search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் தொடர்பு முகாம்
    X

    நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஆஷா அஜீத் உள்ளார்.

    மக்கள் தொடர்பு முகாம்

    • மக்கள் தொடர்பு முகாமில் அமைச்சர், கலெக்டர் பங்கேற்றனர்.
    • 194 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்து 14 ஆயிரத்து 55 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் கே.நெற்புகப் பட்டி குரூப் சொக்கலிங்கம் புதூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு 166 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில் தகுதி யுடைய 126 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்த கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 5 பணிகள் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், வருவாய் துறையின் சார்பில் 79 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 14 ஆயிரத்து 400 மதிப்பீட்டிலும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.16 ஆயிரத்து500 மதிப்பீட்டிலும் கூட்டுறவுத்துறை சார்பில் மொத்தம் ரூ.39 லட்சத்து 95 ஆயிரத்து 700 மதிப்பீட்டில் கடனுதவிகளும் உள்பட மொத்தம் 194 பயனாளி களுக்கு ரூ.61 லட்சத்து 14 ஆயிரத்து 55 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சரண்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், சொக்கலிங்கம் புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பெருமாள், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×