என் மலர்
நீங்கள் தேடியது "kickboxing"
- புதுச்சேரி சார்பில் கவுண்டன் பாளையத்தில் உள்ள முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
- இப்போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில ஒருங்கிணைந்த கிக் பாக்ஸிங் சங்கத்தின் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி புதுச்சேரி சார்பில் கவுண்டன் பாளையத்தில் உள்ள முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. சப்- ஜூனியர் , ஜூனியர், சீனியர் ,மற்றும் மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவு களில் நடைபெற்ற இப்போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தமிழ்கிக் பாக்ஸிங் கிளப் வீரர்கள் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். கிளப்பின் தலைவர் செபஸ்தியன், மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்ட கிக் பாக்ஸிங் வீரர்களுக்கு புதுவை இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குனர் முத்து கேசவலு, புதுைவ கிக் பாக்ஸிங் சங்க தலைவர் இளங்கோவன், முத்து ரத்தின அரங்க மேல்நிலைப் பள்ளியின் இயக்குனர் கராத்தே சுந்தரராஜன், புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் சேர்மன் ஆளவந்தார், சீனியர் பயிற்சியாளர்கள் பாண்டியன், தங்கவேலு, மோகன் ஆகியோர் பரிசு கோப்பைகளை வழங்கினர்.
இப்போட்டியில் தேசிய நடுவரான அமிர்தராஜ், பிரவீன் குமார், அய்யனார், சந்திரகுமார் , ராஜ்குமார் விநாயகம் , அபிலாஸ் ஆகியோர் செயல்பட்டனர்.
- உலக கிக் பாக்சிங் போட்டிக்கு சிவகங்கை வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- அவருக்கு நகர்மன்ற தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை தெற்கு ராஜவீதியில் வசிக்கும் பூபதி -ரேவதி தம்பதியரின் மகன் விக்னேஷ். இவர் சிறுவயதில் இருந்தே கிக் பாக்ஸிங் விளையாட்டில் ஆர்வமாக இருந்ததை அறிந்த இவரது பெற்றோர் 2015-ல் சிவகங்கையை சேர்ந்த நிமலன் நீலமேகம் என்ப வரிடம் குத்துச்சண்டை பயிற்சிக்கு சேர்த்தனர்.
இதனை அடுத்து 2018ல் மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற விக்னேஷ், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் 2019ல் பெங்களூரில் நடைபெற்ற நேஷனல் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்.
அதே ஆண்டில் சோழன் புக் ஆப் ரெகார்ட்ஸ் சிறந்த கிக்பாக்ஸர் விருதையும் பெற்றார். அதன் பிறகு குணசீலன் என்பவரிடம் கிக் பாக்ஸிங் பயிற்சி பெற்று, மாவட்ட மற்றும் மாநில அளவிலான நடைபெற்ற போட்டியிலும் தங்க பதக்கம் பெற்றார். கடந்த 1-ந் தேதி முதல் 5-ந்தேதி வரை நேஷனல் போட்டி தகுதி சுற்றில் வெற்றி பெற்று உலக கிக் பாக்சிங் போட்டிக்கு தேர்வு உள்ளார்.சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் கிக் பாக்ஸிங் வீரர் விக்னேஷ் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து மேலும் ரொக்க தொகை வழங்கி ஊக்குவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் அயுப்கான், ஜெயகாந்தன், ராமநாதன், ராஜேஸ்வரி ராம்தாஸ், வண்ணம்மாள் சரவணன், பிரியங்கா சண்முகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






