என் மலர்
சிவகங்கை
- சிவகங்கை அருகே இளம்பெண்-வாலிபர் மாயமானார்கள்.
- செல்வம் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் சுனிதா. சம்பவத்தன்று அவரது தாத்தா வீட்டில் சென்றார். அங்கிருந்த அவர் திடீரென மாயமானார்.
எங்கு சென்றார்? என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் தாத்தா பெரியசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை அருகே உள்ள கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி, கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கட்டிட வேலைக்கு செல்வதாக தந்தையிடம் கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை செல்வம் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- திருப்புவனம்-காளையார் கோவில் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் திருப்புவனம் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளின் தொடக்க விழா நடை பெற்றது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு திட்டங் களை தொடங்கி வைத்து பேசியதாவது:-
காளையார்கோவில் ஊராட்சியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 1993-ல் தொடங்கப்பட்டு 2017-வரை சிறப்பாக நடைபெற்று வந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் 4,315 சதுரடி பரப்பளவில் புதிதாக பல்நோக்கு அரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
அதேபோன்று திருப்பு வனம் அருகே உள்ள கீழராங்கியம் கிராமத்தில் மானாமதுரை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16.41 லட்சம் மதிப்பீட்டில் என்.என்.498 திருப்புவனம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்நிலையத்தில் எந்திரங்கள் நிறுவுவதற் கென கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய லிமிடெட் சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எந்தி ரங்களும் நிறுவப்பட்டு உள்ளது.
கிராம மக்களின் பொரு ளாதார மேம்பாட்டிற்கு வழிவகை ஏற்படுத்தி தந்த பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பழையனூர்-வல்லா ரேந்தல் சாலையில் பொது மக்களின் நீண்ட ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் சிறு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்நிகழ்ச்சிகளில் க 32 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 387 உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவிகளும், 234 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 72 ஆயிரத்து 86 மதிப்பீட்டில் பயிர் கடனுதவி மற்றும் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 1 மாற்றுத்தி றனாளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டிலான கடனுதவியும், பழையனூர் கிராமத்திற்குட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.67.66 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 12 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் கடனுதவியும், 14 பயனாளிகளுக்கு ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும் என மொத்தம் 653 பயனாளிகளுக்கு ரூ.6.5 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜூனு, நெடுஞ்சாலைத் துறை செயற் பொறியாளர் முரளிதர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஆவின் பொது மேலாளர் சேக்முகமதுரபீக், துணைப் பதிவாளர் (பால்வளம்) செல்வம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி, திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சின்னையா, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆனந்தி அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
- பிரபாகரன் மனைவியிடம் வேலைக்கு செல்லக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டு வெளியில் சென்றிருந்தார்.
- சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (வயது 41). இவருக்கும் சிங்கம்புணரியை சேர்ந்த சூரியா (30) என்பவருக்கும் திருமணமாகி, இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு பிரபாகரன், சூரியா ஆகிய இருவரும் தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை காசிலிங்கம் நகர் பகுதியில் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர். சூரியா புதுக்கோட்டை பகுதியில் அழகு நிலையம் உடல் தகுதிக்கான பிட்னஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த பிரபாகரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. அதற்கேற்றவாறு சூரியாவுக்கு இரவு நேரங்களிலும் தொடர்ந்து செல்போனில் அழைப்பு வந்துகொண்டே இருந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மனைவியை கண்டித்தார். அத்துடன் நான் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும்போது நீ வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொள் என்றும் கூறியுள்ளார். ஆனால் சூரியா அதனை கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போல் புதுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்தார். எனவே அடிக்கடி கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை தூங்கி எழுந்த பிரபாகரன் மனைவியிடம் வேலைக்கு செல்லக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டு வெளியில் சென்றிருந்தார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது எதிரே தேவகோட்டை தர்ம முனீஸ்வரர் கோவில் அருகே சூரியா இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
இதையடுத்து ஆத்திரத்தின் உச்சிச்கே சென்ற பிரபாகரன், தனது இருசக்கர வாகனத்தால் மனைவியின் வாகனத்தின் மீது வேகமாக மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சூரியாவை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நடுரோட்டில் சரமாரியாக கழுத்தில் வெட் டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சூரியா பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் ஆகியோர் விரைந்து சென்று கொலையுண்ட சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கொலை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் மனைவியை கொலை செய்த பிரபாகரன் தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடத்தை மீதான சந்தேகத்தில் நடுரோட்டில் மனைவியை கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- விவசாயிகள் முறையாக அறிந்து கொண்டு பயன்பெ றுவதற்காக இந்த கருந்த ரங்கானது நடத்தப்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் உயர்சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.
