மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி

காரைக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவிக்கு மாங்குடி எம்.எல்.ஏ சான்றிதழ் வழங்கியபோது எடுத்த படம்.
வெற்றி பெற்ற மாணவிக்கு மாங்குடி எம்.எல்.ஏ சான்றிதழ் வழங்கியபோது எடுத்த படம்.
Published on

காரைக்குடி

சிவகங்கை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் 12-வது மாவட்ட அளவிலான சிலம்பம் கோப்பைக்கான போட்டிகள் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டிக்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர்மன்றதலைவர் முத்துத்துரை முன்னிலை வகித்தார்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற சிலம்ப போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட சிலம் பாட்ட கழக தலைவர் டாக்டர். பிரபு, துணைத்தலைவர்கள் வேலுச்சாமி, நமச்சி வாயம், கவுரவ தலைவர் அருள், செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ஆனந்த்குமார், போட்டிகள் இயக்குனர் நாகராஜன், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் கும ரேசன், டாக்டர்.திருப்பதி, மகரிஷி பள்ளிக்குழுமம் அஜய் யுக்தேஷ், அய்யப்பா டெக்ஸ்டைல்ஸ் சுந்தர், விசாலம் சிட்பண்ட்ஸ் உமா பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில அளவில் விளையாட தகுதிபெறுவர் என்பது குறிபிடத்தக்கதாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com