என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி வாகனம் மரத்தில் மோதி விபத்து
- கல்லூரி வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
- காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் தனியார் பி.எட்., கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட 20 பேர் கல்லூரி வாகனத்தில் கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டை பகுதியில் வந்த போது டிரைவருக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் வழிவரைபடத்தை பார்ப்பதற்காக ஆசிரியர் ஒருவரிடம் செல்போன் கேட்டுள்ளார். அப்போது அந்த ஆசிரியர் வழிவரைபடத்தை செல்போனில் தேர்வு செய்து டிரைவரிடம் காண்பித்துள்ளார். அதனை பார்த்து கொண்டே டிரைவர் வாகனத்தை ஓட்டி உள்ளார். அப்போது வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகியது. அங்கிருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் சரிந்து நின்றது. அதிஷ்டவசமாக அதம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு மாணவிக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டது. மற்ற மாணவிகள் சிறு காயங்களுடன் தப்பினர்.டிரைவரும் சிறிய காயத்துடன் தப்பினார். காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.






