என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • வீடு புகுந்து தொழிலதிபரை வெட்டினர்.
    • முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் கே.கே. நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் செல்வராஜ் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    முகமூடி கொள்ளையர்கள்

    கடந்த மாதம் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் செல்வராஜ் கொள்ளையர்களை பார்த்தவுடன் கூச்சலிடவே பொதுமக்கள் அங்கு கூடினர். இதை கண்ட கொள்ளையர்கள் அங்கி ருந்து தப்பிச் சென்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப் பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் 2-வது முறையாக அப்பகுதிக்கு இரவு காரில் வந்த கொள்ளை யர்கள் காளையார் கோயில் பத்திரப்பதிவு அலுவல கத்தில் வேலை பார்க்கும் காமராஜ் என்பவர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தனர்.

    அரிவாள் வெட்டு

    மேலும் தொழிலதிபர் செல்வராஜ் வீட்டுக்குள் மீண்டும் புகுந்த கொள்ளையர்கள் சி.சி.டி.வி. காமிராக்களின் வயர்களை துண்டித்தனர். தொடர்ந்து அவர்கள் செல்வராஜின் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து தொழிலதிபர் செல்வராஜ் காளையார்கோவில் காவல் நிலையத்தில் சி.சி.டி.வி. காட்சிகளுடன் புகார் செய்தார். ஆனால் இதுவரை காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

    பொது மக்கள் அச்சம்

    மேலும் இரவில் ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.நள்ளிரவில் வீடுபுகுந்து தாக்கிய முகமூடி கொள்ளை கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உடனடி நடவடிக்கை எடுத்து முகமூடி கொள்ளை யர்களை பிடித்து மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக் கையாக உள்ளது.

    • மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலில் சகஸ்ர சண்டி யாகம் நடந்தது.
    • நாளை புத்திர காமேஷ்டி யாகம் நடக்கிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வேதிய ரேந்தல் விலக்கு பகுதியில் பிரசித்தி பெற்ற மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இங்கு 24 மணிநேரமும் அன்னதானம் நடைபெறும். இங்கு ஆண்டு தோறும் பிரித்தியங்கிரா யாக பெருவிழா நடைபெறும்.

    அதன்படி 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சகஸ்ர சண்டி யாகம் விழா கடந்த 16-ந்தேதி மாலை தொடங்கி யது. இந்த யாகம் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது. அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடைபெறும் இந்த யாகத்தின் தொடக்கமாக கோயில் யாகசாலையில் புனிதநீர் கலசங்கள் வைத்து மகா கணபதி ஹோமம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து இரவு மகா பஞ்சமுக பிரத்யங்கிரா ஹோமம் நடத்தப்பட்டது. தஞ்சை குருஜீ கணபதி சுப்ரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் ஏராளமான வேதவிற்பன்னர்கள் யாகத்தை நடத்தினர்.

    யாகத்தின் 2-வது நாளாக வியாழக்கிழமை ருணமோஷன கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவபலி மண்டல பூஜை நடைபெற்றது.தொடர்ந்து 20-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை பெறும் இந்த யாகத்தின்போது கோவில் யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ள யாக குண்டங்களில் விவசாயம் செழிக்கவும் அனைவரது குடும்பங்களிலும் சங்கடங்கள், துன்புங்கள் விலகி மகிழ்ச்சி, செல்வம், மங்களம். ஐஸ்வர்யம் உண்டாகவும் பல்வேறு ஹோமங்கள் நடத்தப்படுகிறது. குழந்தை வரம் வேண்டும் தம்பதியினருக்காக நாளை (19-ந்தேதி) புத்திர காமேஷ்டி யாகம் நடைபெறுகிறது.

    யாகத்தின் கடைசி நாளான 20-ந்தேதி காலை சகஸ்ர சண்டி யாகம் தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது. அதன்பின் பூர்ணாஹூதியாகி கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு கலசநீரால் பாதசமர்ப்பணம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. யாகத்தை கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து உள்ளனர்.

    இவர்களுக்கு கோவிலில் தங்க இடம், 24 மணி நேரமும் அன்னதானத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மதுரை, மானா மதுரை ஆகிய இடங்களில் இருந்து பிரத்யங்கிரா தேவி கோவிலுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    யாகத்துக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக பிரத்யங்கிரா வேததர்ம ஷேத்ரா டிரஸ்ட் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள், மாதாஜி ஆகியோர் செய்துள்ளனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப் பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் பயின்று ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்களுக்கு மாதம்

    ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு (BE போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும்.

    தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்க னவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி களுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளை ஞர்கள் பூர்த்தி செய்து வேலை நாட்களில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.

    • ரூ.47 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • கலெக்டர் ஆஷா அஜித் களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    பி்னனர் கலெக்டர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் பணிகள் தொடர்பாகவும்இ பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும் மேம்படுத்தும் விதமாகவும்இ நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாகஇ தொடர்ந்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சருகணியாறு வடிநிலக்கோட்டத்தின் மூலம் அன்னியேந்தல் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டிக்குளம் பகுதியில் ரூ.3060 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டும் பணிகள் தொடர்பாகவும், ரூ.1686.37 லட்சம் மதிப்பீட்டில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு பணிகளை, சிவகங்கையில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் அங்குள்ள நடைபெற்ற ஏலம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள், செயல்படுத்தப்பட்டு வரும் சாலைப்பணி, ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டில் மறவமங்கலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் ஊரணி, மேலமருங்கூர் கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் ஆகியன தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் காரைக்குடியில் நகராட்சிஇ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள்இ மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணிகளையும்இ கழனிவாசலில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மகளிர் கல்லூரி மாணவிகள் விடுதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில்இ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், செயற்பொறியாளர் (சருகனியாறு வடிநிலக்கோட்டம்) பாரதிதாசன், துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தமிழ்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டப்பட்டது.
    • கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார்.

    மானாமதுரை

    இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக சென்னை, ஓட்டல் இந்தியன் பேலஸ், உரிமையாளர், அல்ஹாஜ் செய்யது இப்ராகிம் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி தேசிய மாணவர்படை மாணவர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். இளையான்குடி, ஹாஜி இஸ்மாயில் கனி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் ராமநாதன் பேசினார். நிகழ்வில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக கல்லூரி துணைமுதல்வர் ஜகாங்கிர் நன்றி கூறினார். நிகழ்வினை தமிழத்துறை உதவிபேராசிரியர்அப்துல் ரஹீம் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலபணிதிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். கல்லூரி ஆட்சிக்குழு பொருளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அப்துல் சலீம், ஹாஜி சிராஜூதீன், சுயநிதி பாடபிரிவு இயக்குனர் சபீனுல்லாஹ்கான், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி, முதல்வர் முஹம்மது முஸ்தபா உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், பேராசிரி யர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

    • மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனார் நினைவு தூண் விரைவில் திறக்கப்படும்.
    • இந்த தகவலை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் சங்க கால புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பிரபலமான வரிகளால் அறியப்படுபவர் கணியன் பூங்குன்றனார்.

    இவர் மகிபாலன்பட்டி கிராமத்தில் வாழ்ந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இந்தநிலையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கணியன் பூங்குன்ற னாருக்கு மகிபாலன் பட்டியில் ரூ.21.02 லட்சம் மதிப்பீட்டில் நினைவுத்தூண் அமைக்கும் பணி முடிந்துள் ளது.

    இந்த நிலையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வ ராஜ், கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோர் முடிவுற்ற பணிகளை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மகிபாலன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு ெகாண்டு வரப்படும். சுங்கச்சாவடியில் பத்திரிகையாளர்கள் கட்டணமின்றி பயணிக்க மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

    பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் அறிவிக்கப் பட்ட நலத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் வாளுக்கு வேலி அம்பலத்திற்கு சிலை அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் நிறுவப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர் மாணிக்கம், நெற்குப்பை சேர்மன் பழனியப்பன், கூட்டமைப்பு தலைவர் மாணிக்கவாசகம், ஊராட்சி தலைவர் பாஸ்கரன், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் நாகராசன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் விஜய பாஸ்கர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராமங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும்.
    • கலெக்டர் ஆஷா அஜித் வலியுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் குமாரபட்டி ஊராட்சிக்குட்பட்ட காராம்போடை கிராமத்தில் சுதந்திரதினவிழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் சூரியகலா தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு பார்வையாளராக கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    நாடு முழுவதும் சுதந்திர திருநாள் அமுதபெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது முன்னோர்கள் உயிர்தியாகம் செய்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ள னர். அதனடிப்படையில் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதி, விஞ்ஞானம் ஆகியவைகளில் வளர்ச்சி பெற்று, நாம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக் கொண்டி ருக்கிறோம்.

