என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priced lands"

    • விலை நிலங்களை பன்றிகள் சூறையாடியதால் விவசாயி கவலை அடைந்துள்ளனர்.
    • 35 மூடை நெல் கிடைக்காமல் 10 மூடைகள் மட்டுமே விளைச்சல் ஏற்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா ராஜ கம்பீரத்தில் விவசாய நிலங்களை அவ்வப்போது பன்றிகள் நாசம் செய்து வருகிறது. அதனை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ராஜகம் பீரத்தில் உள்ள விவசாயி காசிராஜனுக்கு சொந்தமாக 2 ஏக்கம் விலை நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தில் பன்றிகள் அவ்வப்போது நாசம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு சொந்தமான விலை நிலங்களில் பன்றிகள் நாசம் செய்தது இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எனக்கு சொந்தமான விலை நிலங்களில் நெல் விவசாயம் செய்து வருகி றேன். இன்னும் ஒரு பத்து தினங்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ள நெற்கதிர்களை பன்றிகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்திருக்கிறது. இரவு முழு வதும் பாம்புகள், விஷப் பூச்சிகளோடு அரிக்கேன், டார்ச் லைட் விளக்குகளோடு பாதுகாப்பு முயற்சியில் இருக்கும் போதே ஒரே நேரத்தில் பத்து பன்றிகள் வயலுக்குள் இறங்கி நாசம் செய்து விட்டது.

    இதன் காரணமாக விவ சாயம் மகசூல் பாதிக்கும் என்று காசிராஜன் தெரிவித் தார். விவசாயத்தை பன்றி கள் அழிப்பதால் விவசாய மகசூல் கடுமையாக பாதிக் கிறது. கடந்தாண்டு இதே போன்று பாதிப்பு ஏற்பட்டு கிடைக்க வேண்டிய 35 மூடை நெல் கிடைக்காமல் 10 மூடைகள் மட்டுமே விளைச்சல் ஏற்பட்டது.

    அதேபோன்று இந்த ஆண்டும் பாதிப்படையும் நிலை உள்ளது என்று காசி ராஜன் தெவித்தார். பன்றி களை ஒழுங்குபடுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி மிக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

    ×