என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிக்ரி இயக்குனர் ரமேஷா பேட்டியளித்தபோது எடுத்த படம்.
ஆய்வகங்கள், கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
- காரைக்குடி சிக்ரியில் ஆய்வகங்கள்-கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 24-ந்தேதி தொடங்குகிறது.
- தொழில்நுட்பம் மற்றும் மேம்பாடு நிகழ்வுகள் பற்றி எடுத்துரைக்கப்படும்.
காரைக்குடி
மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை நாடு முழுவதும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு குழுமத்தில் உள்ள 37 ஆய்வகங்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்த பிரசாரத்தை மக்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்த அறிவுறுத்தி யுள்ளது.
அதன்படி காரைக்குடி சிக்ரியில் ஒரு வாரம் ஒரு ஆய்வகம் குறித்த பிரசார நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி சிக்ரி வளாகத்தில் தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் சிக்ரியின் வரலாறு, சாதனைகள், ஆராய்ச்சி துறைகளாகிய அரிமான தடுப்பு, தற்கால மின்கலம், தொழிற்சாலைக்கு உபயோ கமான ரசாயனங்கள், மின்முலாம், மின் வேதியியல், தூய நிலையான ஆற்றல் ஆகியவற்றில் நடை பெறும் ஆராய்ச்சி, தொழில் நுட்பம் மற்றும் மேம்பாடு நிகழ்வுகள் பற்றி எடுத்துரைக்கப்படும்.
இதுகுறித்து சிக்ரி இயக்குனர் ரமேஷா கூறியதாவது:-
5 நாட்கள் நடைபெறும் இந்த தொழில் நுட்ப மேம்பாடு குறித்த நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், முதலீட்டாளர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பங்கு பெறுகின்றனர். வருகிற 24-ந்தேதி மலர் வெளியீடு, தொழில் வர்த்தக சந்திப்பு, 25-ந்தேதி சிக்ரி நிறுவன நாள் கொண்டாட்டம், அரிமானம் தடுப்பு கருத்தரங்கம், 26-ந்தேதி அறிவு சார் காப்புரிமை விழிப்புணர்வு பேரணி, ஜூலை 27-ந் ஆற்றல் தொழில் நுட்ப நிகழ்வு, சிக்ரியின் சென்னை கிளை அறிவுசார் காப்புரிமை கருத்தரங்கம், ஜூலை 28-ந்தேதி மின்முலாம் பூசுவோர் கருத்தரங்கம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






