என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.
    X

    குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ.

    • குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • ரூ.10.55 லட்சம் மதிப்பீட்டில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடி கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் எதிரே, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.55 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

    இதில் சிவகங்கை அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, நகர் செயலாளர் என்எம்.ராஜா, சிவகங்கை ஒன்றிய குழுத்துணைத்தலைவர் கேசவன், மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, வாணியங்குடி கிளைச் செயலாளர்கள் முத்துராமலிங்கம், பிச்சை, நாகராஜ், ராஜா, கருணாநிதி, முத்துக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கயல்விழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×