search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது
    X

    கண்டரமாணிக்கம் ஊராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், மாதவன் என்பவரது குடும்பத்தினர் சார்பில் அரசு பயன்பாட்டிற்கு ரூ.28.5 சென்ட் இடத்திற்கான சான்றை வழங்கினார். அருகில் கலெக்டர் ஆஷா அஜித் மற்றும் பலர் உள்ளனர்.

    அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது

    • கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.
    • கூட்டத்தில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி–யில், ரூ.2.93 கோடி புதிய திட்டப்பணிக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி, கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.43.89 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட் டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் சமமான வளர்ச்சியினை ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், மாநிலத் திலுள்ள அனைத்து மாவட் டங்களிலும் சீரான வளர்ச் சியை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும், தொலைநோக்கு பார்வை–யுடன் பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    குறிப்பாக, கல்வி, வேலை வாய்ப்பு, பொருளா–தார வசதி மேம்பாடு, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்தை–யும் தமிழகம் முழுவதும் மேம்படுத்தி, பிற மாநிலங்க–ளுக்கு முன்மாதிரியான முதலமைச்சராகவும், முதன் மையான முதலமைச்சரா–கவும் தமிழ்நாடு முதல–மைச் சர் திகழ்ந்து வருகிறார்.

    மேலும், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ற–வாறு, அனைத்து அடிப் படை கட்டமைப்பு வசதிக–ளையும் மேம்படுத்த வேண் டிய கடமையும் அரசிற்கு உள்ளது. அதன–டிப்படை–யில், சிவகங்கை மாவட்டத் தில், மாவட்டத்தின் கடைக் கோடி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிவருவது மட்டுமன்றி, அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளும் துரி–தமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் திருப்பு–வனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச் சிப்ப–ணிகள் பொது–மக்க–ளுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    குறிப்பாக கண்டரமா–ணிக்கம் ஊராட்சியில் மட்டும் நமக்கு நாமே திட்டம் 15-வது நிதிக்குழு மானியத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு–தித்திட்டம், மாவட்ட ஊராட்சி நிதி, ஒன்றிய பொது நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் மொத்தம் 68 பணிகள் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    முன்னதாக நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மணி–வண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், கல்லல் ஊராட்சி ஒன்றி–யக்குழுத் தலைவர் சொர் ணம் அசோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சு–மணன், ஊராட்சி மன்றத்த–லைவர்கள் ராமு (கண்டர–மாணிக்கம்), இளம்பரிதி (கள்ளிப்பட்டு), சுப்பிர–மணியன் (செவரக் கோட்டை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செழியன், சுந்தரம் அரசு அலுவலர்கள், தொழிலதிபர் மணிகண்டன் (கண்டரமா–ணிக்கம் வளர்ச்சிக்குழு) பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×