இதில் மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, திருப்புவனம், காளை யார்கோவில் ஆகிய வட்டா ரங்களை சேர்ந்த 50 விவசாயி களுக்கு தோட்டக்கலை இயக்கம் 2023-24 திட்டத்தின் கீழ் சிப்பம் கட்டும் அறை, வெங்காயம் சேமிப்பு கிடங்கு, பண்ணை குட்டை, மண்புழு உரக்கூடம், நிரந்தர பந்தல் ஆகியவற்றுக்காக ரூ.37.72 லட்சம் மதிப்பீட்டில் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
உலகளவில் பல்வேறு நாடுகளில் போதிய சூழல் மற்றும் இடவசதியின்றி தாங்கள் வசித்து வரும் வீட்டின் மாடி புற பகுதியில் தோட்டத்திற்கான மாதிரியினை ஏற்படுத்தி, அதன் மூலம் நெற்பயிர் போன்ற பயிர்களையும் சாகுபடி செய்கின்றனர், அதற்கு மாற்றாக இயற்கை யான சூழல் மற்றும் மண்வ ளத்தினை பெற்றுள்ள நாம், பல்வேறு வகையான தோட்டப் பயிர்களை மண்வளத்திற்கு ஏற்றாற்போல் பயிர் செய்து பயன்பெற வேண்டும்.
இன்றைய நவீன காலத்திற்கேற்றாற்போல், விவசாய தொழிலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாம் முன்னேற்றம் காண வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்துவதற்கும் உரிய விலை கிடைக்கும் வரையில் அதனை முறையாக சேமிப்பதற்கும் அரசால் பல்வேறு வழி வகைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பல்வேறு தொழில் நுட்பங்கள் ஆகியன குறித்து, விவசாயிகள் முறையாக அறிந்து கொண்டு பயன்பெ றுவதற்காக இந்த கருந்த ரங்கானது நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) செ. சக்திவேல், சிவகங்கை வேளாண் துணை இயக்குநர் பழ. கதிரேசன், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடி, வேளாண் விஞ்ஞானிகள், மற்றும் அனைத்து வட்டார தோட்டக்கலை துறைசாந்த அலுவலர்கள், மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் சாரதிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட் டது.
சிவகங்கை
சிவகங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற பிள்ளை வயல்காளியம்மன் கோவில் ஆனி திருவிழாவை முன்னிட்டு மருது பாண்டியர் களின் நினைவாக, சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ் சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இப்போட்டி பெரிய மாடு, சின்ன மாடு, நடுமாடு, பூச்ஞ்சிட்டு என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது, இப்போட்டியை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குணசேக ரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் மதுரை, சிவகங்கை, புதுகோட்டை, தேனி, கம்பம் உள்ளிட்ட ஆறு மாவட்டங் களை சேர்ந்த 55 வண்டிகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் முதல் பரிசு 30 ஆயிரத்தை மதுரையை சேர்ந்த அக்னி முருகனுக்கும், இரண்டாம் பரிசான 20 ஆயிரம் திருச்சியை சேர்ந்த செந்திலுக்கும், சின்ன மாட்டு பிரிவில் முதல் பரிசை சிவகங்கை பழனிக் கும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் சாரதிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட் டது.
- குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- ரூ.10.55 லட்சம் மதிப்பீட்டில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடி கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.55 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
இதில் சிவகங்கை அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, நகர் செயலாளர் என்எம்.ராஜா, சிவகங்கை ஒன்றிய குழுத்துணைத்தலைவர் கேசவன், மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, வாணியங்குடி கிளைச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், பிச்சை, நாகராஜ், ராஜா, கருணாநிதி, முத்துக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கயல்விழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் பூச்சொரிதல் விழா நடந்தது.
- பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந் துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் கோவிலில் ஆனி மாத 69-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அம்ம–னுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பையூரை சேர்ந்த மக்கள் கடும் வறட்சி, கொலை, கொள்ளை கார–ணமாக மிகவும் துன்புற்று இருந்தபோது இந்த அம் மனை வேண்டி வழிபட்ட–னர். பின்னர் முஸ்லீம் மன்னர்களின் படையெ–டுப்பின் போது அம்ம–னின் சிலையை வயல் வெளியில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி இறக்கி மறைத்து வைத்தனர்.
சில நூறு ஆண்டுகளுக் குப்பின் தூர்வாரும் போது சிலை மீட்கப்பட்டு தற்போது உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். மக்க–ளின் கஷ்டங்களை தீர்த்தும், பிள்ளை வரம் வேண்டுவோ–ரின் வேண்டுதலை நிறை–வேற்றியும், சிவகங்கையை காக்கும் காவல் தெய்வமா–கவும் இந்த அம்மன் அருள் பாலிக்கிறார்.
ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி ஏழு நாட்கள் நடை–பெறும். விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான பூச்சொ–ரிதல் விழா அன்று வருடத் தில் ஒரு நாள் மட்டும் குழந் தையுடன் அம்மன் அருள் பாலிக்கிறார்.
இவ்விழாவில் ஆயிரக்க–ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழி–பாடு செய்தனர். இன்று பூச்சொரிதல் விழாவில் மூலவர் காளியம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் பல்வேறு நறுமணத் திரவி–யங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற் றன.
