என் மலர்
சிவகங்கை
- கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல் வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல் தலைமை தாங்கி னார்.
கருணாநிதி உருவப் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணி வித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சி யில் மாவட்ட மாணவரணி கதிர் ராஜ்குமார், நகர செயலா ளர் கார்த்திகேயன், பேரூ ராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, நாராய ணன், மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை தேவஸ்தா னத்துக்கு பாத்தியப்பட்ட சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோவில் விவசாய நிலத்தில் 2 சமூக மக்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்ற னர். இந்த ஆண்டு கோவி லுக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் சோளம், நிலக்கடலை பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த நிலத்தில் அனுமதி பெறாமல் இளவட்ட மஞ்சு விரட்டு நடத்த ஏற்பாடு செய்துள் ளனர். எனவே அரசு அனுமதி பெறாமல் மஞ்சு விரட்டு நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு அரசாணை யில் இப்பகுதி இடம் பெறவில்லை. மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றார்.
போலீசார் தரப்பிலும் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த மனு மீது வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையடுத்து சிங்கம்பு ணரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் இள வட்ட மஞ்சுவிரட்டு நடை பெறாது என போலீசார் அறிவிப்பு செய்தனர். இந்த நிலையில் சிங்கம்புணரி கிழவன் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இளவட்ட மஞ்சு விரட்டு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் சிலர் விளம்பரம் செய்து வருவதாகவும், அதை நம்ப வேண்டாம் எனவும் ேபாலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனை மீறி மஞ்சுவிரட்டு நடத்த முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள் ளன. தற்போது அந்த பகுதியில் திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- அரசு பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தியதை மாணவிகளுடன் பெஞ்சில் அமர்ந்து கலெக்டர் ஆஷா அஜீத் கவனித்தார்.
- ரெக்கார்டு நோட்டுகளையும் ஆய்வு செய்தார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண் ணங்குடி ஒன்றியத்தில் நடை–பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்காக வந்த கலெக்டரை கண்ணங் குடி ஒன்றிய சேர்மன் சித்தா–னூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து சித்தானூர் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி மற்றும் அங்குள்ள கழிப்பறை கட்டி–டங்களை ஆய்வு செய்த கலெக்டர் மாணவ, மாணவி–களுக்கு அறிவு சார் புத்த–கங்களை சேர்மன் முன்னி–லையில் வழங்கினார். அந்த ஊராட்சியில் புதிதாக கட் டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம், ஊரணி மராமத்து பணிகளை ஆய்வு செய்து அனுமந்தகுடி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது மாணவ, மாணவிகளுடன் கலந்துரை–யாடி அங்கு புதிதாக கட் டப்பட்டு வரும் பல லட்சம் மதிப்பிலான சுற்றுச்சுவர் பணிகளை பார்வையிட்டு பள்ளி வளாகத்தில் மரக் கன்று நட்டு வைத்தார். அனுமந்தகுடி ஊராட்சியில் உள்ள நூலகத்தை ஆய்வு செய்து தொடர்ந்து மீனாப் பூர் நூலகம்,
சடையமங்கலம் வேளா–ளர் குடியிருப்பு பகு–தியில் உள்ள ஊரணியில் மரா–மத்து பணிகள், அதன் அரு–கில் விவசாய பணிகளுக் காக அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய பாலம் கட்டும் பணிகள் ஆகையவற்றையும் பார்வையிட்டார்.
கண்ணங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து மருத்துவ பிரிவுக–ளிலும் ஆய்வு செய்து பதி–வேடுகள் சரியாக பின்பற்றப் படுகிறதா என பார்வை–யிட்டு, நாடாகுடி கிராமத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள பொதுமக்களுடன் கலந்து–ரையாடி குறைகளை கேட்ட–றிந்தார். காட்டுக்குடி புதூர் பகுதியில் உள்ள கிச்சன் செட்டை ஆய்வு செய்து கண்ணங்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒன்றிய அலுவல க கட்டிடத்தை பார்வையிட்டு ஒன்றிய அலு–வலகத்தில் அனைத்து பிரி–வுகளிலும் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து கண்ணங்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வகுப்பறை–யில் ஆசிரியர் பாடம் நடத் தும்போது கலெக்டர் மாண–விகளுடன் பெஞ்சில் அமர்ந்து பாடம் கவனித்தார். மேலும் மாணவிகளின் ரெக்கார்டு நோட்டுகளையும் பார்வையிட்டார். இதனால் மாணவ, மாணவிகள் உற்சா–கம் அடைந்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகா–வதி, கண்ணங்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம், கிராம ஊராட்சி அலுவலர் முத்துக் குமார் மற்றும் கிராம நிர் வாக அலுவலர்கள் உடனி–ருந்தனர்.
