என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம்
மதுரை, திருச்சிக்கு செல்ல பஸ்கள் இயக்க வேண்டும்-நகர்மன்ற தலைவர் கோரிக்கை
- தேவகோட்டையில் இருந்து மதுரை, திருச்சிக்கு செல்ல பஸ்கள் இயக்க வேண்டும்.
- நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவகோட்டை
தேவகோட்டை நகரில் இருந்து மதுரை, திருச்சி மற்றும் வெளியூர்களுக்கு செல்ல அரசுபஸ்கள் இயக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கோரிக்கை மனுவை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தேவகோட்டை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை மற்றும் தேவைகளுக்கு திருச்சி, மதுரை போன்ற நகரங்க ளுக்கு சென்று வருகின்றனர்.
தேவகோட்டையில் இருந்து பஸ் வசதிகளையே மட்டுமே உள்ளதால் பிற நகரங்களுக்கு செல்ல அதிக நேரம் ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாததால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
தற்பொழுது தேவ கோட்டையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்பட்டு பைபாஸ் சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளதால் அவ்வழியாக மதுரை மற்றும் திருச்சிக்கு பஸ்கள் இயக்கப்பட்டால் பயண நேரங்களும் குறைவ தோடு பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கு ஏதுவாக அமையும்.
மதுரை, திருச்சி புறநகரங்களுக்கு தேவகோட்டையில் இருந்து பஸ்கள் பைபாஸ் சாலை வழியாக இயக்கப்பட்டால் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






