என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி
    X

    கிக் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கிய வழங்கிய காட்சி.

    மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி

    • புதுச்சேரி சார்பில் கவுண்டன் பாளையத்தில் உள்ள முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • இப்போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கிக் பாக்ஸிங் சங்கத்தின் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி புதுச்சேரி சார்பில் கவுண்டன் பாளையத்தில் உள்ள முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. சப்- ஜூனியர் , ஜூனியர், சீனியர் ,மற்றும் மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவு களில் நடைபெற்ற இப்போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் தமிழ்கிக் பாக்ஸிங் கிளப் வீரர்கள் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். கிளப்பின் தலைவர் செபஸ்தியன், மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்ட கிக் பாக்ஸிங் வீரர்களுக்கு புதுவை இந்திய விளையாட்டு ஆணையத்தின் இயக்குனர் முத்து கேசவலு, புதுைவ கிக் பாக்ஸிங் சங்க தலைவர் இளங்கோவன், முத்து ரத்தின அரங்க மேல்நிலைப் பள்ளியின் இயக்குனர் கராத்தே சுந்தரராஜன், புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் சேர்மன் ஆளவந்தார், சீனியர் பயிற்சியாளர்கள் பாண்டியன், தங்கவேலு, மோகன் ஆகியோர் பரிசு கோப்பைகளை வழங்கினர்.

    இப்போட்டியில் தேசிய நடுவரான அமிர்தராஜ், பிரவீன் குமார், அய்யனார், சந்திரகுமார் , ராஜ்குமார் விநாயகம் , அபிலாஸ் ஆகியோர் செயல்பட்டனர்.

    Next Story
    ×