- மதுரை அருகே பிராகுடியில் ஆயிரம் ஆண்டு பழமையான பாண்டியர் கால அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.
- முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானதாக இருக்கலாம்.
மானாமதுரை
மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச்சாலையில் இருந்து கல்லம்பல் செல்லும் வழியில் உள்ள பிராகுடி என்ற ஊரின் வயல் பகுதியில் பழமையான சிலை இருப்பதாக மதுரை தெப்பக்குளம் ஸ்ரீமந் நாயகியார் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் சேசனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அந்த மாணவர் தொல்லியல் கள ஆய்வாளர் மீனாட்சி சுந்தரத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அவர் அந்த சிலையை ஆய்வு செய்ததில் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் என்பது தெரியவந்தது.
இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:-
இந்த சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மகுடத்துடன் கூடிய விரிந்த ஜடா பாரத்துடன் உள்ளது, இரு காதுகளிலும் பத்ர குண்டலம் அணிந்துள்ளார், கழுத்தில் ஆபரணமும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் தோள்வளையும், கை வளையல்களுடனும் அய்யனார் சிற்பம் அமைந்துள்ளது. வலது கரத்தில் பூச்சென்டினை பிடித்தபடியும்
இடது கரம் கஜ ஹஸ்தத்தை முன்னோக்கி நீட்டியவாறு மடக்கி நிறுத்திய முழங்கால் மீது இடது கை மணிக்கட்டை வைத்த நிலையில் தண்ட ஹஸ்தமாகவும் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப் பட்டுள்ளது. இடது காலை பீடத்தின் மீது குத்தவைத்தும் வலது காலை கீழே தொங்க விட்டும் உத்குடிகாசன கோலத்தில் அமர்ந்தபடி அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த
சிற்பத்தின் வடிவ மைப்பை வைத்துப் பார்க்கும்போது இவை முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானதாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவகங்கையில் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கையில் கருணா நிதி 5-ம் ஆண்டு நினைவு தினம் தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. தி.மு.க. நகர செயலாளரு மான துரைஆனந்த் தலை மையில் மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து முன்னிலையில் சிவகங்கை கோர்ட் வாசலில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கருணா நிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது.
அதனை தொடர்ந்து சிவகங்கை அரண்மனை வாசலில் நகர்மன்ற உறுப்பி னர் அயூப்கான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருணா நிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பனங்காடி சாலையில் உள்ள மாற்றுதிறனாளி களுக்கான தாய் இல்லத்தில் கருணாநிதி படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில்நகர மன்ற உறுப்பினர்கள் ஜெய காந்தன், ராமதாஸ், விஜய குமார் பாக்கியலட்சுமி, சேது நாச்சியார் வீரகாளை, துபாய் கார்த்தி, கீதா கார்த்திகேயன், ராஜபாண்டி மற்றும் நகர்மன்ற துணை தலைவா கார். கண்ணன், இளைஞர் அணி ஹரிஹரன் மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.
- திருப்புவனத்தில் கருணாநிதி நினைவு தினம் நடந்தது.
- பேரூராட்சி தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-ம் ஆண்டுநினைவு நாள் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அதைதொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்டதுணை செயலாளர் பேரூராட்சி தலைவர் த.சேங்கைமாறன் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லா மற்றும் நிர்வாகிகள், பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரையில் நகர செயலாளர் பொன்னுசாமி தலைமையில் ஊர்வலமாக வந்து கருணாநிதி உருவபடத்திற்க்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நகராட்சி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் வருகிற 12-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடக்கிறது.
சிவகங்கை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்த உள்ளது. முதல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிவகங்கை காஞ்சிரங்காலில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நடைபெற உள்ளது.
இத்தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிபரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் https://bitly/svgjobfair1 என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தெரிவித்து உள்ளார்.
- ரத்த தான முகாம் நடந்தது.
