என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டப்பட்டது.
    • கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார்.

    மானாமதுரை

    இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக சென்னை, ஓட்டல் இந்தியன் பேலஸ், உரிமையாளர், அல்ஹாஜ் செய்யது இப்ராகிம் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி தேசிய மாணவர்படை மாணவர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். இளையான்குடி, ஹாஜி இஸ்மாயில் கனி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் ராமநாதன் பேசினார். நிகழ்வில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக கல்லூரி துணைமுதல்வர் ஜகாங்கிர் நன்றி கூறினார். நிகழ்வினை தமிழத்துறை உதவிபேராசிரியர்அப்துல் ரஹீம் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலபணிதிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். கல்லூரி ஆட்சிக்குழு பொருளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அப்துல் சலீம், ஹாஜி சிராஜூதீன், சுயநிதி பாடபிரிவு இயக்குனர் சபீனுல்லாஹ்கான், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி, முதல்வர் முஹம்மது முஸ்தபா உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், பேராசிரி யர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

    • மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனார் நினைவு தூண் விரைவில் திறக்கப்படும்.
    • இந்த தகவலை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் சங்க கால புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பிரபலமான வரிகளால் அறியப்படுபவர் கணியன் பூங்குன்றனார்.

    இவர் மகிபாலன்பட்டி கிராமத்தில் வாழ்ந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இந்தநிலையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கணியன் பூங்குன்ற னாருக்கு மகிபாலன் பட்டியில் ரூ.21.02 லட்சம் மதிப்பீட்டில் நினைவுத்தூண் அமைக்கும் பணி முடிந்துள் ளது.

    இந்த நிலையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வ ராஜ், கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோர் முடிவுற்ற பணிகளை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகிபாலன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு ெகாண்டு வரப்படும். சுங்கச்சாவடியில் பத்திரிகையாளர்கள் கட்டணமின்றி பயணிக்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் அறிவிக்கப் பட்ட நலத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் வாளுக்கு வேலி அம்பலத்திற்கு சிலை அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் நிறுவப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர் மாணிக்கம், நெற்குப்பை சேர்மன் பழனியப்பன், கூட்டமைப்பு தலைவர் மாணிக்கவாசகம், ஊராட்சி தலைவர் பாஸ்கரன், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் நாகராசன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் விஜய பாஸ்கர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராமங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும்.
    • கலெக்டர் ஆஷா அஜித் வலியுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சிக்குட்பட்ட காராம்போடை கிராமத்தில் சுதந்திரதினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் சூரியகலா தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு பார்வையாளராக கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    நாடு முழுவதும் சுதந்திர திருநாள் அமுதபெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது முன்னோர்கள் உயிர்தியாகம் செய்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ள னர். அதனடிப்படையில் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதி, விஞ்ஞானம் ஆகியவைகளில் வளர்ச்சி பெற்று, நாம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டி ருக்கிறோம்.

    ஒவ்வொரு கிராமங்க ளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நடை பெற்று வரும் பணிகள், வரவு-செலவு கணக்குகள் ஆகியவைக் குறித்து பொது மக்கள் கண்காணிப்பது ஒவ்வொருவரின் கடமை யாகும். மேலும், 15-வது நிதிக்குழு மான்யம், ஊரக சொந்த நிதி ஆகியவைகளை கிராமங்களின் வளர்ச்சிக்கு முறையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படையானது கல்வியாகும். அதனை மாணவர்களுக்கு அளித்திடும் வகையில் தமிழக அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இடைநிற்றலின்றி பள்ளிக்கு அனுப்பி, உயர்படிப்புகளை பயில்வதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவ டிக்கைகள் அனைவரின் பங்கு இருந்திடல் வேண்டும்.

    மேலும் கிராமப் பறங்களில் கழிப்பறைகளை மட்டுமே முறையாகப் பயன்படுத்தி, சுகாதா ரத்தினை பொதுமக்கள் பேணிக்காத்திட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சிவராமன், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) பழனிக்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு பெருந் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரலோக அன்னை ஆலய தேர் பவனி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் பெரியநாயகிபுரம் கிராமத்தில் பரலோக அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி நடந்தது. பங்கு தந்தை அருள்ஜோதி மைக்கேல் தலைமை வகித்தார். கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் அன்னைக்கு ஜெப நிகழ்ச்சி, திருப்பலி நடந்தது. நிறைவு நாளில் தேர் பவனி நடந்தது.

    திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • திருப்பத்தூர் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற் குட்பட்ட மகிபாலன் பட்டியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கனியன் பூங்குன்றனாருக்கு மணி மண்டபம் அமைத்தல், அவரது பெயரில் பொது நூலகம் அமைத்தல் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    கொன்னத்தான்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் அழகுபாண்டியன் தலைமை தாங்கினார். சமுதாயக்கூடம் கட்டுவது, கொன்னத்தான் கண்மாயில் தடுப்பணை கட்ட வேண்டும். எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    துவார் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அவசரகால தேவையை கருதி காட்டு வழிப்பாதையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும். பூலாம்பட்டியில் அங்கன்வாடி மையம், நீர்த்தேக்க மேல்தொ ட்டியை இடித்து புதிதாக கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது.