இதனைத்தொடர்ந்து அம்மன் குழந்தையை மடி–யில் வைத்தபடி சர்வ அலங்காரம் நடைபெற்று, பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாரா–தனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று காளியம்மனுக்கு பல வகை–யான பூக்களை சமர்ப்பித்து அர்ச்சனைகள் செய்து வழி–பாடு செய்தனர். பெண்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
- கல்குறிச்சி ஊராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- கடந்த3 மாதங்களாக வார்டுகளில் அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத் துக்கு உட்பட்ட கல்குறிச்சி ஊராட்சி மன்றக் கூட்டம் தலைவி யாஸ்மின் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவி பானுவனிதா உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பெரும் பாலான உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவி யாஸ்மின் உறுப்பி னர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை என்றும், குடிநீர் பிரச்சனையை சரிசெய்யவில்லை என்றும், கடந்த3 மாதங்களாக வார்டுகளில் அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். மேலும் ஊராட்சி மன்றகூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட தீர்மானங்கள் மீது கையெழுத்து போடமல் அவர்கள் வெளியேறினர்.
பின்னர் துணைத்தலைவி பானுவனிதா கூறியதாவது:-
தலைவி யாஸ்மின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றும் வரை தொடர்ந்து கூட்ட த்தைப் புறக்கணிப்போம். இவரது நிதி முறைகேடு குறித்தும், அவரை பதவியிலிருந்து நீக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.ஏற்கெனவே நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களின் படி, எந்த ஒரு திட்டப் பணியும் நடைபெறவில்லை. அடிப்படை வசதி செய்யாததால் வார்டு மக்களிடம் எங்களால் பதில் கூற இயலவில்லை என்றார்.
துணைத்தலைவி பானு வனிதா, உறுப்பினர்கள் சத்தி, வாணி முத்து, மலைச்சாமி, மகாலட்சுமி, பூமா, பாண்டியம்மாள் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
- மக்கள் தொடர்பு முகாமில் ரூ.65 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- கலெக்டர், எம்.எல்.ஏ. பவர்டிரில்லர்களை வழங்கினர்.
மானாமதுரை
சிவங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 124 பயனாளிகளுக்கு ரூ.64.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு வழங்கினர்.
இதில் 26 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து17ஆயிரத்து 119 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகை ஆணைகளும், பொது சுகாதாரத் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பீட்டில் மருந்து பெட்டகம் மற்றும் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.58 ஆயிரத்து 550 மதிப்பீட்டில் சக்கர நாற்காலிகளும், 2 மகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலான மகளிர் குழுவுக்கான சுழல் நிதிக்கான ஆணையும், 02 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான பவர்டி ரில்லர்களையும், தொடக்க வேளான்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 22 ஆயிரத்து 573 மதிப்பீட்டிலான கேசிசி கரும்பு கடனுதவிகளும், 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.28லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத் துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத் துறை) ஒன்றியக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், திருப்புவனம் வட்டாட்சியர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மானாமதுரை
மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டை, எம்.கே.என். நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன், வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன், மருத்துவ அலுவலர் சந்தான வித்யா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் திரு மூர்த்தி, சுகாதார ஆய்வா ளர்கள் சதீஸ்குமார், குருபிரகாஸ், கிராம சுகாதார செவிலியர் வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ -மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி ஊர்வலம் சென்றனர்.
பின்னர் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்து மாணவர்கள் செயல் விளக்கம் அளித்த னர். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
- தனியார் பள்ளி பஸ் டிரைவர், உதவியாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- வட்டார போக்குவரத்து அதிகாரி வாகனங்களை ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை அருகே உள்ள பெரிய கோட்டை தனியார் பள்ளி வாகனம் ஓட்டுனரின் கவன குறைவால் விபத்துக் குள்ளானது. இதில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் இறந்தான். 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
தற்போது தனியார் பள்ளியில் இயக்கப்படும் வாகனங்கள், மற்றும் ஓட்டுநர்கள், உதவியா ளர்களுக்கு மாணவர்களை கையாளும் விதம், பாது காப்பான பயணம் குறித்து அறிவுரை கூறப்பட்டுள்ளது. இது போன்ற விபத்து இனி ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும், அரசு விதிமுறை களை ஓட்டுநர்கள், உதவி யாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.
அஜாக்கிரதையாக இருந்தால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தேசிய நெடுஞ்சாலையோரம் 2 ஆயிரம் மரக்கன்று நடும்விழா நடந்தது.
- தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், தேசிய நெடுஞ்சாலை கலைத்திட்ட குழு தலைவர் தொட்ட வீரையா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தென்மாபட்டு அருகே புதிதாக 45 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது.
இந்த விழாவில் தேசிய நெடுஞ்சாலை மதுரை மண்டல அலுவலர் அஜய் பிஸ்நோய் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அலுவலர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். திட்ட இயக்குநர் நாகராஜ், இணை மேலாளர் சுமித் தேவ்டா, சிறப்பு வட்டாட்சியர்கள் மூர்த்தி, செந்தில்வேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.
தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், தேசிய நெடுஞ்சாலை கலைத்திட்ட குழு தலைவர் தொட்ட வீரையா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.
தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிகாரி களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வழக்கறிஞர் நவநீதன், வாணியங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






