என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை அருகே வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தத்தனி கிராமத்தில் உள்ள நூலகங்களில் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சித்தானூர் கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சேங்கை ஊரணி தூர்வாருதல், படித்துறை கட்டும் பணி, ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கழிவறை கட்டும் பணி, ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் குறிச்சிவயலில் தார்சாலை அமைக்கும் பணி, ரூ.6.13 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சீரமைப்பு பணி, ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டும் பணி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து அனுமந்தக்குடி கிராமத்தில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணியை ஆய்வு செய்தார். தத்தனி கிராமத்தில் உள்ள நூலகங்களில் ஆய்வு செய்தார்.

    கண்ணங்குடி அரசு மேல் நிலைப்பள்ளியினை பார்வையிட்டு பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு செய்தார். கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளை யும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    • சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூரை இணைக்ககோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு தே.மு.தி.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெ–ரும் கண்டன ஆர்பாட் டம் மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய அம்சமாக காவிரி தண்ணீரை திறக்க வேண்டும், மகளிர் உரிமை தொகை ரூ.1,000 அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதி–களை இணைத்திட வேண்டும்.

    சிங்கம்புணரி சீரணி அரங்கத்தை இடிக்கக் கூடாது, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும், விவ–சாயிகளின் நிலத்தை என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து மீட்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட் டன.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில உயர்மட்டகஙகுழு உறுப்பி–னர் ஜாகிர் உசேன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், மாவட்ட அவைத்தலைவர் அருணா கண்ணன் மற்றும் நிர்வா–கிகள் துரை பாஸ்கரன், ராமதாஸ், பைசூர் ரஹ்மான், சிவக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, கிளைக்கழக நிர்வாகி–கள் கலந்துெகாண்டனர்.

    கொளுத்தும் வெயிலை–யும் பொருட்படுத்தாமல் மாவட்ட அளவில் நடை–பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்ற–னர்.

    • திருப்பத்தூர் அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் படுகாயமடைந்தார்.
    • இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது51). இவர் வடமாவளி ஊராட்சியின் முன்னாள் தலைவர் அ.ம.மு.க. திருப்பத்தூர் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவர் திருப்பத்தூரில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காட்டாம்பூர் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரில் மோதி சாலையில் கவிழந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த முருகானந்தத்திற்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
    • கொத்தடிமைத் தொழிலாளர்கள் எவரும் வேலை செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டது.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் ஆலோசனை யின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) முத்து தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சைல்டுலைன் உறுப்பி னர்கள், ஆள்கடத்தல் பிரிவு காவலர்கள், தொழிலாளர் துணை ஆய்வாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் மானாமதுரை பகுதியில் உள்ள ஊதுபத்தி தயார் செய்யும் இடங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனர். இதில் 18 வயதிற்குட்பட்ட குழந்தை கள், வளரிளம் பருவத் தொழிலாளர்கள், கொத்தடிமைத் தொழி லாளர்கள் எவரும் வேலை செய்யவில்லை என உறுதி செய்யப்பட்டது.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    • டிஜிட்டல் உலகில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • உதவி பேராசிரியர் அரபாத் ஹசன் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் டிஜிட்டல் உலகில் தொழில் முனைவோர்களுக் கான புதுமை திட்டங்கள் என்னும் தலைப்பில் சர்வ தேச கருத்தரங்கு நடைபெற் றது. துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் கருத்தரங்கை தொடங் கிவைத்து பேசினார்.

    முதல் அமர்வில் நைஜீ ரியா, ஆப்பிரிக்கா பல் கலைக்கழகம், மேலாண்மை அறிவியல் துறை, இணைப் பேராசிரியர் ராஜன் துரை ராஜ் கலந்து கொண்டு தொழில் முனைவோர் வெளிநாட்டு முதலீடு செய் யும் முறைகள் குறித்து பேசி னார்.

    இரண்டாம் அமர்வில் உதவிப்பேராசிரியர் அர பாத் அலி சிறப்பு விருந்தின ரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக உஸ் பெகிஸ்தான், தொழில் நுட் பத்துறை இணைப்பேரா சிரியர் சுபைர் அலி கலந்து கொண்டு சிறு தொழில் வளர்ச்சியில் கணினி வழி கற்றலின் தாக்கம் குறித்து பேசினார். உதவி பேராசிரி யர் அரபாத் ஹசன் நன்றி கூறினார்.

    நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன மேலாண்மை துறை பேராசிரியர் வேதிராஜன் கலந்து கொண்டு பேசினார். உதவிப்பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • வைகை ஆற்றின் கரைகளில் சாலை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
    • நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதனூர் அருகே தடுப்பணை கட்டப்பட்டது. அப்போது ஆற்றின் வைகை ஆற்றின் இரண்டு கரை பகுதிகளிலும் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தடுப்பணை அமைத்தவுடன் கரை பகுதிகளில் சாலை அமைக்க எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது மானாமதுரை வைகைஆற்று பாலத்தில் இருந்து புதிதாக அமைக்க பட்ட ஆதனூர் தடுப்பணை வரை ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெருக்க ளுக்கு எளிதாக செல்லும் வகையிலும், நடைபயிற்சிக்கு பயன்படும் வகையிலும் ஆற்றின் இருகரைகளிலும் மரகன்றுகளை வளர்த்து சிமெண்ட் அல்லது தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த சாலை அமைப்பதன் மூலம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும் எனவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • மக்கள் தொடர்பு முகாமில் அமைச்சர், கலெக்டர் பங்கேற்றனர்.
    • 194 பயனாளிகளுக்கு ரூ.61 லட்சத்து 14 ஆயிரத்து 55 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் கே.நெற்புகப் பட்டி குரூப் சொக்கலிங்கம் புதூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு 166 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில் தகுதி யுடைய 126 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்த கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 5 பணிகள் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், வருவாய் துறையின் சார்பில் 79 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 14 ஆயிரத்து 400 மதிப்பீட்டிலும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.16 ஆயிரத்து500 மதிப்பீட்டிலும் கூட்டுறவுத்துறை சார்பில் மொத்தம் ரூ.39 லட்சத்து 95 ஆயிரத்து 700 மதிப்பீட்டில் கடனுதவிகளும் உள்பட மொத்தம் 194 பயனாளி களுக்கு ரூ.61 லட்சத்து 14 ஆயிரத்து 55 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சரண்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், சொக்கலிங்கம் புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பெருமாள், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுடு மண்ணால் செய்த பாம்பின் தலைப்பகுதி போன்ற உருவம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.
    • இச்சுடு மண் உருவமானது சொர சொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 9-ம் கட்ட அகழாய்வில் 9 குழிகள் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இதில் 9-வது குழியில் சுமார் 7 அடி ஆழத்தில் தோண்டியபோது பானை ஓடுகள் வெளிவந்தன.

    அவற்றை வகைப்படுத்தியபோது, சுடு மண்ணால் செய்த பாம்பின் தலைப்பகுதி போன்ற உருவம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. பாம்பின் கண்கள், வாய் போன்ற அமைப்பும் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது.

    இச்சுடு மண் உருவமானது சொர சொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. இது 6.5 செ.மீ. நீளம், 5.4 செ.மீ. அகலம், 1.5 செ.மீ. பருமனும் கொண்டுள்ளது.

    இதுதவிர சுடுமண்ணால் செய்த பந்து, வட்டச்சில்லுகள் போன்றவையும் கிடைத்துள்ளன. இந்த தகவலை மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார்.

    • பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசிய தரக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • டாக்டர் நபீஷாபானு முன்னிலையில் நடைபெற்றது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் தேசி யதர சான்றிதழ் வழங்குவதற் கான ஆய்வு நடைபெற்றது.

    பிரான்மலையில் மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல் பட்டு வருகின்றது. இங்கு தினந்தோறும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கர்ப் பிணி பெண்கள் உள்பட 250-க்கு மேற்பட்ட பொது மக்கள் பல்வேறு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    இந்த பகுதி கிராம மக்களின் நம்பிக்கை யை பெற்ற பிரான்மலை ஆரம்ப சுகாதார மையத்தில் வாரத் தில் 2 நாட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு தர மான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் மேலும் பல்வேறு சிகிச் சைகள் அளித்திட மேலும் வசதிகள் கிடைப்பதற்காக தேசிய தரச் சான்றிதழ் வழங்குவதற்காக ஆய்வினை தேசிய தரச் சான்று ஆய்வு குழு நிபுணர்கள் வருகை தந்து ஆய்வு மேற்கொண்ட னர்.