    இதில் யூனியன் உதவியாளர் சதீஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    விழாவில் நகர செய லாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் செல்வமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இளங்கோ, நகர துணை செயலாளர் மோகன், ஷாஜஹான், நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, பழனி, மாரிமுத்து, வட்ட செயலாளர் முருகன், மாவட்ட பாசறை பொரு ளாளர் சரவணன், மின்வா ரிய திட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் சதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெற்குப்பையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. பேரூராட்சி சேர்மன் பழனியப்பன் (பொறுப்பு) தலைமை வகித்தார்.

    இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப் பட்டனர். தூய்மை பணியா ளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. பின்னர் பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

    • சிங்கம்புணரி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையா ளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரில் கொக்கன் கருப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிக்களரி விழாவை முன்னிட்டு 27-வது ஆண்டாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 31 மாடுகள் பங்கேற்றன. பெரியமாடுகளுக்கு 8 மைல் தூரமும், சின்னமாடுகளுக்கு 6 மைல் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கொக்கன் கருப்பர் கோவிலில் இருந்து பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளில் போட்டி நடந்தது. பெரிய மாடுகள் எஸ்.வி.மங்கலம் வரையிலும், சின்ன மாடுகள் மருதிப்பட்டி வரையிலும் சென்று மீண்டும் காளாப்பூர் கொக்கன் கருப்பர் கோவிலை வந்தடைந்தது. ஆயிரக்கணக்காேனார் சாலையின் இருபுறமும் நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

    2 பிரிவுகளிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையா ளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு தேவகோட்டை தியாகிகள் பூங்கா மற்றும் நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
    • போலீஸ் நிலையமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே, நகராட்சி அலுவலகம் எதிரே 1936-ம் ஆண்டு அப்போதைய மாநில கவர்னரால் பூங்கா திறக்கப்பட்டது. 1942 ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றம் முன்பாக ஆகஸ்ட் புரட்சி நடைபெற்றது. அப்போது ஆங்கிலேயர்கள் 75 பேரை சுட்டுக் கொன்றனர். மேலும் 112 நபர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் 1947-ம் ஆண்டு பூங்காவில் தியாகிகள் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

    ஜாலியன் வாலாபாக் அடுத்து சுதந்திர போராட்டத்திற்காக அதிக நபர்கள் உயிர் நீத்த இடம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது தியாகிகள் பூங்கா, நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நகர் போலீஸ் நிலையமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    • தேவகோட்டையில் இருந்து மதுரை, திருச்சிக்கு செல்ல பஸ்கள் இயக்க வேண்டும்.
    • நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் இருந்து மதுரை, திருச்சி மற்றும் வெளியூர்களுக்கு செல்ல அரசுபஸ்கள் இயக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கோரிக்கை மனுவை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேவகோட்டை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் தேவைகளுக்கு திருச்சி, மதுரை போன்ற நகரங்க ளுக்கு சென்று வருகின்றனர்.

    தேவகோட்டையில் இருந்து பஸ் வசதிகளையே மட்டுமே உள்ளதால் பிற நகரங்களுக்கு செல்ல அதிக நேரம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாததால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

    தற்பொழுது தேவ கோட்டையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்பட்டு பைபாஸ் சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளதால் அவ்வழியாக மதுரை மற்றும் திருச்சிக்கு பஸ்கள் இயக்கப்பட்டால் பயண நேரங்களும் குறைவ தோடு பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கு ஏதுவாக அமையும்.

    மதுரை, திருச்சி புறநகரங்களுக்கு தேவகோட்டையில் இருந்து பஸ்கள் பைபாஸ் சாலை வழியாக இயக்கப்பட்டால் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகளிர் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
    • கூட்டுறவு கள மேலாளர் செல்வராஜ், சரக மேற்பார்வையாளர் கருப்புசாமி, ர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் நெல்முடிக்கரை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் குழுவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கி மகளிர் குழுவி னருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 10 மகளிர் குழுக்களை சேர்ந்த வர்களுக்கு ரூ.10 லட்சதுக்கான காசோலைகளை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு கள மேலாளர் செல்வராஜ், சரக மேற்பார்வையாளர் கருப்புசாமி, செயலர் துரை, காசாளர் பழனிச்சாமி மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சொர்ணவாரீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
    • சொர்ணவாரீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது மேலெநெட்டூர். இங்கு சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சொர்ணவாரீஸ்வரர், சாந்தநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூச்சொரிதல் விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூ பந்தல் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    விழாவில் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து சப்பரத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது. இதேபோல் குறிச்சி வழிவிடு பெரிய நாச்சி அம்மன், சிவகங்கை ரோட்டில் உள்ள தயாபுரம் முத்துமாரியம்மன், கன்னார்தெரு மாரியம்மன், சுந்தரபுரம் விநாயகர் ஆகிய கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மானாமதுரை பஞ்சபூதேஸ்வரத்தில் உள்ள மகா பஞ்ச முக பிரித்தியங்கிராதேவி கோவிலில் உள்ள குண்டு முத்து மாரியம்மனுக்கு பக்தர்கள் கூழ் காய்ச்சி வழிபடும் நிகழ்ச்சி நடந்தது.

    ×