search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspection by authorities"

    • திருப்பத்தூர் வாரசந்தையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
    • முத்திரையிடாத எடைகற்கள், தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை,காளையார் கோவில், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் சென்னை தொழி1லாளர் ஆணையம் மற்றும் சட்டமுறை எடை யளவு கட்டுப்பாடு அலுவலகம் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணைய அமலாக்க பிரிவு அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் முன்னதாக திருப்பத்தூரில் வாரச்சந்தை மற்றும் வணிக வளாக வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகள், எடைகற்கள், மின்னணு தராசுகள், விட்ட திராசுகள் முதலியவற்றிக்கான முத்திரைகள், வணிக நிறுவனம் நடத்துவதற்கான அரசு சான்றிதழ்கள், பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் பொருட்களுக்கான விலை நிர்ணய பட்டியல், நுகர்வோர் குறை தெரிவிக்க வேண்டிய புகார் எண், தயாரிப்பு தேதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் முத்திரை வைக்கப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் உட்பட 29 எடை அளவு இயந்திரங்களை பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து சிவகங்கை மற்றும் காளையார் கோயில்களில் பொட்டல பொருட்கள் மற்றும் சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அரசின் முறையான வழிகாட்டுதலை பின்பற்றாத காரணத்தினால் அந்நிறுவனங்களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது.

    மேலும் தொடர்ந்து வியாபாரிகள் மத்தியில் மின்னணு தராசுகளுக்கு வருடத்திற்கு ஒரு முறையும் ஏனைய மற்ற தராசுகளுக்கு 2ஆண்டுகளுக்கு ஒரு முறையும் முத்திரை வைக்க வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழ்களை அதனுடன் இணைத்து வைக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் 5000ரூபாய் அவதாரம் விதிக்கப்படும் என்றும் வியாபாரிகள் மத்தியில் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கப்பட்டது.

    இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் இ.முத்து, துணை ஆய்வாளர் வேலாயுதம், உதவி ஆய்வாளர்களான தீன தயாளன், வசந்தி மற்றும் திருப்பத்தூர் நகர் காவல் நிலைய காவலர்கள் ஆகியோர் இருந்தனர்

    ×