search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.47 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
    X

    சிவகங்கை மருதுபாண்டியர் பெணகள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு குடற்குபுழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர லால்வேனா பார்வையிட்டார். அருகில் கலெக்டர் ஆஷா அஜீத், விஜய்சந்திரன் உள்ளார்.

    ரூ.47 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்

    • ரூ.47 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • கலெக்டர் ஆஷா அஜித் களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    பி்னனர் கலெக்டர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் பணிகள் தொடர்பாகவும்இ பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும் மேம்படுத்தும் விதமாகவும்இ நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாகஇ தொடர்ந்து களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சருகணியாறு வடிநிலக்கோட்டத்தின் மூலம் அன்னியேந்தல் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டிக்குளம் பகுதியில் ரூ.3060 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு கட்டும் பணிகள் தொடர்பாகவும், ரூ.1686.37 லட்சம் மதிப்பீட்டில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு பணிகளை, சிவகங்கையில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் அங்குள்ள நடைபெற்ற ஏலம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள், செயல்படுத்தப்பட்டு வரும் சாலைப்பணி, ரூ.13.20 லட்சம் மதிப்பீட்டில் மறவமங்கலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் ஊரணி, மேலமருங்கூர் கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் ஆகியன தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் காரைக்குடியில் நகராட்சிஇ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள்இ மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணிகளையும்இ கழனிவாசலில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மகளிர் கல்லூரி மாணவிகள் விடுதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில்இ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், செயற்பொறியாளர் (சருகனியாறு வடிநிலக்கோட்டம்) பாரதிதாசன், துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தமிழ்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×