகள், 1100 ஆடுகள், 1,258 அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வளர்க்கப்படு கின்றன.

    இதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்நடை கொட்டகைகள், கன்றுக் கொட்டகைகள், பால் கறவைக்கூடம், ஆட்டுக்கொட்டகைகள், கோழிக் கொட்டகைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் சென்று பார்வையிட்டார்.

    மேலும் செட்டிநாடு மாவட்ட கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணை உருவாக்குதல், தீவன ஆலை அமைத்தல் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்தல் திட்டத்தின்கீழ் 13.81 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.

    பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் செம்மறி ஆடுகள் ஜமுனாபாரி இன வெள்ளா டுகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கி டவும், தார்பார்கர், சாகிவால் இன மாடுகளின் பால் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, கால்நடை பராமரிப்புத் துறையின் துணை இயக்குநர் (கூ.பொ) பாலசுப்பி ரமணியன், கால்நடை உதவி மருத்துவர்கள் நட்ராஜன், பிரபாகரன், விவசாய மேலாளர் இதயத்துல்லா உட்பட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 கோவில்களில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.
    • ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் விட்டனேரி கொல்லங்குடி வெட்டுடையார் காளி யம்மன் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இந்து சமய சிவகங்கை மண்டல இணை ஆணையர் பழனிகுமார் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

    மணமக்களுக்கு ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் குத்துவிளக்கு பீரோ, தலையணை, சமையல்பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், பொதுக்குழு உறுப்பினருமான ஏஆர்.ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எம். கென்னடி, யோக கிருஷ்ண குமார், ஆரோக்கியசாமி, கொல்லங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மெய்ஞான மூர்த்தி, மாணவர் அணி கார்த்தி, பால்பாண்டி, குட்டி, தமிழ்ச்செல்வன், சுசீந்திரன், வழக்கறிஞர் சதீஷ், செல்லப்பாண்டி, பாலமுருகன், அசோக், முருகன், அல்லூர் ரவி, காளை மணி, அம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கோவில் செயல் அலுவலர் நாராயணி நன்றி கூறினார். தாயமங்கலம் முத்துமாரி அம்மன்கோவிலில்ஒரு ஜோடிக்கும், அரியக்குடி திருவேங்கடம் உடையார் கோவிலில் 3 ஜோடி களுக்கும், பரமக்குடியில் திரவுபதி அம்மன் கோவிலில் 3 ஜோடிகளுக்கும் மொத்தம் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    அரியக்குடி திருவேங்கடமுடையார் கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் மாங்குடி எம்.எல்.ஏ., காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணைத் தலைவர் குணசேகரன், கண்ணன், காரை சுரேஷ் அறங்காவலர் குழு உறுப்பினர் வெள்ளையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத்தலைவர் பாண்டித்துரை இல்ல திருமண விழா நடக்கிறது.
    • நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடி சோலைமலையான் வீட்டை சேர்ந்த சோ.கரு.துரைராஜ்-சுசீலா தம்பதியரின் இளைய மகனும், பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணை தலைவர், தொழிலபதிபர் து.பாண்டித்துரையின் சகோதரருமான சோ.கரு.து.கார்த்திகேயன் மணமகனுக்கும், பள்ளத்தூர் கோடியான் வீடு கோ.வெ.சபாரெத்தினம்-சாந்தி தம்பதியரின் மகளுமான ச.தாரணி மணமகளுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.

    இவர்களது திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நடக்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    இதில் முன்னாள் தேசிய செய லாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவி வானதிசீனிவாசன், மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில பொதுச்செய லாளர்கள் அ.பி.முருகா னந்தம், ராம சீனிவாசன், எம்.முருகானந்தம், பொன்.வி.பாலகணபதி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    திருமண விழாவில் மாநிலம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். திரும ணத்திற்கான ஏற்பாடுகளை து.பாண்டித்துரை, கோட்டையூர் பேரூராட்சி கவன்சிலர் பா.திவ்யா தம்பதியினர் மற்றும் பள்ளத்தூர் சபா ரெத்தினம்-சாந்தி தம்பதி யினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் டிரைவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் விருதுநகரை சேர்ந்த சிவா என்பவர் ஜே.சி.பி. டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்ைல. இதுகுறித்து அவரது மனைவி மாதா கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை அருகே உள்ள முலாக்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமரன். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது31). இவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் இருந்து ராஜேஸ்வரி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×