என் மலர்
சிவகங்கை
- சாலை விதிகளை பின்பற்றி மாணவர்கள் சைக்கிள்களை இயக்க வேண்டும் என்று விழாவில் அமைச்சர் பேசினார்.
- சிவகங்கையில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவி களுக்கு சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
விலையில்லா சைக்கிள் கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 2022-23ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவி களுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் அடிப் படையில் மாவட்டத்திலுள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக ளில் பயிலும் 4,270 மாண வர்கள் மற்றும் 6,323 மாணவிகள் என 10 ஆயிரத்து 593 மாணவர் ளுகக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் மாணவிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 760 மதிப்பீட்டிலும் மாணவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் 900 மதிப்பீட்டிலும் என சைக்கிள்கள் வழங்கப் பட உள்ளன.
அதன் தொடக்கமாக இன்றைய தினம் சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 210 மாணவிகளுக்கு ரூ.9 லட்சத்து 99 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
சூற்றுச்சூழலை பாது காப்பதற்கும் அடிப்படை யாக சைக்கிள்கள் விளங்கி வருகிறது. இன்றைய தினம் இந்நிகழ்ச்சிகளின் மூலம் விலையில்லா சைக்கிள் களை பெற்றுள்ள மாணவர் கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி, முறையாக சைக்கிள்களை ஓட்ட வேண்டும்.
இதுபோன்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவர்கள் திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.இந்நிகழ்ச்சியில், காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஷ் குமார், விஜயகுமார், பள்ளி தலைமையாசிரியை சிவமணி, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
- வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் 12-வது மாவட்ட அளவிலான சிலம்பம் கோப்பைக்கான போட்டிகள் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டிக்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர்மன்றதலைவர் முத்துத்துரை முன்னிலை வகித்தார்.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற சிலம்ப போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட சிலம் பாட்ட கழக தலைவர் டாக்டர். பிரபு, துணைத்தலைவர்கள் வேலுச்சாமி, நமச்சி வாயம், கவுரவ தலைவர் அருள், செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ஆனந்த்குமார், போட்டிகள் இயக்குனர் நாகராஜன், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் கும ரேசன், டாக்டர்.திருப்பதி, மகரிஷி பள்ளிக்குழுமம் அஜய் யுக்தேஷ், அய்யப்பா டெக்ஸ்டைல்ஸ் சுந்தர், விசாலம் சிட்பண்ட்ஸ் உமா பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில அளவில் விளையாட தகுதிபெறுவர் என்பது குறிபிடத்தக்கதாகும்.
- தேவகோட்டை புதிய பஸ் நிலையத்தில் அத்துமீறி நுழையும் ஆட்டோக்களால் அரசு பஸ்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
- பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றி யுள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவை களுக்காக தேவகோட்டை நகருக்கு பஸ் மூலமாக அதிக அளவில் வந்து செல் கின்றனர். பேருந்து நிலையத் தில் போக்குவரத்து நெரிசல் களை குறைப்ப தற்காக கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட நகர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதிய பேருந்து நிலைய நுழைவாயிலில் கடந்த சில மாதங்களாகவே ஆட்டோக் கள் அதிகளவில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடை யூறாகவே செய்து வருகின்ற னர். புதிய பேருந்து நிறுத்தத் தில் நிறுத்தப்படும் நகரப் பேருந்துகள் இதனால் அருகில் உள்ள பேருந்து நிலையம் நுழைவாயில் வழி யாக செல்லும் நிலை ஏற்பட் டது. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
புதிய பேருந்து நிலையத் தில் நிறுத்தப்படும் ஆட் டோக்களால் போக்கு வரத்து நெரிசல் அதிக அள வில் ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரிய விபத்துக் கள் ஏற்பட வாய்ப்புகள் உள் ளது.
காவல்துறையினர் அவ் வப்போது இந்த ஆட்டோக் களுக்கு அபராதம் விதிக்கப் பட்டும் மீண்டும் மீண்டும் இதே தவறுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் செய்து வரு கின்றனர். அத்துமீறி பஸ் நிலையத்தில் நுழையும் ஆட் டோக்கல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் மாணவர் தலைமைப் பொறுப்பேற்பு விழா நடந்தது.
- ராஜேஸ்வரி நிகழ்வை ஒருங்கினைத்தார்.
காரைக்குடி
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் 2023-24 கல்வியாண்டிற்கான மாணவர் தலைமைப் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது.