    தேசிய தரச்சான்று ஆய்வுக்குழு நிபுணர்கள் டாக்டர் மணிஸ் மதன்லால் சர்மா, டாக்டர் பிரசாந்த், சூரிய வள்ளி ஆகியோர் ஆய்வினை மேற்கொண்ட னர். துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் விஜய் சந்திரன் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நபீஷாபானு முன் னிலையில் நடைபெற்றது.

    • அதிவேக இணைய சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.
    • அதிவேக இணைய சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு (டான்பி நெட்) நிறுவனம் பாரத்நெட் திட்டம் பகுதி 2 மூலம் இணையதள சேவை வழங் கும் திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் 2 மாதங்க ளில் முழுமையாக நிறைவ டையும். சிவகங்கை மாவட் டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 445 கிராம ஊராட்சிகளில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதற்காக அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள், தரை வழி யாகவும், மின்கம்பங்கள் மூலமாகவும் இணைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

    இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. அங்குள்ள அறை ஊராட்சி மன்ற தலைவரால் பராமரிக் கப்படுகிறது.

    அதேபோல் உப கரணங்களை பாது காக்கவும், தடையில்லா மின்வசதியை உறுதி செய்ய வும் ஊராட்சி செய லாளர்க ளுக்கு பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல் படுத்தப்படும்போது ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் அனைவரும் அவர்கள் வசிக்கும் இடத்தி லேயே அதிவேக இணைய சேவையை பெற முடியும்.

    ஒவ்வொரு ஊராட்சி யிலும் அமைக்கப்பட்டுள்ள மின்கலன், இன்வெர்ட்டர், ரூட்டர், கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் தமிழ்நாடு அரசின் உடை மையாகும். இவைகளை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபா்கள்மீது இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை, காரைக்குடியில் முத்திரையிடப்படாத தராசுகளை பயன்படுத்திய வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • ெதாழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லட்சுமிகாந்தன் ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பி ரமணியன் ஆலோசனை யின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தலைமையில் தொழி லாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், வசந்தி ஆகியோர் தேவகோட்டை, காரைக்குடி பஸ் நிலையங்க ளின் அருகில் உள்ள கடைகளிலும் மற்றும் கடைநிறுவனங்களிலும், சிறப்பு கூட்டாய்வு மேற் கொண்டனர்.

    இதில் முத்திரை யிடப்படாத மின்னனு தராசுகளை பயன்படுத்திய 4 உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் பொட்டலப் பொருட்களில் விபரங்கள் இல்லாமல் விற்பனை செய்த 3 நிறுவன உரிமையா ளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. மேலும் 6 மின்னனு தராசுகள், 3 இரும்பு எடை கற்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத் தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும், மின்னனு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும். விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் 2 வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரை யிடப்பட வேண்டும். அதன் சான்றிதழை உடன் வைத்தி ருக்க வேண்டும்.

    பொட்டலப் பொருட்க ளில் முக்கிய விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இந்த தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    • இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே உள்ள தாழையூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    தாழையூர் கூத்தாடி முத்துபெரியநாயகி கோவிலில் பந்தயம் தொடங்கியது. வெங்களூர் சாலையில் மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன. பெரியமாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக போட்டி நடந்தது. பெரியமாடுகளுக்கு 8 மைல் தூரமும், சின்ன மாட்டிற்க்கு 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப் பட்டது.

    சிவகங்கை, ராமநாத புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தேனி போன்ற மாவட்டத்தில் இருந்து 25 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு பிரிவில் சிவகங்கை மாவட்டம் காணிச்சாவூரணி மணி அம்பலம் மாடு முதல் பரிசு பெற்றது.

    2-வது நல்லாங்குடி முத்தையா சேர்வை மாடு, 3-வது தேவகோட்டை பிரசாத் மொபைல், 4-வது சாத்தி கோட்டை கருப்பையா சேர்வை மாடுகள் இடம் பெற்றன. சின்ன மாடு பிரிவில் மதுரை மாவட்டம் கொடிக்குளம் மாடு முதலிடம் பெற்றது. தேவகோட்டை பிரசாத் மொபைல், காரைக்குடி கருப்பண சேர்வை, கண்டதேவி மருது பிரதர்ஸ் மாடுகள் அடுத்தடுத்த இடம் பிடித்தன.

    வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

    ×