என் மலர்
சிவகங்கை
- சிவகங்கையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்யாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே திருப்பத்தூர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங் களை எழுப்பினர்.
இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவர் நாக ராஜன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், குணசேகரன், நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற தலைவர் சுந்தர லிங்கம், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், பாசறை மாவட்ட செயலா ளர் பிரபு, ஒன்றிய செய லாளர்கள் சேவியர்தாஸ், கருணாகரன், பழனிச்சாமி, செல்வமணி, அருள்ஸ்டிபன், கோபி, பாரதிராஜன், ஜெக தீஸ்வரன், மகளிரணி வெண்ணிலா சசிகுமார், பாசறை மாவட்ட துணை செயலாளர் பிரபு, மாவட்ட கலை பிரிவு செயலாளர் செந்தில்முருகன், கூட்டுறவு சங்க தலைவர் சகாய செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொரு ளாளர் சரவணன், பாசறை இணை செயலாளர் மோசஸ், தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செய லாளர் சங்கர்ராமநாதன், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், முடிகரைகருப்பையா, மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- காரைக்குடி சிக்ரியில் ஆய்வகங்கள்-கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 24-ந்தேதி தொடங்குகிறது.
- தொழில்நுட்பம் மற்றும் மேம்பாடு நிகழ்வுகள் பற்றி எடுத்துரைக்கப்படும்.
காரைக்குடி
மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை நாடு முழுவதும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு குழுமத்தில் உள்ள 37 ஆய்வகங்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்த பிரசாரத்தை மக்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்த அறிவுறுத்தி யுள்ளது.
அதன்படி காரைக்குடி சிக்ரியில் ஒரு வாரம் ஒரு ஆய்வகம் குறித்த பிரசார நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி சிக்ரி வளாகத்தில் தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் சிக்ரியின் வரலாறு, சாதனைகள், ஆராய்ச்சி துறைகளாகிய அரிமான தடுப்பு, தற்கால மின்கலம், தொழிற்சாலைக்கு உபயோ கமான ரசாயனங்கள், மின்முலாம், மின் வேதியியல், தூய நிலையான ஆற்றல் ஆகியவற்றில் நடை பெறும் ஆராய்ச்சி, தொழில் நுட்பம் மற்றும் மேம்பாடு நிகழ்வுகள் பற்றி எடுத்துரைக்கப்படும்.
இதுகுறித்து சிக்ரி இயக்குனர் ரமேஷா கூறியதாவது:-
5 நாட்கள் நடைபெறும் இந்த தொழில் நுட்ப மேம்பாடு குறித்த நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், முதலீட்டாளர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பங்கு பெறுகின்றனர். வருகிற 24-ந்தேதி மலர் வெளியீடு, தொழில் வர்த்தக சந்திப்பு, 25-ந்தேதி சிக்ரி நிறுவன நாள் கொண்டாட்டம், அரிமானம் தடுப்பு கருத்தரங்கம், 26-ந்தேதி அறிவு சார் காப்புரிமை விழிப்புணர்வு பேரணி, ஜூலை 27-ந் ஆற்றல் தொழில் நுட்ப நிகழ்வு, சிக்ரியின் சென்னை கிளை அறிவுசார் காப்புரிமை கருத்தரங்கம், ஜூலை 28-ந்தேதி மின்முலாம் பூசுவோர் கருத்தரங்கம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற சிவகங்கை பெண்கள் அணிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
- விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
சிவகங்கை
முதல்-அமைச்சர் கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சிவகங்கை மாவட்ட ஹாக்கி பெண்கள் அணி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பரிசு வென்றது. இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள பள்ளியில் இந்த அணியின் 18 மாணவிகளுக்கும் மற்றும் முரளி, கருணாகரன், மோகன் ஆகிய பயிற்சியாளர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. பள்ளி செயலர் சங்கரன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட ஆட்சிக் கழக செயலாளர் தியாக பூமி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை இளையமன்னர் மகேஸ்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், கேப்டன் சரவணன், பகீரத நாச்சியப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா, நகர்மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், முன்னாள் உடற்கல்வி இயக்குனர்கள் அழகுமீனாள் தேவதாஸ், சின்னையா அம்பலம், சிவகங்கை தமிழ் சங்க நிறுவனர் ஜவஹர் கிருஷ்ணன், செயலாளர் ராமச்சந்திரன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் சுந்தர மாணிக்கம், செயலாளர் யுவராஜா, சிவகங்கைச் சீமை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கலைக்கண்ணன், சிவகங்கை அரிமா சங்க தலைவர் முத்துக்குமார், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், சிவகங்கை சுப்ரீம் அரிமா சங்க முன்னாள் தலைவர் முருகன், வெங்கடேஸ்வரா ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவிகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் விருதும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
- சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிதியிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்பட்டது.
