என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.22 கோடி மதிப்பில்  வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    சிவகங்கையில் புதிப்பிக்கப்பட்ட ராமச்சந்திரனார் பூங்காவை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். அருகில் தமிழரசி எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் துரைஆன்ந்த் உள்பட பலர் உள்ளனர்

    ரூ.22 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்

    • சிவகங்கை நகராட்சியில் ரூ.22 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
    • ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் நகராட்சி சார்பில் முடிவுள்ள திட்ட பணிகளை தொடங்கி வைக்கம் விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் கடந்த 2021-22-ம் நிதி யாண்டில் 26 வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.7.83 கோடி மதிப்பீட்டிலும், 2022-23-ம் நிதியாண்டில் 20 வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.14.56 கோடி மதிப்பீட்டி லும் என மொத்தம் 46 வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.22.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது வார்டு எண்:4 பகுதியில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள ராமசந்திரனார் பூங்கா, வார்டு எண்:21-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன் கீழ் ரூ.134 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட செக்கடி ஊரணியை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தல் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சண்முகராஜா கலையரங்கம் என சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதியில் மொத்தம் ரூ.153.50 லட்சம் மதிப்பீட்டில் 3 முடிவுற்ற வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை நகர் மன்றத்தலைவர் எம்.துரைஆனந்த், நகராட்சி ஆணையாளர் அப்துல் ஹாரிஸ், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, பொது பணித்துறை மேற்பார்வையாளர் உலகநாதன், நகர் மன்ற உறுப்பினர்கள் சேதுநாச்சியார், அயூப்கான் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×