மாட்டு வண்டி பந்தயம்

சிங்கம்புணரி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையா ளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காைளகள்.
மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காைளகள்.
Published on

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரில் கொக்கன் கருப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிக்களரி விழாவை முன்னிட்டு 27-வது ஆண்டாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 31 மாடுகள் பங்கேற்றன. பெரியமாடுகளுக்கு 8 மைல் தூரமும், சின்னமாடுகளுக்கு 6 மைல் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கொக்கன் கருப்பர் கோவிலில் இருந்து பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளில் போட்டி நடந்தது. பெரிய மாடுகள் எஸ்.வி.மங்கலம் வரையிலும், சின்ன மாடுகள் மருதிப்பட்டி வரையிலும் சென்று மீண்டும் காளாப்பூர் கொக்கன் கருப்பர் கோவிலை வந்தடைந்தது. ஆயிரக்கணக்காேனார் சாலையின் இருபுறமும் நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

2 பிரிவுகளிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையா ளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com