இந்த புத்தகங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சியிலுள்ள நூலகங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஓ.புதூர் கிராமத்தில் நடந்தது. இது சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு புத்தகங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் பராம ரிக்கப்படும் பதிவேடுகள், புத்தகங்கள் இருப்பு பதிவேடு ஆகியவை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களின் கற்றல் அறிவினை மேம்ப டுத்திட வாரம் ஒரு முறை நூலகங்களுக்கு அழைத்து வருவதுடன் தினசரி காலையில் ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் படித்த புத்தகங்கள் அடிப்ப டையில் சிறு போட்டிகள் நடத்தி ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இதில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- திருப்பத்தூர் வாரசந்தையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
- முத்திரையிடாத எடைகற்கள், தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை,காளையார் கோவில், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் சென்னை தொழி1லாளர் ஆணையம் மற்றும் சட்டமுறை எடை யளவு கட்டுப்பாடு அலுவலகம் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணைய அமலாக்க பிரிவு அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் முன்னதாக திருப்பத்தூரில் வாரச்சந்தை மற்றும் வணிக வளாக வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகள், எடைகற்கள், மின்னணு தராசுகள், விட்ட திராசுகள் முதலியவற்றிக்கான முத்திரைகள், வணிக நிறுவனம் நடத்துவதற்கான அரசு சான்றிதழ்கள், பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் பொருட்களுக்கான விலை நிர்ணய பட்டியல், நுகர்வோர் குறை தெரிவிக்க வேண்டிய புகார் எண், தயாரிப்பு தேதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் முத்திரை வைக்கப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் உட்பட 29 எடை அளவு இயந்திரங்களை பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து சிவகங்கை மற்றும் காளையார் கோயில்களில் பொட்டல பொருட்கள் மற்றும் சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அரசின் முறையான வழிகாட்டுதலை பின்பற்றாத காரணத்தினால் அந்நிறுவனங்களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து வியாபாரிகள் மத்தியில் மின்னணு தராசுகளுக்கு வருடத்திற்கு ஒரு முறையும் ஏனைய மற்ற தராசுகளுக்கு 2ஆண்டுகளுக்கு ஒரு முறையும் முத்திரை வைக்க வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழ்களை அதனுடன் இணைத்து வைக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 5000ரூபாய் அவதாரம் விதிக்கப்படும் என்றும் வியாபாரிகள் மத்தியில் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் இ.முத்து, துணை ஆய்வாளர் வேலாயுதம், உதவி ஆய்வாளர்களான தீன தயாளன், வசந்தி மற்றும் திருப்பத்தூர் நகர் காவல் நிலைய காவலர்கள் ஆகியோர் இருந்தனர்
- மாநில ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார்.
- மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் 18 மாணவிகள் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றனர்.
இதனைத்தொடர்ந்து செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அந்த மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, தேவ ராஜ், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் செந்தில் முருகன், ஒன்றிய செயலா ளர் செல்வமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் இளங்கோவன், கூட்டுறவு வங்கி தலைவர் தேவதாஸ் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.
- வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாத மும் 3 அல்லது 4-ம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இம்மாதம் வருகிற 21-ந்தேதி காலை 10.30 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளா கத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.
