நமக்கு நாமே திட்டத்தில் புதிய ரேசன் கடை திறப்பு

நமக்கு நாமே திட்டத்தில் புதிய ரேசன் கடை திறப்பு நடந்தது. கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
நமக்கு நாமே திட்டத்தில் புதிய ரேசன் கடை திறப்பு
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி ஊராட்சியில் புதிய ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார்.

சிவகங்கை ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலாராஜா கோரிக்கையை ஏற்று நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கிராம மக்கள் பங்களிப்போடு காராம்போடை கிராமத்தில் புதிய ரேஷன் கட்டிடம் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட் டுள்ளது.

இதேபோல் டாமின் திட் டத்தின் கீழ் குமாரபட்டி கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார். நிகழ்வில் திட்ட இயக்குனர் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநா–பன், உதவி செயற்பொறி–யாளர் மாணிக்கவாசகம், ஒன்றிய கவுன்சிலர் அழகர் சாமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் பாப்பா, ரேஷன் கடை பங்களிப்பு தந்த சுப்பையா, கருப்பையா, பூமிராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com