என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரர் தேர்வு"

    • உலக கிக் பாக்சிங் போட்டிக்கு சிவகங்கை வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • அவருக்கு நகர்மன்ற தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை தெற்கு ராஜவீதியில் வசிக்கும் பூபதி -ரேவதி தம்பதியரின் மகன் விக்னேஷ். இவர் சிறுவயதில் இருந்தே கிக் பாக்ஸிங் விளையாட்டில் ஆர்வமாக இருந்ததை அறிந்த இவரது பெற்றோர் 2015-ல் சிவகங்கையை சேர்ந்த நிமலன் நீலமேகம் என்ப வரிடம் குத்துச்சண்டை பயிற்சிக்கு சேர்த்தனர்.

    இதனை அடுத்து 2018ல் மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற விக்னேஷ், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் 2019ல் பெங்களூரில் நடைபெற்ற நேஷனல் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்.

    அதே ஆண்டில் சோழன் புக் ஆப் ரெகார்ட்ஸ் சிறந்த கிக்பாக்ஸர் விருதையும் பெற்றார். அதன் பிறகு குணசீலன் என்பவரிடம் கிக் பாக்ஸிங் பயிற்சி பெற்று, மாவட்ட மற்றும் மாநில அளவிலான நடைபெற்ற போட்டியிலும் தங்க பதக்கம் பெற்றார். கடந்த 1-ந் தேதி முதல் 5-ந்தேதி வரை நேஷனல் போட்டி தகுதி சுற்றில் வெற்றி பெற்று உலக கிக் பாக்சிங் போட்டிக்கு தேர்வு உள்ளார்.சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் கிக் பாக்ஸிங் வீரர் விக்னேஷ் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து மேலும் ரொக்க தொகை வழங்கி ஊக்குவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் அயுப்கான், ஜெயகாந்தன், ராமநாதன், ராஜேஸ்வரி ராம்தாஸ், வண்ணம்மாள் சரவணன், பிரியங்கா சண்முகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×