2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் தேர்தலில் மாணவர்கள் வேட்புமனு தாக்கல் செய்து, கணினி மின்னனு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வாக்களித்தனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இதில் மாணவர் தலைவராக ஷ்ராவ்யா, மற்றும் துணைத் தலைவராக ஆதித்ய ராஜ் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.இவர்க ளுக்கான பதவியேற்பு விழா பள்ளியின் விழா அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் பாதுகாப்புத்துறை தலைமைத் தளபதி சங்கர் குமார் ஜா கலந்து கொண்டார்.
பள்ளியின் தாலாளர் சத்யன் தலைமை வகித்தார்.நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் முன்னிலை வகித்தார். கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி நிகழ்வை ஒருங்கினைத்தார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், இன்று நீங்கள் பள்ளியில் கற்கும் செயல்களே நாளை சமுதாயத்தில் உங்களை நிலைநிறுத்தும் தூணாகும். இப்பள்ளியின் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டவர்கள் எதிர்கால இந்தியாவின் தலைவர்கள். இன்று பள்ளியில் வாக்களித்தது நாளை இந்திய தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு முன்னோட்டமாகும்.
தலைமைப்பண்பு தனித்துவம் போன்றவற்றை கற்றுத் தரும் பள்ளிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மாணவரும் இந்தியாவின் முகங்கள் என்றும், பள்ளியின் சட்டத்தை மதித்தால் தான் நாளை நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழ முடியும் என்றார். முடிவில் முதல்வர் தேவராஜலு நன்றி கூறினார்.
- திருப்பத்தூர் அருகே 25-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை திருப்பத்தூர் மின் செயற்பொறி யாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆ.தெக்கூர் மற்றும் கீழசேவல்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 25-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெற்குப்பை, முறையூர், கொன்னத்தான்பட்டி, மகிபாலன்பட்டி, கண்டவராயன்பட்டி ,எஸ் எஸ் கோட்டை, பூலாங்குறிச்சி, செவ்வூர், ஆவினிப்பட்டி, சிறுகூடல்பட்டி, கீரணிப்பட்டி இளையாத்தங்குடி, நெடுமரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு மின் தடை ஏற்படும் இந்த தகவலை திருப்பத்தூர் மின் செயற்பொறி யாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழா
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்த மாட்டுவண்டி பந்தயம் காரைக்குடி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், நடுமாடு பிரிவில் 28 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 52 ஜோடிகள் என மொத்தம் 91 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 52 வண்டிகள் கலந்து கொண்ட தால் 27 மற்றும் 25 என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
அதேபோன்று மாடு ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு 4 காளைகள் இணைந்து 2 வண்டிகள் ஒன்றாய் சென்றதால் சாலையில் நின்று மாட்டு வண்டியை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் சிதறி அடித்து ஓடினர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் காரில் வந்து ஆடு திருடிய 2 பேர் சிக்கினர்
- காரை வழிமறித்து சத்தம் போட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் பிள்ளை வன ஊரணி அருகே சிவப்பு கலர் காரில் 3பேர் வந்தனர். காரில் இருந்து இறங்கி நோட்டமிட்டபடி இருந்த அவர்கள் அந்தப் பகுதியில் மேய்ச்சலில் இருந்த 2 ஆடுகளை காரில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காரில் ஆடு கத்தும் சத்தம் கேட்டதால் காரை வழிமறித்து சத்தம் போட்டனர். உடனடியாக காரை திருப்பிச் செல்ல முயன்றனர்.
ஆனால் கார் ஸ்டார்ட் ஆகாததால் 3 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். அதில் 2 பேர் ஊர் மக்களிடம் கையும் களவுமாக சிக்கினர். ஊர் மக்கள் காரில் இருந்த ஆட்டை மீட்டு சிக்கிய வாலிபர்களை மரத்தில் கட்டி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி போலீசார் ஆடு திருடியவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் திருப்புவனம் பாப்பாகுடியை சேர்ந்த ராமச்சந்திரன், ராஜா என்பதும், தப்பி ஓடியவர் மணி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகங்கை நகராட்சியில் ரூ.22 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
- ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கையில் நகராட்சி சார்பில் முடிவுள்ள திட்ட பணிகளை தொடங்கி வைக்கம் விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் கடந்த 2021-22-ம் நிதி யாண்டில் 26 வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.7.83 கோடி மதிப்பீட்டிலும், 2022-23-ம் நிதியாண்டில் 20 வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.14.56 கோடி மதிப்பீட்டி லும் என மொத்தம் 46 வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.22.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது வார்டு எண்:4 பகுதியில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள ராமசந்திரனார் பூங்கா, வார்டு எண்:21-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன் கீழ் ரூ.134 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட செக்கடி ஊரணியை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தல் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சண்முகராஜா கலையரங்கம் என சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதியில் மொத்தம் ரூ.153.50 லட்சம் மதிப்பீட்டில் 3 முடிவுற்ற வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சிவகங்கை நகர் மன்றத்தலைவர் எம்.துரைஆனந்த், நகராட்சி ஆணையாளர் அப்துல் ஹாரிஸ், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, பொது பணித்துறை மேற்பார்வையாளர் உலகநாதன், நகர் மன்ற உறுப்பினர்கள் சேதுநாச்சியார், அயூப்கான் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா தொடங்கியது. 30-ந் தேதி தபசு உற்சவம் நடக்கிறது.
