கிராம சபை கூட்டங்கள்

திருப்பத்தூர் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள் நடந்தது. 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிராம சபை கூட்டங்கள்
Published on

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற் குட்பட்ட மகிபாலன் பட்டியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கனியன் பூங்குன்றனாருக்கு மணி மண்டபம் அமைத்தல், அவரது பெயரில் பொது நூலகம் அமைத்தல் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

கொன்னத்தான்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் அழகுபாண்டியன் தலைமை தாங்கினார். சமுதாயக்கூடம் கட்டுவது, கொன்னத்தான் கண்மாயில் தடுப்பணை கட்ட வேண்டும். எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

துவார் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அவசரகால தேவையை கருதி காட்டு வழிப்பாதையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும். பூலாம்பட்டியில் அங்கன்வாடி மையம், நீர்த்தேக்க மேல்தொ ட்டியை இடித்து புதிதாக கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது.

இதில் யூனியன் உதவியாளர் சதீஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com