search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய திட்டப்பணிகளை  அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    அமைச்சர் பெரியகருப்பன்

    புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • திருப்புவனம்-காளையார் கோவில் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் திருப்புவனம் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளின் தொடக்க விழா நடை பெற்றது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு திட்டங் களை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    காளையார்கோவில் ஊராட்சியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 1993-ல் தொடங்கப்பட்டு 2017-வரை சிறப்பாக நடைபெற்று வந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் 4,315 சதுரடி பரப்பளவில் புதிதாக பல்நோக்கு அரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    அதேபோன்று திருப்பு வனம் அருகே உள்ள கீழராங்கியம் கிராமத்தில் மானாமதுரை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16.41 லட்சம் மதிப்பீட்டில் என்.என்.498 திருப்புவனம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    மேலும் இந்நிலையத்தில் எந்திரங்கள் நிறுவுவதற் கென கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய லிமிடெட் சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எந்தி ரங்களும் நிறுவப்பட்டு உள்ளது.

    கிராம மக்களின் பொரு ளாதார மேம்பாட்டிற்கு வழிவகை ஏற்படுத்தி தந்த பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பழையனூர்-வல்லா ரேந்தல் சாலையில் பொது மக்களின் நீண்ட ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் சிறு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சிகளில் க 32 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 387 உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவிகளும், 234 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 72 ஆயிரத்து 86 மதிப்பீட்டில் பயிர் கடனுதவி மற்றும் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 1 மாற்றுத்தி றனாளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டிலான கடனுதவியும், பழையனூர் கிராமத்திற்குட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.67.66 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 12 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் கடனுதவியும், 14 பயனாளிகளுக்கு ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும் என மொத்தம் 653 பயனாளிகளுக்கு ரூ.6.5 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜூனு, நெடுஞ்சாலைத் துறை செயற் பொறியாளர் முரளிதர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஆவின் பொது மேலாளர் சேக்முகமதுரபீக், துணைப் பதிவாளர் (பால்வளம்) செல்வம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி, திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சின்னையா, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆனந்தி அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×