- 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி யேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு கலச நீர், 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தர்ப்பைப்புல், மலர் மாலைகள் சாற்றி, சிறப்பு பூஜைகள், தீபாராத னை நடந்தது. பூஜைகளை கோவில் பரம்பரை ஸ்தானிகம் தெய்வசிகாமணி, பட்டர்கள் ராஜேஷ், சரவணன், குமார் நடத்தி வைத்தனர்.
இதில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமி ழரசி, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறும்.
தினமும் அம்மன் சர்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தபசு உற்சவம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. தபசு கோலத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு சோமநாத சுவாமி விருஷா பரூடராக காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். 31-ந் தேதி சந்தனக்காப்பு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் உறுதியளித்தார்.
- எண்ணற்ற திட் டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் வறட்சி நிவாரணம், நுண்ணீர் பாசன குழாய் மாற்றக் கோரு தல், ஆழ்குழாய் கிணறு அமைத்து தரக்கோரு தல், வரத்துக்கால் மற்றும் வரத்துக்கண்மாய் தூர்வாரக் கோருதல், சிறுதானியம் விளைவிக்கும் உழவர்க்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்க உதவி கோருதல் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய களஆய்வுகள் மேற்கொண்டு, உடன் நடவடிக்கை மேற் கொள்ளுமாறும் கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் பேசியதாவது:-
முதல் அமைச்சர் விவ சாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட் டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக் களின் நலன் காத்து வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தி லுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடன டியாக அகற்றி பயன்பாட்டி ற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தா மல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திட வும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல் மரங்கள் அகற்றுதல் போன்ற விவ சாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், மேலாண்மை இயக்குநர் (மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், மண் டல இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ஜூனு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தன பாலன், வருவாய் கோட்டா ட்சியர் பால்துரை (தேவ கோட்டை) மற்றும் முதல் நிலை அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதிய ரேசன் கடை- கலையரங்கம் கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி அரசு திட்டங்கள் பற்றி பேசினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் அரியாண்டிபுரம் ஊராட்சி யில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டிடம் மற்றும் புதிய ரேசன் கடை கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி திறந்து வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி அரசு திட்டங்கள் பற்றி பேசினார்.
விழாவில் வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், ஊராட்சி மன்ற தலைவர் ராக்கு குமரேசன் , கண்ணமங்கலம், கூட்டுறவு சங்க தலைவர் சுபதமிழரசன், வட்டாட்சியர் கோபி, மற்றும் அரியாண்டி புரம் கிராம பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.
- குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- பின்னர் மாணவிகளுக்கு அங்கேயே விளைவிக்கப்பட்ட சுரைக்காயை வழங்கினார்.
மானாமதுரை
மானாமதுரை நகராட்சி சார்பில் தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள வளமீட்பு பூங்காவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகளுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. துப்புரவு ஆய்வாளர் பாண்டிசெல்வம் தலைமை தாங்கி. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள். அதை எவ்வாறு கையாள வேண்டும். குப்பைகளை எவ்வாறு தரம் பிரிக்க வேண்டும். குறிப்பாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து, எவ்வாறு வழங்கிட வேண்டும், குப்பைகள் மூலம் உரங்கள் தயாரித்து, இந்த வளம்மீட்பு பூங்காவில் வளர்க்கப்பட்ட காய், கனிகள், முலிகை செடிகள், பூக்கள் பற்றி விளக்கி பேசினார். பின்னர் மாணவிகளுக்கு அங்கேயே விளைவிக்கப்பட்ட சுரைக்காயை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்தி ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.






