search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் திரும்ப கிடைக்குமா? முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு
    X

    பணம் திரும்ப கிடைக்குமா? முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

    • நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்குமா? என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • தற்போது பல ஏஜெண்டுகள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

    தேவகோட்டை

    நியோமேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ. 5000 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த சைமன், கபில் ஆகிய 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல ஆயிரம் கோடிகளை நியோமேக்ஸ் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்தவர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து, ஊட்டி கொடைக்கானல் சுற்றுலா ஆகியவை ஏற்பாடு செய்து அவர்களை கவர்ந்துள்ளனர்.

    இதனால் அதிகளவில் முதலீட்டாளர்கள் சேர்ந்தனர். அவர்கள் தங்கள் உறவினர்களையும் முதலீடு செய்ய வைத்துள் ளனர். உறவினர்களை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.

    மேலும் மத்திய அரசு பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள், வெளிநாட்டில் வேலை செய்வோர் ஆகியோர் அதிகளவில் இந்த நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.

    அவர்களை குறிவைத்து நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என நம்ப வைத்து மோசடி செய்துள்ளனர்.

    எங்களிடம் நீங்கள் கொடுக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து, அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை உங்களுக்கு வட்டி கொடுப்போம் என்று நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஏஜென்டுகள் முதலீட்டா ளர்களிடம் கூறியுள்ளனர்.

    முதலீட்டாளர் கூட்டங்களுக்கு இயக்கு னர்கள், ஏஜெண்டு கள் விலை உயர்ந்த கார்களில் வருவதை பார்த்து ஆர்வத்துடன் முதலீடு செய்துள்ளனர்.

    தேவகோட்டை பகுதி களில் நியோமேக்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் ஏஜெண்டு களாக உள்ளனர். இவர்க ளின் சொகுசு வாழ்க்கையை பார்த்து பொது மக்கள் ஆசைப்பட்டு அதிக பணத்தை கட்டியுள்ளனர்.

    ஆனால் தற்போது பல ஏஜெண்டுகள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை நம்பி நியோமேக்ஸ் நிறுவ னத்தில் முதலீடு செய்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பணம் திரும்ப கிடைக்குமா? என்ற கலக்கத்தில் உள்ளனர்.

    Next Story
    ×