    ஒவ்வொரு கிராமங்க ளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நடை பெற்று வரும் பணிகள், வரவு-செலவு கணக்குகள் ஆகியவைக் குறித்து பொது மக்கள் கண்காணிப்பது ஒவ்வொருவரின் கடமை யாகும். மேலும், 15-வது நிதிக்குழு மான்யம், ஊரக சொந்த நிதி ஆகியவைகளை கிராமங்களின் வளர்ச்சிக்கு முறையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படையானது கல்வியாகும். அதனை மாணவர்களுக்கு அளித்திடும் வகையில் தமிழக அரசால் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இடைநிற்றலின்றி பள்ளிக்கு அனுப்பி, உயர்படிப்புகளை பயில்வதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவ டிக்கைகள் அனைவரின் பங்கு இருந்திடல் வேண்டும்.

    மேலும் கிராமப் பறங்களில் கழிப்பறைகளை மட்டுமே முறையாகப் பயன்படுத்தி, சுகாதா ரத்தினை பொதுமக்கள் பேணிக்காத்திட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சிவராமன், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) பழனிக்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு பெருந் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரலோக அன்னை ஆலய தேர் பவனி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் பெரியநாயகிபுரம் கிராமத்தில் பரலோக அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி நடந்தது. பங்கு தந்தை அருள்ஜோதி மைக்கேல் தலைமை வகித்தார். கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் அன்னைக்கு ஜெப நிகழ்ச்சி, திருப்பலி நடந்தது. நிறைவு நாளில் தேர் பவனி நடந்தது.

    திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • திருப்பத்தூர் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற் குட்பட்ட மகிபாலன் பட்டியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கனியன் பூங்குன்றனாருக்கு மணி மண்டபம் அமைத்தல், அவரது பெயரில் பொது நூலகம் அமைத்தல் உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    கொன்னத்தான்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் அழகுபாண்டியன் தலைமை தாங்கினார். சமுதாயக்கூடம் கட்டுவது, கொன்னத்தான் கண்மாயில் தடுப்பணை கட்ட வேண்டும். எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    துவார் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அவசரகால தேவையை கருதி காட்டு வழிப்பாதையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும். பூலாம்பட்டியில் அங்கன்வாடி மையம், நீர்த்தேக்க மேல்தொ ட்டியை இடித்து புதிதாக கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது.

    இதில் யூனியன் உதவியாளர் சதீஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    விழாவில் நகர செய லாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் செல்வமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இளங்கோ, நகர துணை செயலாளர் மோகன், ஷாஜஹான், நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, பழனி, மாரிமுத்து, வட்ட செயலாளர் முருகன், மாவட்ட பாசறை பொரு ளாளர் சரவணன், மின்வா ரிய திட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் சதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெற்குப்பையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. பேரூராட்சி சேர்மன் பழனியப்பன் (பொறுப்பு) தலைமை வகித்தார்.

    இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப் பட்டனர். தூய்மை பணியா ளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. பின்னர் பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

    • சிங்கம்புணரி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையா ளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரில் கொக்கன் கருப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிக்களரி விழாவை முன்னிட்டு 27-வது ஆண்டாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 31 மாடுகள் பங்கேற்றன. பெரியமாடுகளுக்கு 8 மைல் தூரமும், சின்னமாடுகளுக்கு 6 மைல் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கொக்கன் கருப்பர் கோவிலில் இருந்து பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளில் போட்டி நடந்தது. பெரிய மாடுகள் எஸ்.வி.மங்கலம் வரையிலும், சின்ன மாடுகள் மருதிப்பட்டி வரையிலும் சென்று மீண்டும் காளாப்பூர் கொக்கன் கருப்பர் கோவிலை வந்தடைந்தது. ஆயிரக்கணக்காேனார் சாலையின் இருபுறமும் நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

    2 பிரிவுகளிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையா ளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    ×