புதிய ரேசன் கடை- கலையரங்கம் கட்டிடம் திறப்பு

புதிய ரேசன் கடை- கலையரங்கம் கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார் பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி அரசு திட்டங்கள் பற்றி பேசினார்.
புதிய ரேசன் கடை- கலையரங்கம் கட்டிடம் திறப்பு
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் அரியாண்டிபுரம் ஊராட்சி யில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டிடம் மற்றும் புதிய ரேசன் கடை கட்டிடத்தை முன்னாள் அமைச்சரும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி திறந்து வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி அரசு திட்டங்கள் பற்றி பேசினார்.

விழாவில் வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், ஊராட்சி மன்ற தலைவர் ராக்கு குமரேசன் , கண்ணமங்கலம், கூட்டுறவு சங்க தலைவர் சுபதமிழரசன், வட்டாட்சியர் கோபி, மற்றும் அரியாண்டி புரம் கிராம பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com