- 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்குடி தலைமை மருத்துவமனை மற்றும் த.மு.மு.க. சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், நகராட்சி ஆணையாளர், காரைக்குடி தலைமை மருத்துவமனை மருத்துவர் அருள்தாஸ், தேவகோட்டை தலைமை மருத்துவமனை மருத்துவர் சிவதானு, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அன்சாரி உசேன், அகிலன் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் தேவகோட்டை, காரைக்குடி மருத்துவமனைகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழா நடந்தது.
- மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய நெல் விதைப்புத் திருவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். முன்னாள் வங்கி மேலாளர் பாரதி, முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதல்வர் கூறியதாவது:-
பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், தில்லை நாயகம் முதலிய நெல் விதைகள் விதைப்பு செய்யப்பட்டது.மாப்பிள்ளை சம்பா, தில்லை நாயகம் 150 நாட்கள், காட்டுயானம் 180 நாட்கள் வயதுடைய பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகும். தில்லை நாயகம் சென்ற ஆண்டு மீட்டெடுத்த உயர் விளைச்சல் தரக்கூடிய பாரம்பரிய நெல் ரகமாகும். இது சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியில் புதிதாக விதைப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 பாரம்பரிய நெல் ரகங்களும் அதிக ஊட்டச்சத்தும், மருத்துவ குணங்களும் உடையவை. நன்கு வறட்சியை தாங்கி வளரக் கூடியவை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு இந்தியாவில் உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.ஆனால் ஊட்டச்சத்து பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.இதுபோன்ற பாரம்பரிய நெல் வகைகளை விதைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பத்தூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது.
- அமைச்சர் பெரியகருப்பன் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது. மாவட்ட திட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார். கோட்ட செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். இதில் திட்ட தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் சரவண குமார், மாநில தொழிலாளர் நல செயலாளர் ரவிந்திரன், மதுரை மண்டல செயலா ளர் ராஜேஷ் கண்ணன், பேரவை செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் முத்துராம லிங்கம், வட்டச் செயலாளர் சோமு, மாநிலத் துணைத் தலைவர் இராமு, திருப்பத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், மற்றும் கோட்டம், உப கோட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் சங்கபொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கல்லூரி கருத்தரங்கு நடந்தது.
- பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரியில் வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) துறை சார்பில் "டிஜிட்டல் உலகில் தொழில்முனைவோர்களுக்கான புதுமை திட்டங்கள்" என்னும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். முதல் அமர்வில் நைஜீரியா, ஆப்பிரிக்கா பல்கலைக்கழகம், மேலாண்மை அறிவியல் துறை, இணைப்பேராசிரியர் ராஜன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பேராசிரியர் வெங்கடேசன் பங்கேற்றார். பேராசிரியர் அருள் சேவியர் விக்டர் நன்றி கூறினார்.
2-வது அமர்வில் பேராசிரியர் அரபாத் அலி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உஸ்பெகிஸ்தான், தொழில் நுட்பத்துறை இணைப்பேராசிரியர் சுபைர் அலி கலந்துகொண்டார். முடிவில் பேராசிரியர் அரபாத் ஹசன் நன்றி கூறினார். நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன மேலாண்மை துறை, மூத்த பேராசிரியர், வேதிராஜன் கலந்துகொண்டு பேசினார். பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார்.
- வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இளையான்குடி செயல் அலுவலர் கோபிநாத் உள்பட பலர் உடனிருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்கள், குடும்ப நல முகாம்கள் நடந்தன. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
மேலும் இளையான்குடி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
குடும்ப நல முகாம்களில் எவ்வித சிரமுமின்றி, விண்ணப்பங்கள் வழங்கவும், போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் அதிகாரி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. சாலை கிராமத்தில் எம்.பி. நிதியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகள், அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்டது.
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், ஒன்றிய பொது நிதி 2022-23-ன் கீழ் ரூ.5.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை கட்டு மானப்பணிகள் தொடர்பா கவும் ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது.இப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.
மேலும் இளையான்குடி பகுதியில் குடும்ப நல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வுகளின் போது, துணை இயக்குநர் (சுகா தாரம்) விஜய் சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) பெருமாள்சாமி, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முனியாண்டி, இளை யான்குடி பேரூராட்சித் தலைவர் நஜீமுதீன், இளை யான்குடி வட்டாட்சியர் கோபிநாத், இளையான்குடி செயல் அலுவலர் கோபிநாத் உள்பட பலர் உடனிருந்தனர்.