மேலும் இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலை வாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் ஆகியவையும்; வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ள வர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோ ருக்கு பதிவுமூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது. எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
- பெண்கள் மேல்நிலை பள்ளியில் புதிய சைக்கிள் காப்பகத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- மாணவிகளுடன் சேர்ந்து புகைப்படம் தமிழரசி எம்.எல்.ஏ. எடுத்து கொண்டார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசுபெண்கள் மேல்நிலை பள்ளி பல ஆண்டுகளாக இடவசதி இல்லாமல் குறுகிய இடத்தில் செயல்பட்டுவருகிறது. இங்கு சைக்கிள் நிறுத்தம் வசதி இல்லாமல் இருந்தது. பள்ளிக்கு வெளியே சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு வந்ததால் மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ. தமிழரசி பள்ளிஅருகே உள்ள நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் சைக்கிள்களை நிறுத்தி கொள்ள வசதியாக தளம் அமைத்து சைக்கிள் காப்பகம் வைக்க நடவடிக்கை எடுத்தார்.
அதை தொடர்ந்து அங்கு புதிய சைக்கிள் காப்பகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா தமிழரசி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. சைக்கிள் காப்பகத்தை பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பின்னர் மாணவிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
இதில் நகராட்சி துணைதலைவர் பாலசுந்தரம், தி.மு.க. ஒன்றியசெயலாளர் ராஜாமணி, நகரசெயலாளர் பொன்னுசாமி, நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமாறன், மாங்குளம் ஊராட்சி தலைவர் முருகவள்ளி தேசிங்கு ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விலை நிலங்களை பன்றிகள் சூறையாடியதால் விவசாயி கவலை அடைந்துள்ளனர்.
- 35 மூடை நெல் கிடைக்காமல் 10 மூடைகள் மட்டுமே விளைச்சல் ஏற்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா ராஜ கம்பீரத்தில் விவசாய நிலங்களை அவ்வப்போது பன்றிகள் நாசம் செய்து வருகிறது. அதனை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராஜகம் பீரத்தில் உள்ள விவசாயி காசிராஜனுக்கு சொந்தமாக 2 ஏக்கம் விலை நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தில் பன்றிகள் அவ்வப்போது நாசம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு சொந்தமான விலை நிலங்களில் பன்றிகள் நாசம் செய்தது இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எனக்கு சொந்தமான விலை நிலங்களில் நெல் விவசாயம் செய்து வருகி றேன். இன்னும் ஒரு பத்து தினங்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ள நெற்கதிர்களை பன்றிகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்திருக்கிறது. இரவு முழு வதும் பாம்புகள், விஷப் பூச்சிகளோடு அரிக்கேன், டார்ச் லைட் விளக்குகளோடு பாதுகாப்பு முயற்சியில் இருக்கும் போதே ஒரே நேரத்தில் பத்து பன்றிகள் வயலுக்குள் இறங்கி நாசம் செய்து விட்டது.
இதன் காரணமாக விவ சாயம் மகசூல் பாதிக்கும் என்று காசிராஜன் தெரிவித் தார். விவசாயத்தை பன்றி கள் அழிப்பதால் விவசாய மகசூல் கடுமையாக பாதிக் கிறது. கடந்தாண்டு இதே போன்று பாதிப்பு ஏற்பட்டு கிடைக்க வேண்டிய 35 மூடை நெல் கிடைக்காமல் 10 மூடைகள் மட்டுமே விளைச்சல் ஏற்பட்டது.
அதேபோன்று இந்த ஆண்டும் பாதிப்படையும் நிலை உள்ளது என்று காசி ராஜன் தெவித்தார். பன்றி களை ஒழுங்குபடுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி மிக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
- தக்காளி விற்பனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்பப்பட்டு வருகிறது.
- இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-
தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 130 முதல் ரூ.150 வரை பொது சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விலையை குறைப்பதற்காக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை மற்றும் சிங்கம்புணரி உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் உழவர் சந்தைகளில் தோட்டக்கலை துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள டான்ஹோடா விற்பனை நிலையங்களில் விவசாயிக ளிடமிருந்து தக்காளி நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு சந்தை விலையை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தோட்டக் கலைத்துறை யின் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப் பட்ட நகரும் காய்கறி விற்பனை வண்டிகள் மூலமாக விவசாயிகளால் நேரடியாக குறைவான விலையில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் விலை யினை கண்காணிக்கவும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின ருக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.
இவை தொடர்பாக, உழவர் சந்தைகளில் டான்ஹோடா விற்பனை நிலையத்திற்கென சிவகங்கை97510 07695 (விற்பனையாளர் ஜெகன்பிரகாஷ்) மற்றும் திருப்பத்தூர் 91760 83647 (விற்பனையாளர் செல்வி. கவிநிலவு) தொடர்பு எண்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளது.
மேலும் தகவலுக்கு, தேவகோட்டை9003631332, இளையான்குடி 94434 55755, காளையார்கோவில் 8508130960, கல்லல் 63761 36377, கண்ணங்குடி 90036 31332, மானாமதுரை 82202 88448, எஸ்.புதூர்97514 64516, சாக்கோட்டை 87783 64523, சிங்கம்புணரி 93445 26574, சிவகங்கை 63692 46510, திருப்பத்தூர் 97888 13286, திருப்புவனம்;96260 06374 ஆகிய தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள லாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- நரிக்குறவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
- அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். கார்த்திக் சிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு நரிக்குற வர்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வா தாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நரிக்குறவர்கள் என்று அழைக்கப்பட்டதை நெரிக்குறவர்கள் என்று அழைத்து அவர்களுக்கு அங்கீகாரம் தந்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கவும், வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர்களுக்காக உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதன்மூலமும் அவர்களை பாதுகாப்ப தற்கான நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
நரிக்குறவர் இன மக்களின் 50 ஆண்டுகாள கோரிக்கையை ஏற்று பழங்குடியினர் சான்று வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில், சிவகங்கை வட்டத்திற்குட் பட்ட வாணியங்குடி ஊராட்சி பகுதியிலுள்ள பையூர் பிள்ளைவயல் நரிக்குறவர் காலணியில் வசித்து வரும் 176 குடும்பங்களை சார்ந்த 104 நபர்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாமேரி, நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் புவனேஸ்வரி (வாணி யங்குடி), மணிமுத்து (காஞ்சிரங்கால்), சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் டி 20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- அந்த அணியின் ரகுபாலன் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் லத்தீப் மெமோரியல் கோப்பைக்கான 9-ம் ஆண்டு மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி மைதானங்களில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. பரபரப்பான இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணியும் லத்தீப் மெமோரியல் காரைக்குடி அணியும் மோதின. இதில் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் கோவிலூர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை தட்டிச் சென்றது. அந்த அணியின் ரகுபாலன் இறுதி போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக டி.சி.பி.எல் அணியின் குணசீலன், பந்து வீச்சாளராக டி.சி.பி.எல் அணியின் ராமச்சந்திரன்ஆல்ரவுண்டராக லத்தீப் அணி வீரர் சுப்பிரமணியன், விக்கெட் கீப்பராக லத்தீப் அணி வீரர் மரகத கார்த்திக், சிறந்த இளம் வீரராக நைட்ஸ் அணி சபரிகிரிசன், சிறந்த பயிற்சியாளர் விருதை டி.சி.பி.எல் அணி வரதராஜனும் தட்டிச் சென்றனர். தமிழ்நாடு ரவுண்ட்ராபின் போட்டிக்கு தேர்வான வீராங்கனை பிரியதர்ஷினிக்கு விருது வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முரளிராஜன், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் சதீஷ்குமார், தொழிலதிபர்கள் செந்தில்குமார், புரூட்ஷாப் பாலு ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழஙகினர். அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை ரவிக்குமார், திருச்செல்வம், சங்கீர்த்தனன், பழனி மற்றும் விளையாட்டு வீரர்கள் செய்திருந்தனர்.






